பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவே இளைஞர்கள் கையில்: இன்று தேசிய இளைஞர் தினம் -

Added : ஜன 12, 2014 | கருத்துகள் (7)
Advertisement
இந்தியாவே இளைஞர்கள் கையில்:  இன்று தேசிய இளைஞர் தினம் -

இந்திய கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் (ஜன.12), தேசிய இளைஞர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது.

விவகானந்தர், 1863 ஜன., 12ம் தேதி கோல்கட்டாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். தட்சணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரை சந்தித்த விவேகானந்தர், அவரது தலைமை சீடரானார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் "சகோதர, சகோதரிகளே' என அழைத்து அவர் பேசியது, இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க வாழ்க்கை முறைகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது. "ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும் முன்னேறும்' என்று விவேகானந்தர் கூறினார். நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.


எதிர்பார்ப்பு:

இளைஞர்களளில் சிலர் புகையிலை, போதை பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இதிலிருந்து விடுபட, இளைஞர்கள், சிறுவயதிலேயே லட்சியத்தை கைக்கொள்ள வேண்டும். குறிக்கோளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.தற்போது, இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். சீனா, ஜப்பான் நாடுகளில் முதியவர்களே அதிகம். இதனால், அந்நாடுகளில் வளர்ச்சி விகிதம் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. அரசியலில் இளைஞ்கள் நுழைந்தால் நாட்டின் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதற்கேற்ப மூத்த தலைவர்கள், இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். திட்டங்களை தீட்டி கொடுத்து, அவர்கள் வழியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
12-ஜன-201418:19:17 IST Report Abuse
Ramesh Kumar விவேகானந்தர்.....நினைக்கும் போதே நம்முள் தன்னம்பிக்கையை ஊட்டும் மந்திரச்சொல் , நடை முறையில் உண்மையாக அனுபவித்தவன் சொல்கிறேன்......ராமக்ருஷ்னரே போற்றி, சாரதா தேவி அன்னையே போற்றி.., விவேகானந்தரே போற்றி....
Rate this:
Share this comment
Cancel
Venkat Maa - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-201414:18:06 IST Report Abuse
Venkat Maa இந்தியா இளைங்கர்கள் கையில் டாஸ்மாக் மது அவர்களின் கையில்
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
12-ஜன-201411:28:04 IST Report Abuse
CHANDRA GUPTHAN வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு என்னுடைய சஹஸ்ர கோடி நமஸ்காரங்கள் . இதில் வந்துள்ள பதிவுகளைக்கொண்டே மக்கள் மனது எப்படி உள்ளது அறிய முடிகிறது . நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்றார். இதிலிருந்து விவேகானந்தர் எந்த அளவிற்கு இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. (அவரது நம்பிக்கை வீணே ) இளைஞர்கள் சினிமா மோகத்தில் சங்கம் வைத்து தண்ணியடித்து குட்டி சுவரா போய் கொண்டிருக்கிறார்கள் . நாடு சுத்தமடைய வேண்டுமென்றால் ஒரு கோடி சுவாமி விவேகானந்தர் தேவைப்படும் . எத்தனை பிறவி எடுத்தாலும் இனி இந்தியாவை மாற்றமுடியாது . தினமலருக்கு என் நன்றிகள் . சென்ற வருஷம் ஒரு சிறிய பெட்டி செய்தியாக வந்தது அதை சுட்டி காட்டினேன் . தொடரட்டும் அதன் பணி . தினமலர் வாசகர் அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் அருள் கிடைக்கட்டும் . வாழ்க பாரதம் , ஜெய் ஹிந்த் , வந்தேமாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X