லோக்சபா தேர்தலில் கட்சிகளிடையே பலத்த போட்டி: 'ஆம் ஆத்மி'யும் களம் இறங்குவதால்

Updated : ஜன 13, 2014 | Added : ஜன 12, 2014 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி:வரும் லோக்சபா தேர்தலில், இது வரை இல்லாத அளவில், கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய, பா.ஜ., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சி களுடன், இந்த முறை, 'ஆம் ஆத்மி'யும் சேர்ந்துள்ளதால், லோக்சபா தேர்தல் களம், மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.16வது லோக்சபா:நடப்பு, 15வது லோக்சபாவின் பதவி காலம், ஜூன், 3ம் தேதி நிறைவடைகிறது. 16வது லோக்சபாவை
 லோக்சபா தேர்தலில் கட்சிகளிடையே பலத்த போட்டி:  'ஆம் ஆத்மி'யும் களம் இறங்குவதால்

புதுடில்லி:வரும் லோக்சபா தேர்தலில், இது வரை இல்லாத அளவில், கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய, பா.ஜ., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சி களுடன், இந்த முறை, 'ஆம் ஆத்மி'யும் சேர்ந்துள்ளதால், லோக்சபா தேர்தல் களம், மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.

16வது லோக்சபா:

நடப்பு, 15வது லோக்சபாவின் பதவி காலம், ஜூன், 3ம் தேதி நிறைவடைகிறது. 16வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்காக, ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படும் லோக்சபா தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், பலத்த போட்டி இருக்கும் என்பது, இப்போதே தெளிவாக தெரிகிறது.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதுமே, அக்கட்சியில், தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டது. அதையடுத்து, நாடு முழுவதும், மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம், மக்கள் மத்தியில் புதிய எழுச்சியை காண முடிகிறது.தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான, 272 இடங்களைப் பிடிக்க, அந்தக் கட்சி, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மோடியின் பிரசார வியூகங்களும், அவரின் தகவல் தொடர்புகளும், இந்த மந்திர எண்ணை முன்னிலைப்படுத்தியே அமைந்துஉள்ளன.லோக்சபா தேர்தலில், 272 இடங்களைப் பிடிக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, வல்லுனர்களிடம் இருந்து கருத்துகளை கேட்டு வரும் அக்கட்சியின் ஊடகப் பிரிவு, தகவல் தொழில்நுட்பம் உதவியை, அதிக அளவில் பெற்று வருகிறது.

'இந்தியா 272 டாட் காம்' என்ற பெயரில், இணையதளம் துவக்கியுள்ள அந்தக் கட்சி, அதில், தேர்தல் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவாளர்களின் கருத்துகளையும் கேட்டு வருகிறது.அது போல், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும், மொபைல் போன்களில், 'மோடி 272 பிளஸ்' என்ற, மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ள, பா.ஜ., அதன் மூலமும் ஆதரவாளர்களை நெருங்கியுள்ளது.

காங்., படுதோல்வி:அது போல், காங்கிரசும், இந்தத் தேர்தலை வித்தியாசமாக அணுக முயற்சித்துள்ளது. நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தன் தேர்தல் அணுகுமுறையை, இந்த முறை முற்றிலும் மாற்ற முடிவு செய்துள்ளது.வித்தியாசமான முறையில், வேட்பாளர்களை தேர்வு செய்யப் போவதாக, அக்கட்சி அறிவித்து உள்ளதன் மூலம், அக்கட்சிக்கும், 'ஆம் ஆத்மி' பாதிப்பு ஏற்பட்டுஉள்ளதை அறிய முடிகிறது.கட்சியை துவக்கி, ஒரு ஆண்டிற்குள், டில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய கொள்கைகளை, காங்கிரஸ் உட்பட, அனைத்து கட்சிகளும் பின்பற்ற தயாராக உள்ளன.

ஒரு கோடி உறுப்பினர்கள்:

குறிப்பாக, கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களை, தேர்தலில் போட்டியிட வைக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது, அதன் துணைத் தலைவர், ராகுல் பேச்சிலிருந்து தெளிவாகிறது.வேட்பாளர்கள் தேர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் அனைத்து மாநில முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்களின் கருத்தை கேட்டறிந்துள்ள அக்கட்சி, வேட்பாளர் தேர்வில், இந்த முறை, கடும் கெடுபிடிகளை பின்பற்ற உள்ளதாக, அக்கட்சியின் டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அது போல், இந்த தேர்தலில், 'ஆம் ஆத்மி'யின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால், பாரம்பரிய கட்சிகளுக்கு சற்று சிரமமான நிலையே ஏற்படும் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.டில்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய சூட்டோடு சூடாக, இந்த மாதத்திற்குள், ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கப் போவதாக, அக்கட்சி அறிவித்துள்ளது, பிற கட்சிகளின் வயிற்றில், புளியைக் கரைத்துள்ளது.இதனால், அக்கட்சிகளின் ஓட்டு வங்கிகளில் பாதிப்பு ஏற்படுவதுடன், வெற்றி ஓட்டு சதவீதத்திலும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்கின்றனர்.அதனால், பலவிதமான கவர்ச்சி அறிவிப்புகளும், கவர்ச்சி கரமான பிரசாரங்களுக்கும், இந்தத் தேர்தலில் குறைவு இருக்காது.வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில், தேர்தல் அறிக்கையில், ஏராளமான அம்சங்கள் இடம்பெறும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரை கவரும் விதத்தில், வருமான வரியில் மாற்றம், மின் கட்டண மாற்றம், மருத்துவ வசதி போன்றவற்றில், கூடுதல் கவனத்தை, கட்சிகள் செலுத்தும்.

பிரதமர் வேட்பாளர்:

பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், கட்சிகளுக்குள் போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில், கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ், இந்த முறை, தன் பிரதமர் வேட்பாளரை அறிவித்தே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.நிலைமை இவ்வாறு இருக்க, பிரசாரத்திலும், சூடுபறக்கும். காங்கிரஸ் சார்பில், பிரசாரத்தில், பிரியங்கா களம் இறக்கி விடப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
12-ஜன-201418:12:41 IST Report Abuse
திருமகள்கேள்வன் மோடி போட்டி இல்லாமல் வெற்றி பெறுவது சுவாரசியாமாக இருக்காது. ஆகவே இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளனர்... அவ்வளவுதான்... மோடியின் வெற்றி நிச்சயமாகிவிட்ட ஒன்று..
Rate this:
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
12-ஜன-201414:43:35 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN புகைப்படத்தில் கேஜ்ரிவால் மற்றும் மோடி இருப்பது சரி, கூட யார் அது? ராஹுலா........அவரை மறந்து வெகு காலமாகிவிட்டது, எந்த நினைவில் அவர் படத்தையும் சேர்த்திருக்கிறீர்கள்? காங்கிரஸ் மக்கள் மனதில் செத்து வெகு காலம் ஆகிவிட்டது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜன-201414:18:28 IST Report Abuse
Pugazh V இப்பவும் பல பா ஜ க ஆதரவாளர்களின் பகல் கனவு ஜெயலலிதா தேர்தலுக்குப் பிறகு ஆதரிப்பார் என்பது தான். 175-180 ஐ பா ஜ க ஜெயிக்கும் என்றிருந்த நிலை இப்போது ஆம் ஆத்மி யால், 140-150 ஆகக் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் முன்பு சட்ட மன்றத்தில் எம் ஜி ஆருக்கு வாக்களித்தவர்கள் லோக்சபாவில் எம் ஜி ஆருக்கு எதிரான அணிக்கு வாக்களித்தார்கள். இப்போதும் அதே போல ஜெயலலிதாவின் அதிர் அணிக்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. பாவம். எத்தனை சிரமப் பட்டாலும் 150 தான் பா ஜ க. காங்கிரஸ் 90 ஆம் ஆத்மி ஒரு 75 இடங்களாவது ஜெயிக்கும் என தோன்றுகிறது. கடும் போட்டி தான். ஆனாலும், தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு மாதிரி வேறு மாநில வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் கிடைக்காது.
Rate this:
Chanakya - Chennai,இந்தியா
12-ஜன-201421:59:27 IST Report Abuse
Chanakyaஅப்போ தொங்கு பாராளுமன்றம் உருவாகி, சீக்ரமே மறு தேர்தல் வந்து ........ மக்கள் நிலையான அரசு வேண்டும் என்பதற்காக மொத்தமாக மோடிக்கே வோட்டு போட்டு விடுவார்கள்..............
Rate this:
kuchipudi gumma - chennai,இந்தியா
12-ஜன-201422:56:40 IST Report Abuse
kuchipudi gummaவடிவேலு சாமிய காமிகிறேனு துட்டு கலெக்ட் செஞ்சுட்டு , மலை அடிவாரத்துக்கு எல்லாரையும் வரவெச்சு காமிச்சு பேச வைப்பாறு அதுபோல இல்ல நீங்க பேசறது புகழ் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X