'புல்லரிக்கும்' புத்தாண்டு கனவு

Added : ஜன 12, 2014
Share
Advertisement
(புத்தாண்டிலாவது புத்திசாலியாக வேண்டும்... "மப்'பை மறக்க வேண்டும்... "சீக்ரெட்'டாக குடிக்கும் சிகரெட்டை தொலைக்க வேண்டும்... பொய் சொல்வதை புறக்கணிக்க வேண்டும்... கோபத்தை "கொல்ல' வேண்டும்... - இப்படியெல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு புத்தாண்டுக்கும் "கனவு காண்பதும்' கற்பூரத்தை அணைக்காத குறையாக சத்தியம் செய்வதும் சகஜமாகி விட்டது. இதே போல், நமது அரசியல்வாதிகளும் என்ன கனவு
'புல்லரிக்கும்' புத்தாண்டு கனவு

(புத்தாண்டிலாவது புத்திசாலியாக வேண்டும்... "மப்'பை மறக்க வேண்டும்... "சீக்ரெட்'டாக குடிக்கும் சிகரெட்டை தொலைக்க வேண்டும்... பொய் சொல்வதை புறக்கணிக்க வேண்டும்... கோபத்தை "கொல்ல' வேண்டும்... - இப்படியெல்லாம் ஆளாளுக்கு ஒவ்வொரு புத்தாண்டுக்கும் "கனவு காண்பதும்' கற்பூரத்தை அணைக்காத குறையாக சத்தியம் செய்வதும் சகஜமாகி விட்டது. இதே போல், நமது அரசியல்வாதிகளும் என்ன கனவு காண்பார்கள்? (கற்பனைதாங்க!):



காங்கிரஸ்

(தொண்டர்களை விட தலைவர்கள் அதிகமாக இருப்பதால், யார் பெயரை குறிப்பிடுவது என தெரியவில்லை, மன்னிக்கவும்!): கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது, சட்டை, வேட்டி கிழியாமல் இருக்க வேண்டும். 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கும் கட்சியில் 10 லட்சம் "கோஷ்டி'கள் இருப்பதால்... எந்தக் கட்சியில் யார் இருக்கிறார்கள் என தனியாக ஒரு அகராதி தயாரிக்க வேண்டும்.



கருணாநிதி:

தேர்தல் ஆண்டாக இருப்பதால், மாறுதல் ஏற்பட வேண்டும். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், "வெயிட்டிங் லிஸ்ட்டில்' இல்லாமல், எனக்கு "கர்ன்பர்ம் டிக்கெட்' ஆக அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையில், நான் என்ன அறிக்கை விட்டாலும், யோசிக்காமல் உலகத் தமிழர்கள் அப்படியே நம்ப வேண்டும்.



ஜெயலலிதா:

மத்தியில் எந்தக் கட்சிக்கும் 40 எம்.பி.,க்களுக்கு மேல் கிடைக்கக் கூடாது. மிகப்பெரிய கட்சியாகி, ஆட்சி அமைக்க வேண்டும். மோடி, மாயாவதி, மம்தா, ஜெகன்மோகன், முலாயம் போன்றவர்கள் எல்லாம் என் தலைமையில் அமைச்சராகி, என்னால் அடிக்கடி "பந்தாடப்பட' வேண்டும். தப்பித்தவறி வேறு கட்சி ஆட்சி அமைந்தாலும், மத்திய அமைச்சரவையில் தி.மு.க., இடம் பெற்றுவிடக் கூடாது. அப்படியே கிடைத்தாலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அவர்கள் "உள்ளே' செல்ல வேண்டும்.



விஜயகாந்த்:

என்னை சேர்க்கலாமா வேண்டாமா என புரியாமல் மற்ற கட்சிகள் குழம்ப, யாருடன் சேருவது, எப்படி சேருவது என தெரியாமல் நானும் குழம்ப... தேர்தலுக்குள்ளாவது இக்குழப்பம் தீர வேண்டும். என்னைத் திட்டுவதற்கு மற்றவர்கள் பயன்படுத்தும் "குவார்ட்டர், ஹாப், புல், ரவுண்டு' போன்ற ஆங்கில வார்த்தைகளை அகராதியில் இருந்து நீக்க வேண்டும்.



ராமதாஸ்:

நாங்கள் முன்பு மரம் வெட்டிய நினைவு, மக்களுக்கு மறந்தே போக வேண்டும். மாவட்ட கட்சி, மாநில கட்சி, தேசிய கட்சி என எதனுடனும் கூட்டணி இல்லை என நாங்கள் தெரியாத்தனமாக அறிவித்து விட்டதால், கூட்டணி சேர வசதியாக, மற்ற கட்சிகளின் பெயரை "சர்வதேச கட்சி' என மாற்றிக்கொள்ள வேண்டும்.



வைகோ:

"பாஜ'வுக்கு "கூஜா' தூக்கும் ஆளாக என்னை நினைக்கின்றனர். நான் "கூஜா'வும் தூக்கவில்லை, "தாஜா'வும் செய்யவில்லை என தமிழர்களுக்கு தெரிய வேண்டும். நான் ஓயாமல் "முழங்கி' வரும் இலங்கைப் பிரச்னை, ஓட்டுகளை பெற்றுத் தரும் பிரச்னையாக இந்த ஆண்டாவது மாற வேண்டும்.


இவர்களது இந்த கனவு கொஞ்சமும் சேதாரம் இல்லாமல் "பலிக்க', நமது பங்குக்கு ஆண்டவனைப் பிரார்த்திக்கொள்வோமாக.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X