முதல்வர் ஜெயலலிதாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் கவுன்சிலர்கள்| Councillors put block CM jayalalithaa's dream | Dinamalar

முதல்வர் ஜெயலலிதாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் கவுன்சிலர்கள்

Updated : ஜன 09, 2014 | Added : ஜன 09, 2014 | கருத்துகள் (76)
Share
பெரும்பாலான மாவட்டங்களில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, உள்ளாட்சி பிரதிநிதிகளின செயல்பாடு, லோக்சபா தேர்தலில், 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற, முதல்வரின் கனவுக்கு, முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.அ.தி.மு.க., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதோடு, உள்ளாட்சி பதவிகளிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமாகவே, ஆளும் கட்சியினர் உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அனைத்து
முதல்வர் ஜெயலலிதா, கனவு,முட்டுக்கட்டை, கவுன்சிலர்கள்

பெரும்பாலான மாவட்டங்களில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, உள்ளாட்சி பிரதிநிதிகளின செயல்பாடு, லோக்சபா தேர்தலில், 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற, முதல்வரின் கனவுக்கு, முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.

அ.தி.மு.க., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதோடு, உள்ளாட்சி பதவிகளிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமாகவே, ஆளும் கட்சியினர் உள்ளனர். கூட்டுறவு சங்கங்
களிலும், அனைத்து பதவிகளிலும், அ.தி.மு.க., வினரே உள்ளனர்.மக்களிடம் அதிருப்தி ஏற்படாத வகையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது லோக்சபா கனவுக்கு, தடை ஏற்படுத்தும் வகையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு உள்ளது.பெரும்பாலான மாவட்டங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகள், வசூல் வேட்டையில் ஈடுபடுவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வீடு கட்ட, கல், மணல் போன்றவற்றை, ஒருவர் இறக்கினால் போதும், உடனே அந்தப் பகுதி கவுன்சிலர் வந்து விடுகிறார். அவருக்கு கப்பம் கட்டினால் மட்டுமே, கட்டுமான பணியை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், வார்டுகளில் நடக்கும் பணியிலும், கமிஷன் தர வேண்டும் என, அவர்கள் நிர்பந்தம் செய்கின்றனர்.பல மாவட்டங்களில், கவுன்சிலர்களுக்கும், உள்ளாட்சி தலைவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சியிலும், தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாநகராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி உட்பட, பல மாவட்டங்களிலும், இந்நிலை நீடிக்கிறது. பெரும்பாலான பிரச்னைகளுக்கு, கமிஷன் பிரிப்பதில் ஏற்படும் தகராறே காரணம் என, கூறப்படுகிறது.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:கவுன்சிலர்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து, வெற்றி பெற்றுள்ளனர். செலவழித்த தொகையை, ஐந்தாண்டுகளில், எடுத்து விட வேண்டும் என, துடிக்கின்றனர். தேர்தலின்போது, கவுன்சிலர்கள் செலவுக்கு, தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர், பணம் கொடுத்துள்ளார்.எனவே, அவர் கமிஷன் தொகையில், அதிகம் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். பிரச்னை வராமலிருக்க, குறிப்பிட்ட தொகையை எடுத்து, மாற்று கட்சி கவுன்சிலர்கள் உட்பட, அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்குகிறார். ஆளும் கட்சி கவுன்சிலர்கள், தங்களுக்கு கூடுதல் தொகை தர வேண்டும் என்கின்றனர். இதனால், பிரச்னை ஏற்படுகிறது.எனவே, கவுன்சிலர்களை கண்டித்து வைத்தால் மட்டுமே, லோக்சபா தேர்தலில் முதல்வர் கனவு நனவாக வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X