காத்திருப்போர் பட்டியலில் காங்கிரஸ்

Updated : ஜன 13, 2014 | Added : ஜன 13, 2014 | கருத்துகள் (5)
Share
Advertisement
'தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை இணைப்பதற்கே, முன்னுரிமை கொடுங்கள்; காங்கிரசை கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என, பொருளாளர் ஸ்டாலினிடம், கட்சித் தலைவர், கருணாநிதி தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தி.மு.க.,வின், காத்திருப்போர் பட்டியலில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.மேலும், கருணாநிதி, காங்கிரஸ் தலைவர், சோனியாவோ அல்லது துணைத் தலைவர் ராகுலோ,
 காத்திருப்போர் பட்டியலில் காங்கிரஸ்

'தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை இணைப்பதற்கே, முன்னுரிமை கொடுங்கள்; காங்கிரசை கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என, பொருளாளர் ஸ்டாலினிடம், கட்சித் தலைவர், கருணாநிதி தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தி.மு.க.,வின், காத்திருப்போர் பட்டியலில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

மேலும், கருணாநிதி, காங்கிரஸ் தலைவர், சோனியாவோ அல்லது துணைத் தலைவர் ராகுலோ, நேரில் சந்தித்து, ஆதரவுகேட்டால் மட்டுமே, கூட்டணி குறித்து பரிசீலிக்கவும், தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது.மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., இடம் பெற்றிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் மற்றும் இலங்கை தமிழர் பிரச்னையில், தங்களின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில், காங்கிரஸ் செயல்படவில்லை என்பதால், மத்திய அரசிலிருந்து, தி.மு.க.,விலகியது.கடந்த மாதம் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், 'காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி இல்லை' என, கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு, பலமான கூட்டணியை உருவாக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார். தி.மு.க.,வின் தூதர்களாக, பேராயர் ஒருவரும், முதல் முறையாகவிஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.

இதற்கிடையில், தங்கள் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியதால், தனித்து விடப்பட்ட காங்., லோக்சபா தேர்தலை தனியே சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என, அஞ்சியது. அதனால், காங்கிரஸ் மேலிட தூதராக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம்நபி ஆசாத், சமீபத்தில், சென்னை வந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பின் போது, 'தேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை' என, குலாம்நபி ஆசாத் தெரிவித்தாலும், அதுபற்றியே அவர், கருணாநிதியிடம் விவாதித்ததாகவும், 'காங்கிரசை கைவிட்டு விடக்கூடாது; கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்' என, வலியுறுத்தியதாகவும், தகவல்கள் வெளியாகின.அதேநேரத்தில், அமைச்சர் ஆசாத்திடம், 'தேர்தல் தேதி அறிவிக்கட்டு்ம்; பின்னர்,கூட்டணி பற்றி பேசிக்கொள்ளலாம்' என, கருணாநிதி மழுப்பலாக பதில் அளித்து, அவரை அனுப்பி விட்டார். அதற்கு காரணம், விஜயகாந்தின், தே.மு.தி.க.,விற்கு, முதல் முன்னுரிமை கொடுத்து, அவரை கூட்டணி யில் சேர்க்க வேண்டும் என்பதே, கருணாநிதியின் எண்ணம். இதை, தன் மகனும், தி.மு.க., பொருளாளருமான, ஸ்டாலினிடம் தெரிவித்து, அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும்படி கேட்டுள்ளார்.

இதன்பிறகே, தி.மு.க., மேலிட ஆலோசனைப்படி, விஜயகாந்தை, விடுதலைசிறுத்தைகள் தலைவர், திருமாவளவன்சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதே, தி.மு.க.,வின் திட்டம். அதனால், அவருக்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்படும். தி.மு.க.,வில் சேராமல், விஜயகாந்த், வேறு அணிக்கு மாறினால், அப்போதுதான், காங்கிரஸ் கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும்.அதுவும், காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது துணை தலைவர் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர், கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினால் மட்டுமே, காங்., கூட்டணி பற்றி, தி.மு.க., ஆலோசிக்கும். தற்போதைக்கு, காங்கிரஸ் காத்திருப்போர் பட்டியலில்தான் உள்ளது.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள்தெரிவித்தன.

மேலும், தே.மு.தி.க., வை, தங்கள் பக்கம் இழுத்து விட்டால், தங்கள் கூட்டணியில் முன்னர் இருந்து விட்டு, தற்போது வெளியேறி வீரவசனங்கள் பேசி வரும், பா.ம.க., மற்றும் ம.தி.மு.க.,வை, ஓரம் கட்டி விடலாம். அந்தக் கட்சிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கி விடலாம். அந்தக் கட்சிகள், பா.ஜ.,வுடன் அணி சேர்ந்தாலும், அவர்களால், பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்பதும், கருணாநிதியின் கணிப்பு.அதனால், விஜயகாந்த் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, தி.மு.க., மற்றும் பா.ஜ.,கூட்டணியில், பல மாற்றங்கள் நிகழலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201401:02:44 IST Report Abuse
Aboobacker Siddeeq பாவம் கருணாநிதி ஒரு செல்லாக்காசுக்காக இவ்வளவ்வு நாள் காதிருக்கிறாரே??? இவருக்காக காத்திருந்த மணிமேகலை எங்கே இப்போது இவர் எங்கே?
Rate this:
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
13-ஜன-201416:59:35 IST Report Abuse
KMP If DMDK decided to make alliance with DMK, then people will not consider vijyakanth in future, the best for DMDK is to join hands with MODI for a small support to modify the future india as developed nation in 2020 as Kalam dream , then DMDK may also become ruling party in TN upcoming 2016 or later 2021 state assembly elections... DMDK should learn many old lessons from VCK, PMK, and MDMK in the past 25-30 years in TN politics. These three parties made their hands dirty and wounds by given their hands with DMK and ADMK parties. DMDK should avoid always ADMK & DMK. I hope DMDK will take good decision, the decision never give anything for common people in TN but i am sure that it will surely give changes his own party itself. DMDK should take final decision ....
Rate this:
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
13-ஜன-201403:39:19 IST Report Abuse
Vanavaasam தேமுதிக வின் விலை அதிகம் ... லாபமோ , நஷ்டமோ அதை திமுக மட்டுமே கொடுத்து இழக்க விரும்பவில்லை ... திமுகவை தேமுதிக விமர்சித்ததும் , தேமுதிகவை திமுக விமர்சித்ததும் மக்களுக்கு நினைவிருக்க , இப்போது இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் நன்றாக இராது ... எனவே காங்கிரஸ் எனும் வினையூக்கி இடையே தேவைபடுகிறது ...அமௌண்ட் இக்கு அமௌண்ட் ஆச்சு ... இப்போது காங்கரஸ் கூட்டணியில் திமுகவும் தேமுதிகவும் இருப்பதைப்போல ஒரு மாயை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X