சீறிய அழகிரி; தேற்றிய தம்பிகள்

Added : ஜன 11, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை உசுப்பேத்தும் வகையில், போஸ்டர்கள் ஒட்டியதாக, அழகிரியின் வலதுகரமான, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னன் உட்பட, ஐந்து நிர்வாகிகள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர். இது, அழகிரிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுதொடர்பான, அழகிரியின், 'ரியாக் ஷன்' குறித்து, அவருக்கு நெருக்கமான ஆதரவாளர், கூறியதாவது: நிர்வாகிகள் சிலரை, போனில் தொடர்பு கொண்ட
சீறிய அழகிரி; தேற்றிய தம்பிகள்

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை உசுப்பேத்தும் வகையில், போஸ்டர்கள் ஒட்டியதாக, அழகிரியின் வலதுகரமான, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னன் உட்பட, ஐந்து நிர்வாகிகள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர். இது, அழகிரிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான, அழகிரியின், 'ரியாக் ஷன்' குறித்து, அவருக்கு நெருக்கமான ஆதரவாளர், கூறியதாவது: நிர்வாகிகள் சிலரை, போனில் தொடர்பு கொண்ட அழகிரி, 'உங்களை நீக்கியது, என்னை நீக்கியது போல் தான். ஏன்... என்னையே கட்சியை விட்டு நீக்க வேண்டியதானே...,' என, கொந்தளித்தார். உடன், அவர் தொலைபேசியில் பேசிய நபரும், நாங்களும், அழகிரிக்கு ஆறுதல் கூறினோம். 'பொறுமையாக இருங்கள்... நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றும், எல்லோரிடமும் அழகிரி தெரிவித்தார். இவ்வாறு, அவரது ஆதரவாளர்கள் கூறினர்.


கோழி மிதித்து குஞ்சு சாகுமா:

தி.மு.க., மேலிடத்தின் கடும் எச்சரிக்கைக்கு பிறகும், மதுரையில் அழகிரிக்கு ஆதரவாக, மீண்டும், மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. 'கோழி மிதித்து குஞ்சு சாகுமா... அஞ்சா நெஞ்சன் வழியில் அயராது உழைப்போம்' என்ற தலைப்பிட்ட புதிய போஸ்டர்கள், நேற்று காலை மதுரையில் பளிச்சிட்டன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viji Ram - kovai,யூ.எஸ்.ஏ
11-ஜன-201420:25:30 IST Report Abuse
Viji Ram அதாவது , நீங்க அழகிரி தலைமையில் மதுரையை ஆட்டய போடாம விடமா‌ட்டீர்கள்.அது சரி இத விட்டா நீங்க தி‌யேட்டர் வாசலில் கள்ள டிக்கெட் தானே விக்கணும்.
Rate this:
Cancel
TIRUVANNAMALAI kulasekar - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201404:08:48 IST Report Abuse
TIRUVANNAMALAI kulasekar எதி்ர் கட்சிகாரன் குழப்பத்த உண்டு பண்ண அடிச்ச சவரொட்டி அது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X