பொங்கலில் பொங்கிட முடிவு: அழகிரிக்கு விஜயகாந்த் பதிலடி

Updated : ஜன 10, 2014 | Added : ஜன 09, 2014 | கருத்துகள் (33)
Share
Advertisement
'தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., கூட்டணி சேர்ந்தால் உருப்படாது'என, தி.மு.க., தென்மண்டலஅமைப்பு செயலர், அழகிரிஅளித்த பேட்டிக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், வரும், 12ம் தேதி, பதில் அளிப்பார் என, அவரது கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., பெரிதும் விரும்புகிறது.'தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தால் மகிழ்ச்சி' என, கருணாநிதி
Vijayakanth, alagiri, Pongal festival,பொங்கல், அழகிரி, விஜயகாந்த் பதிலடி

'தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., கூட்டணி சேர்ந்தால் உருப்படாது'என, தி.மு.க., தென்மண்டலஅமைப்பு செயலர், அழகிரிஅளித்த பேட்டிக்கு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், வரும், 12ம் தேதி, பதில் அளிப்பார் என, அவரது கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., பெரிதும் விரும்புகிறது.'தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தால் மகிழ்ச்சி' என, கருணாநிதி கூறி வருகிறார்.ஆனால், கடந்த, 5ம் தேதி நடந்த, தே.மு.தி.க., பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 'தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட ரணங்கள் இன்னும் ஆறவில்லை' என்று, மிகவும் ஆதங்கப்பட்டார். பிரேமலதாவின் கருத்துக்கு, தே.மு.தி.க.,வில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.இந்த நேரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, தி.மு.க., தென்மண்டலஅமைப்பு செயலர் அழகிரி, 'விஜயகாந்திற்கு அரசியல் தெரியாது. அவரது கட்சியுடன், கூட்டணி சேர்ந்தால், தி.மு.க., உருப்படாது' என, தெரிவித்தார்.

அழகிரியின் இந்த பேட்டி, தி.மு.க.,வுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியது. 'வெண்ணெய் திரண்டு வரும் வேளையில், பானையை உடைத்த கதையாக,தி.மு.க., - தே.மு.தி.க., இடையேகூட்டணி ஏற்படுவது, அழகிரிபேட்டியால், பாழ்பட்டு விடுமோ' என, அஞ்சினர். அதனால், அழகிரியின் கருத்துக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.அதேநேரத்தில், அழகிரியின்கருத்துக்கு, தே.மு.தி.க., தரப்பில், யாரும் பதில் அளிக்கவில்லை.

இதுபற்றி,தே.மு.தி.க., நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் றியதாவது:தே.மு.தி.க., சார்பில், வரும், 12ம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாட திட்டமிடப்பட்டுஉள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள, கட்சி அலுவலகத்தில், இந்த விழா நடக்கும். அப்போது, அரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் உள்ளிட்ட பொருட்கள், பொதுமக்களுக்கு விஜயகாந்த் இலவசமாக வழங்க உள்ளார். அதன்பின், விழாவில், சிறப்புரையாற்ற உள்ள விஜயகாந்த், அழகிரியின்கருத்துக்கு சூடான பதில் அளிப்பார்.இவ்வாறு, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Rangaraj - Erode,இந்தியா
09-ஜன-201422:52:18 IST Report Abuse
Raju Rangaraj சந்தன பாண்டியனை வைத்து எடுக்கப்போகும் திரைப்படத்தின் முழு செலவையும் திமுகவை ஏற்க சொல்லவும். உங்கள் மகனுக்கும் வாழ்வு சிறக்கும், குடும்பமும் சிறக்கும் பெரிய செலவாளி டைரக்டார் சங்கரை புக் செய்து படம் தயாரிக்கவும். இந்த கண்டிசனுக்கு ஒப்புக்கொண்டால் கூட்டணி வைக்கலாம் என்ன நான் சொல்றது ......?
Rate this:
Cancel
gmk1959 - chennai,இந்தியா
09-ஜன-201421:02:56 IST Report Abuse
gmk1959 கேப்டன் தி மு க தான் இரண்டு பேருக்கும் டண்டனகா தான்
Rate this:
Cancel
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
09-ஜன-201418:57:33 IST Report Abuse
தலைநகர தமிழன் ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X