அரசியல் செய்தி

தமிழ்நாடு

2004ல் ஆதரவு; 2014ல் எதிர்ப்பா? ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி

Updated : ஜன 09, 2014 | Added : ஜன 09, 2014 | கருத்துகள் (108)
Advertisement
2004ல் ஆதரவு, 2014ல் எதிர்ப்பா, ஜெ., கருணாநிதி கேள்வி, Karunanidhi,Jayalalithaa,  sethu  samuthiram project


சென்னை : "எம்.ஜி.ஆர்., ஆதரித்த, சேது சமுத்திர திட்டத்தை, இப்போது, முதல்வர் ஜெயலலிதா மறுக்கிறாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், ஒரு மூத்த வழக்கறிஞரை, தமிழக அரசின் சார்பில் முறையாக, வாதாட வைக்க முன்வராத, அ.தி.மு.க., அரசு தான், "சேது சமுத்திர திட்டத்தை, எந்த வழியிலும் துவங்கக் கூடாது' என, மீண்டும், சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறது.கடந்த, 2004 லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "சேது சமுத்திரத் திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, மத்திய அரசை அ.தி.மு.க., வலியுறுத்தும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.தேர்தல் அறிக்கையில், "சேது சமுத்திரத் திட்டம் வேண்டும்' என, திட்டவட்டமாக கூறி விட்டு, தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார். அவர் அ.தி.மு.க.,வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா அல்லது எம்.ஜி.ஆர்., ஆதரித்த திட்டத்தை இப்போது மறுக்கிறாரா?இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKUMAR S - CHENNAI,இந்தியா
10-ஜன-201415:31:30 IST Report Abuse
MUTHUKUMAR S சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்கள் தமிழர்களுக்கு விரோதமானவர்களாகவே கருதப்படுவர். அதனை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே முன்னினின்று செய்வது வேதனையளிப்பதாகும்.
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
10-ஜன-201415:23:40 IST Report Abuse
MOHAMED GANI எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் பூர்த்தியடைந்து விட்டால், திமுகவுக்கு பெரும் பெயர் வந்து விடுமே என்ற காரணத்தால், இந்த திட்டத்துக்காக 829 கோடி செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கும் மூடுவிழா நடத்த அதிமுக அரசு காழ்ப்புணர்வோடு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது என்பதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
MURTHY - CHENNAI,இந்தியா
10-ஜன-201415:19:21 IST Report Abuse
MURTHY சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் முன்னேறும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 2005ம் ஆண்டு ஜூலையில் அடிக்கல் நாட்டப்பட்டு சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுவரை 829 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விருப்பமாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X