2013ம் ஆண்டு ஒரு அரசியல் மாற்றத்தி்ற்கான ஆண்டாக அமைந்திருந்தது. 2014ம் ஆண்டிற்கான ஒரு முன்னோடியாக இது விளங்கியது.
இந்திய அரசியலில் அடுத்து ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் கூட்டணி மாற்றங்களுக்கான வித்து 2013ம் ஆண்டில் விதைக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் புதிய கொள்கையாக, நரேந்திர மோடியை பாரதிய ஜனதா முன்னிறுத்தியது. இதற்கிடையில் காங்கிரஸ் எவ்வளவோ மாற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் எந்த மாற்றமும் குறிப்பிடத்தக்க விளைவு எதையும் கொண்டு வரவில்லை. நடுத்தர மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நிர்ணய சக்தியாக விளங்குகின்றனர். அவர்கள் 2013ம் ஆண்டே தாங்கள் விரும்பிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. இந்த மாற்றம் 2014 தேர்தலில் உரிய விளைவை ஏற்படுத்தும்.
மத்தியில் அடுத்து அமைய இருக்கும் ஆட்சி, உ.பி., மற்றும் பீகாரில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அங்கு 2014 தேர்தலில் கிடைக்கும் இடங்களைப் பொறுத்தே அமையும். 17 ஆண்டு காலமாக பா.ஜ.,வின் கூ்டடணி காட்சியாக இருந்த ஐககிய ஜனதா தளம் தற்போது அந்த கூட்டணியிலிருந்து விலகி இருப்பதாலும். பீகாரில் லாலு கட்சியுடன் காங்கிரஸ் உறவைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதாலும், உ.பி.,யில் சமஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் உடன்பாட்டிற்கு வந்திருப்பதாலும் ஆச்சர்யகரமான முடிவுகள் ஏற்படலாம்.
ஜனநாயத்தின் சிறப்பம்சம்:
2013ம் ஆண்டில் ஏற்பட்ட மற்றொரு முக்கிய நிகழ்வு, டில்லியில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஓராண்டுக்கு முன் உருவான ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வி கண்டுள்ளது. அவர்கள் ( ஆம் ஆத்மி கட்சி) எந்த நடைமுறையை எதிர்த்தார்களோ அந்த நடைமுறையே அவர்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. இதுதான் நமது ஜனநாயகத்தின் சிறப்பம்சம். அதேபோல், எவருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோட்டா பட்டன், ஓட்டு இயந்திரத்தில் பொருத்தப்பட்டதும் ஒரு குறிப்பிட்த்தக்க மாற்றமாகும். இந்த மாற்றங்கள், இந்திய அரசியல் சூழலில் பெரிய மாற்றத்தை தோற்றுவித்தன. அதேபோல் திருடர்களின் கூடாரம் என்று பார்லிமென்டை வர்ணித்த அன்னா ஹசாரே, அதே பார்லிமென்டில் லோகபால் மசோதாவை நிறைவேற்றச் செய்து சாதனை புரிந்திருக்கிறார். ராகுலுக்கும் ஹசாரேக்கும் அன்னா கடித்ங்கள் எழுதிய சம்பவங்கள், கடந்த ஓராண்டிற்கு முன் கற்பனை செய்தும் பார்கக முடியாதது.
கடந்த காலத்தில் பார்லிமென்ட் கூட்டம் சரிவர நடைபெறவில்லை; நாள்தோறும் அமளி, ஒத்திவைப்பு. இருப்பினும் இந்த காலகட்டத்திலும், உணவு பாதுகாப்பு மசோதா, நில கையகப்படுத்தல் மசோதா, பென்ஷன் மசோதா போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்கள் எழுப்பியுள்ள எதிர்பார்ப்புகள், அடுத்து வரும் அரசுக்கு சவாலாகவே இருக்கும்.
மாற்றத்திற்கு காரணம்:
கடந்த பல ஆண்டுகளாக முழங்கி வந்த, "அரசியல் வர்க்கத்தினரே உண்மையான வில்லன்கள்" என்ற கோஷம், கடந்த ஆண்டு கேட்கப்படவில்லை. பல்வேறு பிரிவு மக்களிடையே நிலவிய அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்திய, அரசியல்வாதிகளுக்கு எதிரான கோஷம் சற்றே அடங்கி இருந்தது. தற்போதைய ஆட்சிமுறைக்கு எதிராக பிரசாரம் செய்து வந்த அன்னாவும் கெஜ்ரிவாலும் ஏதோ ஒருவகையில் இந்த ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்டதும் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
2013ம் ஆண்டில் பல விளையாட்டு வீரர்கள் அரசியலுக்க வந்துள்ளனர். 2012ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினரானதன் மூலம் இதை சச்சின் டெண்டுல்கர் துவக்கி வைத்தார். 2013ல் துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜ்யவர்தன் ரத்தோர் பா.ஜ.,வில சேர்ந்தார்.வட்டு எறி வீரர்கிருஷ்ணா பூனியா, காங்கிரசில் இணைந்தார். சவ்ரவ் கங்குலியும் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும். இவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், அரசியலுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. காங்கிரஸ், பா.ஜ., மற்றும் இதர கட்சிகளில் பெருமளவில் டாக்டர்கள், வக்கீல்கள், இன்ஜினியர்கள் போன்றவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
மக்களின் பார்வை:
நீதிபதிகள் நியமன முறை குறித்து தற்போது விவாதம் நடைபெறுகிறது. முன்னாள் நீதிபதி கங்குலி மீதான குற்றச்சாட்டு, தேஜ்பால் கைது போன்ற சம்பவங்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. பிரபலங்கள் கைது, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் அதிகாரிகளும் தொழில் நிறுவனங்களும் சம்பந்தப்படுவது போன்றவை, பொதுமக்கள் பெரிய அளவில் பிரச்னைகளைப் பரிசீலிக்க ஆரம்பித்து வி்ட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும் குறி வைக்கப்படவில்லை என்பதை இவை வெளிப்படுத்துகிறது.
காங்கிரசில் அதிகார மாற்றம் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் வகையில், பழைய தலைமைக்கும் புதியவர்களுக்கும் இடையேயான இந்த ஆலோசனையில் புதிய தலைமை உருவாகும் நிலை காணப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களிடையே அகங்காரம் சற்றே குறைந்து, பொறுப்பும் கடமை உணர்வும் சிறிது கூடியிருக்கிறது.
அடித்தளம் இட்ட 2013:
ஆக மொத்தத்தில் 2013ம் ஆண்டு நிகழ்வுகள், 2014ம் ஆண்டிற்கான சூழ்நிலையை அழகாக மாற்றி அமைத்துள்ளன. பயம் நிறைந்த மனநிலையில் காங்கிரஸ், இழந்ததை மீட்க முடியுமா என்ற நிச்சயமற்ற நிலையில் பா.ஜ., தெளிவற்ற நிலையில் உள்ள முக்கிய மாநிலங்கள் ( உ.பி., பீகார் போன்றவை), எந்த கூட்டணியிலும் இல்லாத ஆனால் அதிக அளவில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள வளர்ந்து வரும் தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் ஒடிசா முதல்வர்கள், புதிதாக தலையெடுத்துள்ள ( ஆம் ஆத்மி) கட்சி ஆகியவையே இந்த ஆண்டின் பின்னணியாக விளங்குகின்றன. பல புதிய சட்டங்கள், எதிர்பார்ப்புகள் இருப்பினும், 72 கோடி வாக்காளர்கள், இதில் எதையுமே ஏற்காத நிலையும் ஏற்படலாம். தேர்தல் வருவதற்குள் எத்தனையோ மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. எப்படி இருப்பினும் 2014 மேலும் சிறந்ததாகவே இருக்கும் என்று நம்புவோமாக.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE