தை பிறந்த பின் கூட்டணி பேச்சு : விஜயகாந்த் 'அட்வைஸ்'

Updated : ஜன 12, 2014 | Added : ஜன 12, 2014 | கருத்துகள் (39)
Share
Advertisement
தை பிறந்த பின் கூட்டணி பேச்சு : விஜயகாந்த் 'அட்வைஸ்'

லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள, தே.முதி.க., தலைவர் விஜயகாந்த், தை பிறந்த பின், அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையை துவக்க, முடிவு செய்துள்ளார்.

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு மாற்று எனக் கூறி, தே.மு.தி.க.,வை துவக்கிய விஜயகாந்த், இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்தார். அவற்றில், பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை. அதனால், 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 40 இடங்களில் போட்டியிட்டு, 28 இடங்களை கைப்பற்றினார். அதன்பின், ஜெயலலிதாவுக்கும், அவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியில்இருந்து வெளியேறினார்.இதனால், கோபமடைந்த அ.தி.மு.க., விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரை, தங்கள் ஆதரவாளர்களாக மாற்றியது. ஆத்திரமடைந்த விஜய காந்த், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு எதிராக, பலமான கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

அவருடன் கூட்டணி சேர, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் ஆகியவை போட்டி போடுகின்றன.ஆனாலும், இந்த மூன்று கட்சிகளில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்றும்; கூட்டணி அமைப்பதால் ஏற்படும், லாப, நஷ்டங்கள் குறித்தும் கணக்கு போட்டு வருகிறார். அத்துடன், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளை நடத்துவோரிடமும், பிரதிநிதிகள் மூலமாகவும், கருத்து கேட்டுள்ளார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த அவர், 'தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என, மூன்று கட்சிகளுடனும் தொடர்பில் இருங்கள். தை பிறந்த பின், கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்குங்கள்' என, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக, நியமிக்கப் பட்ட தங்கள் கட்சி குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.எனவே, பொங்கலுக்கு பின், தே.மு.தி.க., எந்த பக்கம் சாயும் என்பது உறுதியாகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- -நமது நிருபர்-- -

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maxim - Coimbatore,இந்தியா
12-ஜன-201418:33:51 IST Report Abuse
maxim மக்களோட மட்டும்தான் கூட்டணின்னு மப்புல சொல்லிட்டார் போல இப்ப பதவிக்காக சீ
Rate this:
Share this comment
Cancel
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
12-ஜன-201417:47:02 IST Report Abuse
gopalakrishnan saminathan தாமரை எது இலை எது என்று கூட தெரிய வில்லை உங்கள் கட்சியும் அப்படிதானே
Rate this:
Share this comment
Cancel
rasarasan - chennai,இந்தியா
12-ஜன-201409:46:06 IST Report Abuse
rasarasan கருணைவை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது . எஸ்ராவை நல்லவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது எனச் சொல்ல தூது அனுப்பினர். இப்போது திருமாவளவன். அடுத்தது இந்தியன் Muslim league . பிறகு TMMK .அப்போதும் கேப்டன் வரவில்லை என்றால் அழகிரி கேப்டன்இடம் மன்னிப்பு கேட்பார்.அதன் பின்னரும் மசியவில்லை என்றால் DMK கலைத்துவிட்டு கேப்டன் கட்சியில் சேருவார். பதவி ஆசை இருவரையும் என்ன பாடு படுத்துகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X