அ.தி.மு.க., மவுனம்: கம்யூனிஸ்ட்கள் பரிதவிப்பு: எப்போது அழைப்பு வரும் என காத்திருப்பு

Added : ஜன 09, 2014 | கருத்துகள் (10)
Share
Advertisement
கடந்த சட்டசபை தேர்தல் வரை, தே.மு.தி.க.,வை மேடைகளில், அநாகரீகமாக திட்டி தீர்த்த, தி.மு.க., இன்று, அக்கட்சி கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்கிறது. நாடு முழுவதும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு பெருகி வரும் ஆதரவால், தமிழகத்தில், இதுவரை தீண்டத்தகாத கட்சியாக இருந்த, பா.ஜ., உடன், கூட்டணி சேர, பல கட்சிகள் போட்டி போட்டு, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இப்படி ஒவ்வொரு
அ.தி.மு.க., மவுனம்: கம்யூனிஸ்ட்கள் பரிதவிப்பு: எப்போது அழைப்பு வரும் என காத்திருப்பு

கடந்த சட்டசபை தேர்தல் வரை, தே.மு.தி.க.,வை மேடைகளில், அநாகரீகமாக திட்டி தீர்த்த, தி.மு.க., இன்று, அக்கட்சி கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்கிறது. நாடு முழுவதும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு பெருகி வரும் ஆதரவால், தமிழகத்தில், இதுவரை தீண்டத்தகாத கட்சியாக இருந்த, பா.ஜ., உடன், கூட்டணி சேர, பல கட்சிகள் போட்டி போட்டு, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இப்படி ஒவ்வொரு கட்சியும், ஒரு இலக்கை நோக்கி, காய்களை நகர்த்தி வரும் நிலையில், தேசிய கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிலையோ பரிதாபமாக உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில், இடம் பெற்றன. அப்போது, கூட்டணி பேச்சுவார்த்தை, நடந்த போதே, ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அந்த நேரத்தில், கம்யூனிஸ்ட்களுக்கு துணையாக, விஜயகாந்தின் தே.மு.தி.க., நின்றது. மூன்று கட்சிகளும், பேச்சுவார்த்தையின்படி, அ.தி.மு.க., சீட் ஒதுக்காவிட்டால், தனித்து போட்டியிடுவது குறித்து, ஆலோசிக்க துவங்கின. இப்பிரச்னையால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தன் நிலையை மாற்றி, கூட்டணி கட்சிகளுக்கு, பேசியபடி, சீட் ஒதுக்கியது. தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, விரிசல் ஏற்பட்டது. அதேபோல், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்றவையும், அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன. அதன்பின், முதல்வர் ஜெயலலிதா டில்லி சென்றபோது, '40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிடும்' என, அறிவித்தார். கடந்த மாதம் நடந்த, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்திலும், '40 தொகுதி களும் நமது இலக்கே' என, உறுதிபடத் தெரிவித்தார். கூட்டணி குறித்து எதுவும் முடிவு செய்யாமலே, அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பியவர்களிடம், விருப்ப மனு பெற்று உள்ளது. வேட்பாளர் தேர்வும் நடந்து வருகிறது. இச்சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பது தெரியாமல், எப்படியும், அ.தி.மு.க., தங்களை, கூட்டணியில் சேர்த்து, சீட் ஒதுக்கும் என்ற, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்குவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்டை சேர்ந்த, தா.பாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த, ஜி.ராமகிருஷ்ணனும், கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரும்பினார். இதுதொடர்பாக, நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டும், ஜெயலலிதாவிடம் இருந்து, அவர்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. அதனால், கடைசி நேரத்தில், சீட் தராமல், அ.தி.மு.க., கைவிரித்து விட்டால், எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது என்ற குழப்பத்திலும், அப்போது, கைகொடுக்க யாரும் வரமாட்டார்களே என்ற பரிதவிப்பிலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandru - male  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201401:15:34 IST Report Abuse
chandru இதுதான் அம்மாவின் ஆப்பு டியர் காம்ரேட்
Rate this:
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
10-ஜன-201416:51:16 IST Report Abuse
Sri Gugan எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தோல்வி உறுதி,தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன விடுங்க காம்ரேட்.
Rate this:
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
10-ஜன-201416:46:40 IST Report Abuse
Sri Gugan இப்பவே போய் கருணாவிடம் ஒட்டிகொள்ளுங்கள்,இல்லையென்றால் கஷ்டம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X