கம்யூ.,களை சந்திக்க ஜெ., மறுப்பது ஏன்? சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி

Added : ஜன 11, 2014 | கருத்துகள் (5)
Share
Advertisement
'தேசிய அளவில் மூன்றாவது அணி' என, முடிவு எடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில், அந்த அணியை அமைக்க, எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இரண்டும், அவரது அழைப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தலைமையிடத்திலிருந்து, இதுவரை அழைப்பில்லை.லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., தலைமையில் ஒரு அணி, பா.ஜ., தலைமையில் இன்னொரு அணி
கம்யூ.,களை சந்திக்க ஜெ., மறுப்பது ஏன்? சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி

'தேசிய அளவில் மூன்றாவது அணி' என, முடிவு எடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில், அந்த அணியை அமைக்க, எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இரண்டும், அவரது அழைப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தலைமையிடத்திலிருந்து, இதுவரை அழைப்பில்லை.

லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., தலைமையில் ஒரு அணி, பா.ஜ., தலைமையில் இன்னொரு அணி அமைவது என்பது, ஏறக்குறைய உறுதியாகி விட்டதால், அ.தி.மு.க., தன் மூன்றாவது அணி திட்டத்தை செயல்படுத்த, நேரம் காலம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டால், வேறு எந்த கட்சியுடனும் சேர்ந்து, அ.தி.மு.க.,வால், தமிழகத்தில் மூன்றாவது அணியை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், பா.ம.க., - ம.தி.மு.க., கட்சிகள், பா.ஜ.,வுடன் அணி சேர, பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்டன. ஆனாலும், அ.தி.மு.க., பாராமுகமாக இருப்பதற்கு காரணம், மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் என, புதுத்தகவல் கூறப்படுகிறது. தேசிய அளவில், மூன்றாவது அணிக்கு முழு பலமும் கிடைக்க வேண்டுமானால், அதற்கு மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு அவசியம். ஆனால், மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அரசியல் நடத்தி வரும் மம்தா, கம்யூனிஸ்ட்டுகள் இடம்பெறும் அணியில் இருக்கமாட்டார். அதனால், அவர், கம்யூனிஸ்ட் இல்லாத ஒரு அணியை தேசிய அளவில் ஏற்படுத்தும் திட்டத்தில், காய் நகர்த்தி வருகிறார். அது தெரிந்தே, ஜெயலலிதா அமைதி காத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. அப்படியொரு அணி அமைந்தால், கம்யூனிஸ்ட்டுகள் தனித்து விடப்படும் சூழல் எழும்.

இந்நிலையில், திரிணமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா, விரைவில் சென்னை வரவுள்ளதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, தமிழக திரிணமுல் காங்கிரஸ் தலைவர் எம்.ஜி.சுப்ரமணியம் கூறியதாவது: தமிழக நிர்வாகிகள், 20ம் தேதி, கோல்கட்டா செல்கிறோம். 22ம் தேதி, மம்தாவை சந்திக்கிறோம்; சென்னை வரும்படி, அவருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். அதை ஏற்று, அவர் சென்னை வருவார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nammalwar - Bangalore,இந்தியா
11-ஜன-201419:30:27 IST Report Abuse
Nammalwar எப்படியோ கம்முநிச்ட்கள் அழிய வேண்டும். நமக்கு பொதுவுடைமை சிந்தனையும் வேண்டும் என்றால் அதை பிற காலத்தில் ராமனை வணங்குவதாக சொல்லி கொள்ளும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் மூலம் பார்க்கலாம். கம்முநிச்ட்களுக்கு இவர்கள் பரவா இல்லை என்பதால். ஆனால் இந்த கம்முநிச்ட்கள் ஹிந்து மத துரோகிகள். ஹிந்து மதத்தில் தேடி தேடி குறை கண்டு பிடிக்கும் இவர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை பூசி மெழுகுவார்கள்.
Rate this:
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
11-ஜன-201416:57:10 IST Report Abuse
K Sanckar அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா ஜெயலலிதாவும் மம்தாவும் பிஜு பட்நாயக்கும் ஒன்று சேர்ந்தால் கூட எதுவும் நடக்காது.இவர்களால் மாநிலங்களில் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது மேலும் யார் பிரதமர் என்ற சண்டை வந்து விடும்.
Rate this:
Cancel
Sri Gugan - Vandavasi,இந்தியா
11-ஜன-201416:47:18 IST Report Abuse
Sri Gugan மம்தா,ஜெயா,முலாயம்,நவீன் பட்நாயக்,நிதிஷ்,ஜெகன்மோகன்ரெட்டி,சரத் பவார்,ஒமர் அப்துல்லா அடடே இது நல்லாயிருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X