அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனிமனித சுயமரியாதையை பறிக்கும் "இலவசம்': பச்சமுத்து

Updated : மே 30, 2010 | Added : மே 29, 2010 | கருத்துகள் (32)
Share
Advertisement
 தனிமனித சுயமரியாதை,இலவசங்கள்,பச்சமுத்து, self respect, pari vendar

திருச்சி: ""இலவசம் நாட்டில் தனிமனித சுயமரியாதையை பறித்து, தன்மானத்தை இழக்கச் செய்கிறது. மக்கள் வரிப்பணத்தை இதுபோன்ற இலவசங்களுக்கு செலவிடாமல், விவசாயம், தொழில் ஆகியவற்றை பெருக்க பயன்படுத்த வேண்டும்,'' என, இந்திய ஜனநாயகக்கட்சி நிறுவனர் பச்சமுத்து கூறினார்.


இந்திய ஜனநாயகக்கட்சியின் முதல் தேசிய மாநாடு திருச்சி அடுத்துள்ள பஞ்சப்பூரில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் பச்சமுத்து கட்சிக் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கிவைத்தார். மாநாட்டில் கட்சித்தலைவர் கோவைத்தம்பி, பொருளாளர் ராஜன், பொதுச்செயலாளர் ஜெயசீலன், அமைப்புச் செயலாளர் வெங்கடேசன், மகளிரணி அமைப்பாளர் லீமாரோஸ் மார்ட்டின், மாநில இளைஞரணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் நந்தினி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., லோகாம்பாள், திருச்சி மாவட்ட தலைவர் தங்கவேல், மாநில நிர்வாகிகள் முத்து உடையார், டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மாநாடு அரங்கத்தில் வைக்கப்பட்ட ஃபோட்டோ கண்காட்சியை கட்சியின் நிறுவனர் பச்சமுத்து திறந்து வைத்தார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மகளிரணி அமைப்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக மங்கள இசையும், பின்னர் பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, நடிகர் தாமுவின் மிமிக்ரி என மாநாட்டு நிகழ்ச்சிகள் மதியம் வரை களை கட்டியது.


முன்னதாக மாநாட்டை துவக்கிவைத்த பின் இந்திய ஜனநாயகக்கட்சி நிறுவனர் பச்சமுத்து நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய ஜனநாயகக்கட்சியின் முதல் தேசிய மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். வெளிமாநிலங்களிலிருந்து மாணவ, மாணவிகள் மட்டும் 50 ஆயிரம் பேர் வருகின்றனர். நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே கட்சி துவங்கியுள்ளோம். நாட்டில் நடக்கும் எந்த தேர்தலிலும் உண்மையான ஜனநாயகம் இல்லை. அரசியலில் புது நாகரீகத்தை உயர்பெற வைப்பதும், உருப்பெற செய்வதும் எங்களின் நோக்கம். கட்சி வேறு, உறவு என்பதை புரிந்துள்ளோம். ஆகையால், எங்கள் கட்சியினர் எந்த கட்சியினரையும் சந்திப்பர். இந்திய ஜனநாயகக்கட்சி பெண்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு முழுக்க, முழுக்க பாடுபடும்.


"அரசியல் என்றாலே அது நல்லவர்களுக்கு ஆனதல்ல' என்ற நிலையை ஐ.ஜெ.கே., மாற்றி, அரசியல் என்பது மணம் வீசும் மல்லிகைத் தோட்டம் என்ற நிலையை உருவாக்குவோம். கட்சியில் ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் எங்கள் கட்சி பின்பற்றும். உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்த தேர்தல் என்றாலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் 50:50 என்ற அளவில் வாய்ப்பு வழங்கப்படும். ஐ.ஜெ.கே., எந்தக்கட்சிக்கும் எதிரி அல்ல. நட்புறவுடன் அவர்களின் கொள்கைகளை எதிர்கொள்வோம். அரசியலில் மாற்றம் தேவை. மாற்றம் தான் நிரந்தரம் என்ற அடிப்படையில் வரும் 2011ல் நடக்கும் தேர்தலில் ஐ.ஜெ.கே., போட்டியிட்டு தனது சக்தியை நிரூபிக்கும். கட்சியின் மாநாடு முடிந்த பின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது குறித்து முடிவு எடுப்போம்.


விவசாயத்தில் விஞ்ஞானம், படிப்பில் உயர்தரம், மேம்பட்ட மருத்துவம், தனிமனித வருமான உயர்வு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற கொள்கைகள் அடிப்படையிலும், இந்திய இறையாண்மையை காப்பதிலும் இந்திய ஜனநாயகக்கட்சி முன்னோடியாக இருக்கும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருங்கால இந்தியாவை புதிய பொலிவுடனும், வளத்துடனும், மனிதாபிமானத்துடனும் அரசியலை எடுத்துச் செல்லும் வகையில் ஐ.ஜெ.கே., செயல்படும். ஐ.ஜெ.கே., தேசத்தின் திருப்புமுனை, மாற்றத்தின் ஏவுகணை என்ற கட்சியின் துவக்கவிழா பாடல் தொகுப்பில் எழுதப்பட்டுள்ளது. எனக்கு அரசியல் முன்னோடி என்று யாரும் கிடையாது. கல்வியாளர் என்ற முறையில் நான் தமிழகத்திலும், இந்தியாவிலும் நன்கு அறிமுகமானவன். அந்த வகையில் அரசியல் சூழ்நிலைகளை நன்றாக அறிந்துள்ளேன். என் அளவுக்கு மனத்தூய்மை, உள்ளஉறுதி, படித்த, உழைப்பை மதிக்கும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் எந்த தலைவரையும் நான் சந்தித்தது இல்லை.


எதிர்காலத்தில் கட்சியின் சார்பில் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். இலவசம் நாட்டில் தனிமனித சுயமரியாதையை பறித்து, தன்மானத்தை இழக்கச் செய்கிறது. மக்கள் வரிப்பணத்தை இதுபோன்ற இலவசங்களுக்கு செலவிடாமல், விவசாயம், தொழில் ஆகியவற்றை பெருக்க பயன்படுத்த வேண்டும். இலவசம் காலப்போக்கில் மக்களை சோம்பேறிகளாக்கிவிடும். ஆகையால் இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அவலநிலை மாறவேண்டும். கட்சி இருப்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில் சிறு, சிறு பிரச்னைகளுக்கு கூட பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. பிரச்னைகளை ஊடகங்கள் மூலம் அரசுக்கு தெரியப்படுத்துவோம். நாட்டில் உள்ள அனைவருக்கும் காற்றும், நீரும் போல கல்வியும் அவசியம். அனைவருக்கும் கல்வி என்ற நிலையை கொண்டு வர ஐ.ஜெ.கே., பாடுபடும். மாநில கட்சியாக இருந்து கொண்டு பிரச்னைகளை தீர்க்க முடியாது என்பதால் தான் தேசிய கட்சியாக துவக்கியுள்ளோம். தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். இப்போதுள்ள அரசியல்வாதிகள் மனதை தேற்றிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பீட்டர் - theni.tsinthalai,இந்தியா
05-ஜூன்-201016:16:10 IST Report Abuse
 பீட்டர் குடும்ப அரசியலை ஒழித்து கல்வி அரசியலை கொண்டு வந்த வேந்தருக்கு வாழ்த்துகள் .........
Rate this:
Cancel
பீட்டர் - theni-sinthalai,இந்தியா
05-ஜூன்-201016:10:03 IST Report Abuse
 பீட்டர் வாழ்க ஐ ஜே கே
Rate this:
Cancel
krishnaamma - Bangalore,இந்தியா
30-மே-201023:33:28 IST Report Abuse
 krishnaamma தன்மானத்தை விட்டு கை ஏந்துபவர்கள் தான் தமிழ் நாடு பூரா இருக்கே ! கருமம் !! வெட்கம் கெட்டவர்கள் !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X