கூட்டணிக்காக மகனை துரத்த கருணாநிதி முயற்சியா?

Added : ஜன 11, 2014
Share
Advertisement
லோக்சபா தேர்தலுக்காக, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, கூட்டணி மலருமா என்பது, மில்லியன் டாலர் கேள்வி. ஆனாலும், விஜயகாந்தின், தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., போராடி வருகிறது. இந்தக் கூட்டணிக்காக, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வேண்டாம்' என, தெரிவித்த, தன் மூத்த மகன், அழகிரியையே, ஒதுக்கித் தள்ளி விட்டார், கருணாநிதி. அவரின் நடவடிக்கை பற்றி, இரு பிரபலங்கள் தெரிவித்த
கூட்டணிக்காக மகனை துரத்த கருணாநிதி முயற்சியா?

லோக்சபா தேர்தலுக்காக, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, கூட்டணி மலருமா என்பது, மில்லியன் டாலர் கேள்வி. ஆனாலும், விஜயகாந்தின், தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., போராடி வருகிறது. இந்தக் கூட்டணிக்காக, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வேண்டாம்' என, தெரிவித்த, தன் மூத்த மகன், அழகிரியையே, ஒதுக்கித் தள்ளி விட்டார், கருணாநிதி. அவரின் நடவடிக்கை பற்றி, இரு பிரபலங்கள் தெரிவித்த கருத்துகள்:
'கழுத்து வெளுத்தாலும் காகம் கருடன் ஆக முடியாது; குறுக்கு சிறுத்தாலும், கிழவன் குமரனாக முடியாது' என்று தான் கருணாநிதியைப் பார்த்து, சொல்லத் தோன்றுகிறது. அலைந்து திரிந்தாவது, காலில் விழுந்தாவது, கதறி துடித்தாவது, கூட்டணி அமைத்து விட வேண்டும் என, கணக்கு போடுகிறார். முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போலத்தான், அவரது கூட்டணி கணக்கு அமையும். தே.மு.தி.க., ஒரு கறிக்கோழி; அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்காது. ஒரு இனம் என்பது, தன் இனத்தை விருத்தி செய்ய வேண்டும். ஒரு தலைவர் என்பவர், தன் கட்சித் தொண்டர்களுக்கு காவலராக இருந்து, கட்சியை வழி நடத்திச் செல்ல வேண்டும். அத்தகைய தகுதியைவிஜயகாந்த் இழந்து விட்டார். தே.மு.தி.க.,வுக்கு தொண்டர் பலம், மக்கள் பலம் குறைந்து விட்டது; அவருக்கு மனைவி பலம், மச்சான் பலம் மட்டுமே உள்ளது. அன்று பசுவின் கன்றை கொன்ற மகனை, தேரோட்டி கொன்றான் மனுநீதி சோழன். இன்று கூட்டணிக்காக, பெற்ற மகனையும் வெளியே துரத்த தயாராகி விட்டார் கருணாநிதி. திருமண மண்டபத்தை இடித்து விட்டு, இப்போது அதே திருமண மண்டபத்தில், கூட்டணி திருமணம் வைத்துக் கொள்ள நினைப்பது, பொருந்தாத காதலாக தெரியவில்லையா. நாங்கள் கழட்டி போட்ட, கோவணத் துணியை பட்டு அங்கவஸ்திரமாக ஏந்த, கருணாநிதி தயாரா? 10 ஆண்டு காலம் காங்கிரசுடன் ஒட்டி, உறவாடி விட்டு, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுஇருந்த, தி.மு.க., தேர்தல் நெருங்க நெருங்க தன் உறவை முறித்துள்ளது. அரசியலில் எத்தகைய சாயத்தையும், பூசிக் கொள்வதற்கு தயாராகும் நவீன பூச்சாண்டி கருணாநிதி என்பதை, மக்கள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர்.

வைகை செல்வன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

கடந்த, 1967க்கு பின், தேர்தலில் கூட்டணி அமைப்பது வழக்கமாக உள்ளது. அது ஒரு மரபாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு முன், அவரவர் தங்கள் கட்சிகளின் கூட்டணியை பலப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்தால், எங்கள் பலம் அதிகரிக்கும். பொது எதிரியாகக் கருதும் ஜெயலலிதாவை வீழ்த்தும். அதனால் தான், 'தே.மு.தி.க., எங்கள் கூட்டணிக்கு வந்தால், மகிழ்ச்சி அடைவோம்' என, கருணாநிதியும், ஸ்டாலினும் கூறினர். 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வேண்டாம்' என, அழகிரி கூறியது பற்றி, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. பல வண்ணங்களால் தலையணை உறை அமைந்து இருக்கும். ஆனால், உள்ளே இருப்பது வெண்மையான பஞ்சு மட்டுமே. அதுபோல் தான், கூட்டணியில் வெவ்வேறு கட்சிகள் இடம் பெற்றாலும், அ.தி.மு.க.,வை வீழ்த்துவதே, பொது நோக்கமாக இருக்கும். எல்லாரையும் அரவணைத்து, அன்பு செலுத்தி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் கருணாநிதி. அவர், கூட்டணிக்காக இறங்கி வந்து பேசுகிறார் என்று கூறுவது தவறு. அது, பார்ப்பவர்களின் பார்வை கோளாறு. தனித்தனியாக பிரிந்து இருந்து தோற்கடிப்பதை விட, இணைந்து தோற்கடிப்பது எளிது. வேட்டைக்கு செல்கிற வேட்டைக்காரன், ஒற்றைக்குழல் துப்பாக்கி கொணடு செல்வதை விட, இரட்டை குழல் துப்பாக்கியை கொண்டு செல்வது குறி தப்பாது. தே.மு.தி.க.,வை இரண்டாக உடைத்து விட்டனர். விஜயகாந்தை பார்த்து, கைவிரல் நீட்டி பேசி, 'குடிகாரர்' என, அவமானப்படுத்தியுள்ளனர். முதல்வர் பதவியில், ஜெயலலிதாவை அமர வைக்க பாடுபட்ட, தே.மு.தி.க.,வின் எம்.எல்.ஏ.,க்களை இழுத்தது, இருவர் கைகுலுக்கிக் கொள்ளும்போது, மோதிரத்தை திருடுவதற்கு சமம்.

கம்பம் செல்வேந்திரன், தி.மு.க., தேர்தல் பணி செயலர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X