ராகுல் - லாலு சந்திப்பு : கூட்டணியில் சேர பேச்சு

Added : ஜன 10, 2014 | கருத்துகள் (30) | |
Advertisement
புதுடில்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, லாலு பிரசாத் யாதவ், டில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை சந்தித்து பேசினார்.ராகுல் - லாலு சந்திப்பு : கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள், கூட்டாக தேர்தலை சந்தித்து, பீகாரில், 29 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்த,
 ராகுல் - லாலு சந்திப்பு : கூட்டணியில் சேர பேச்சு

புதுடில்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, லாலு பிரசாத் யாதவ், டில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை சந்தித்து பேசினார்.


ராகுல் - லாலு சந்திப்பு :

கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள், கூட்டாக தேர்தலை சந்தித்து, பீகாரில், 29 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்த, 2009 தேர்தலில், காங்கிரசை, லாலு கைகழுவியதால், அவர் கட்சி, நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால், பஸ்வான் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், இம்முறை, காங்கிரசுடன் கூட்டு சேர, லாலு அதீத விருப்பம் தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர், சோனியாவை சந்தித்த லாலு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து, வரவிருக்கும் லோக்சபா தேர்தலை, சந்திக்க விரும்புவதாக அறிவித்தார்.
எனினும், 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியை முறித்து, தனித்து போட்டியிட்ட லாலு கட்சியால், அம்மாநிலத்தில், காங்கிரசுக்கு பலத்த தோல்வி பெற்றுத் தந்தது. அதனால், லாலுவை மீண்டும், கூட்டணியில் சேர்ப்பது குறித்து, சோனியா தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், நேற்று, காங்., துணைத் தலைவர், ராகுலை சந்தித்த லாலு, லோக்சபா தேர்தல், கூட்டணி குறித்து பேசியதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-201421:07:50 IST Report Abuse
Aboobacker Siddeeq காங்கிரசுடன் அமைந்த கூட்டணிகளில் லாலுவும் கருணாவும் என்றும் பிரிக்க முடியாதவர்கள்..காங்கிரஸ் கூட்டணியை விட்டு இந்த இரு மெகா ஊழல்வாதிகளும் பிரிவது சாத்தியமில்லை...வாயளவில் காங்கிரசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பார்கள் பின்னர் அவர்கள் செய்த கூட்டு ஊழலால் வேறு வழியின்றி காங்கிரசுடன் கைகோர்த்து விடுவார்கள்... காங்கிரஸ் எது சொன்னாலும் தலையாட்டும் பொம்மைகள் இவர்கள்.
Rate this:
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
10-ஜன-201419:53:57 IST Report Abuse
S.Govindarajan. லல்லுவின் வழக்கை விரைவாக விசாரித்துத் தீர்ப்பை சொன்னால் கதை தெரியும்.
Rate this:
Cancel
கூமுட்டை தமிழ் சிங்கம் - கிர், குஜராத் ,இந்தியா
10-ஜன-201419:41:42 IST Report Abuse
கூமுட்டை தமிழ் சிங்கம் பாத்துப்பா ரவுல் தம்பி , அந்த ஆளு மாடுங்கல கூட விடாம அதுங்க வயித்துல அடிச்சு சம்பாதிச்ச ஆளு ,நீயோ ஊர் வுலகம் தெரியாத பச்சை மண்ணு, டாலர் நோட்டை சூட்காஸ் ல வச்சு ஏர் போர்ட் போகுற மாதிரி லேசு பட்ட காரியம் இல்ல , பாத்து பத்திரமா நடந்துக்க சொல்லி புட்டேன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X