சென்னையில் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,:வேகமாக தயாராகும் பயண திட்டம்

Updated : ஜன 13, 2014 | Added : ஜன 12, 2014 | கருத்துகள் (28)
Share
Advertisement
லோக்சபா தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகளுக்கு, வரும் தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது.இந்தச் சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளை துவக்கி விட்டது.
 சென்னையில் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,:வேகமாக தயாராகும் பயண திட்டம்

லோக்சபா தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகளுக்கு, வரும் தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. உள்ளாட்சி பதவிகளில், 80 சதவீதத்திற்கும் மேல், அ.தி.மு.க.,வினரே உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அ.தி.மு.க.,வினரே பதவி வகிக்கின்றனர். நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ஏதேனும் ஒரு பதவியில் உள்ளனர்.அதனால், லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளையும், எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என, தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.
மத்தியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு, தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதிக சீட்டுகளை பெறுவதன் அடிப்படையில், அனைவரும், அ.தி.மு.க., பக்கம் திரும்புவர். முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வாய்ப்பு கிடைக்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். அதனால், அவரை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி விட்டது.

அ.தி.மு.க., அரசின் சாதனைகளை, அனைத்து மக்களும், அறிந்து கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக, துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, நகரம், ஒன்றியம் வாரியாக, அனைத்து பகுதிகளிலும், பொதுக்கூட்டம் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல், தயாராகி விட்டதால், அடுத்த கட்டமாக, முதல்வரின் பிரசார பயணத் திட்டத்தை தயாரிக்கும் பணியில், அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு, இம்முறை, அனைத்து அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனையுடன், முதல்வரின் பிரசார பயணத் திட்டம், தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு, முதல்வர் சென்று வரும் வகையில், ஜெயலலிதாவின் பயணம் அமைய உள்ளது.சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளது. அனேகமாக, சென்னை திருவொற்றியூரிலோ அல்லது சைதாப்பேட்டையிலோ, முதல்வர், தன் பிரசாரத்தை துவக்குவார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankara Narayanan - Bangalore,இந்தியா
15-ஜன-201406:05:54 IST Report Abuse
Sankara Narayanan இன்னுமா இந்த ஊர் இவர்களை நம்பிக் கொண்டிருக்கிறது. மம்மி அவர்கள் பேசாமல் கொடநாட்டிலேயே செட்டில் ஆகி விடுவதுதான் இந்த நாட்டிற்கு நல்லது. மம்மி உங்களுக்கு மக்கள் மீதெல்லாம் பெரிய அக்கறை ஒன்றும் கிடையாது. உங்கள் போக்குவரத்து , சுகாதார துறை ஜால்ரா அமைச்சர்களை எங்கள் ஏரியாவுக்கு வந்து பார்க்க சொல்லுங்கள்.இங்கே 10 ஆண்டுகளாக நல்ல சாலைகள் கிடையாது. கொசு மருந்து கூட இங்கே அடிப்பதில்லை.எங்கே பார்த்தாலும் குப்பைகள்,மாடுகள் ,பன்றிகள்,நாய்கள், கலெக்டர்,தாசில்தார்,பஞ்சாயத்து தலைவர்,வார்டு கவுன்சிலர் இவர்கள் யாரும் தேர்தலுக்கப்புறம் எட்டி பார்த்தது கிடையாது.
Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-பிப்-201400:36:44 IST Report Abuse
மதுரை விருமாண்டி"எங்கே பார்த்தாலும் குப்பைகள்,மாடுகள் ,பன்றிகள்,நாய்கள்" - அட, மினிஸ்டர் மாறு வேஷத்தில் வந்ததை நீங்க பாத்திட்டீங்களா?...
Rate this:
Cancel
jaiaaa - Raipur,இந்தியா
12-ஜன-201408:17:38 IST Report Abuse
jaiaaa ADMK Comes without BJP...I will not give my Vote to ADMK... So My Vote for BJP alliance only...
Rate this:
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
12-ஜன-201407:29:41 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் ஆசை இருக்கு தாசில் பண்ண.....அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க......
Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-பிப்-201400:30:55 IST Report Abuse
மதுரை விருமாண்டிபாஜகவுக்கா இல்லை அடிமை திமுகவுக்கா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X