புதுடில்லி: நகர்ப்புறங்களில் ஆம் ஆத்மி கட்சியால் தோன்றியுள்ள சவாலைச் சமாளிக்க, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி புதிய யுக்தியைக் கையாள இருக்கிறார். ஆம் ஆத்மியின் சவாலைச் சமாளிக்க, பா.ஜ., அல்லது பா.ஜ.,வின் இளைஞர் பிரிவை மட்டும் நம்பியிராமல், தனக்கு ஆதரவான, "பொறுப்பான நிர்வாகத்திற்கான குடிமக்கள்" என்ற அமைப்பை பயன்படுத்தி இளைஞர்களைக் கவர திட்டமிட்டுள்ளார்.
டாக்டர்கள், வக்கீலகள், கல்லூரி பேராசிரியர்கள் போன்ற முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது உபி., பீகார் உட்பட 13 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. உபி.,யும் பீகாரும், மோடி லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை எதிர்பார்க்கும் மாநிலங்கள் ஆகும்.
மோடியை ஆதரித்து பா.ஜ., பிரசாரம் செய்வது போல், இந்த அமைப்பு நேரிடையாக மோடியைக் குறிப்பிட்டு பிரசாரம் செய்யாது. மாறாக, 196 நகரங்களி்ல் உள்ள இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு, நல்ல நிர்வாகத்திற்கு தேவையான அம்சங்கள் குறித்து விவாதிக்கும். அந்த விவாதத்தின் இறுதி முடிவு, "மோடியால் மட்டுமே நல்ல நிர்வாகம் தர முடியும்" என்பதைப் போல் இருக்கும்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் உறுதியுடன் செயல்படத் தக்க சமுதாய வேர்களைப் பெரும் அளவில் உருவாக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் மோடியுடன் 7 ஆயிரம் கல்லூரி மாணவர்களைச் சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்த அமைப்பு நட்ததியது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சவால்களைச் சமாளிக்க, மோடியின் தலைமையை முன்னிறுத்துவதே பா.ஜ.,வின கொள்கையாக இருக்கும் நிலையில், இந்த அமைப்பு நகர்ப்புறங்களில் முதன்முதலாக ஓட்டுப் போட இருக்கும் இளைஞர்களையு்ம,கிராமப்புற இளைஞர்களையும் மோடிக்கு ஆதரவாக திரட்டி வருகிறது.
மேலும் மோடியின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில்"மோடி கபே"க்களை உருவாக்கவும், அவற்றை நிர்வகிப்பதற்கான, "வளாகத் தூதர்"களுக்கு பயிற்சி அளிக்கவும், பா.ஜ.,வின் இளைஞர் பிரிவு முடுக்கி விடப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சா, 20 மாநில்ஙகளில் 20 லட்சம் மாணவர்களிடையே பிரசாரம் செய்வதற்காக, 5 ஆயிரம் "தூதர்களை"த் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE