பொய் + சூது + வஞ்சனை + போலி சமாதானப் பேச்சுகள் = பாகிஸ்தான்| Dinamalar

பொய் + சூது + வஞ்சனை + போலி சமாதானப் பேச்சுகள் = பாகிஸ்தான்

Added : ஜன 13, 2014 | கருத்துகள் (8)
Advertisement
பொய் + சூது + வஞ்சனை + போலி சமாதானப் பேச்சுகள் = பாகிஸ்தான்

இந்தியாவுடனான பாகிஸ்தான் உறவு 1947 முதல் இன்று வரையில் மனசாட்சிபடியோ அல்லது உலகளவில் ஏற்கப்பட்ட அரசியல் நெறிகளின் வழியோ நடந்து வரவில்லை.
1947க்குப் பிறகு காஷ்மீரை முன்வைத்து ஐ.நா.மன்றக் கூட்டங்களில் வாதாடிய ஜபருல்லாகான் பொய்ப் பேச்சுகளுக்குத் தக்க பதிலடி கொடுத்து வி.கே.கிருஷ்ணமேனன், பின்னர் அவரையடுத்து இந்திய பிரதிநிதிகள் பேச்சுகள் பலவும் இன்றுவரை பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. பாகிஸ்தானில் இன்றளவும் ராணுவத்தின் கரங்களே வலிமையாக உள்ளன. அவ்வப்போது மக்களாட்சி தலைகாட்டி பின்னர் ஒளிந்துகொண்டுவிடும். சுல்பிகர் அலி புட்டோ, அவரது மகள் பெனசிர் புட்டோ போன்ற ஜனநாயக ஆதரவாளர்கள் கதையை ராணுவப் பின்னணி அவ்வப்போது முடித்துவிடும்.
பாகிஸ்தானின் அபிவிருத்திக்காக அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் அள்ளி வழங்கிய பல பில்லியன் டாலர்கள் ராணுவத்தைப் பலப்படுத்தவும், ராணுவ ஆட்சியை நிரந்தரமாக்கவுமே பயன்படுத்தப்பட்ட உண்மை, செய்தியேடுகளில் அவ்வப்போது வெளிவந்துள்ளது. அயூப்கான், ஸியா-உல்-ஹக், பர்வேஸ் முஷாரப் என்று சர்வாதிகாரிகள் இடையிடையே தோன்றி, இடையிடையே வந்த ஜனநாயக அரசுகளை நசுக்கியுள்ளதே, இந்த 65 ஆண்டுகளில் பாகிஸ்தான் படைத்துள்ள வரலாற்றுச் சாதனை.
பாகிஸ்தானின் பிறவிக்குணம்: இரு நாடுகளின் எல்லையில் பதட்ட நிலைகளை, ஊடுருவல்களைத் தடுப்பது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமலிருப்பது போன்ற சமாதான சம்பிரதாயங்கள் மேல்பூச்சாகவே மட்டும் இருந்து வருகிறது. அடி மனத்தின் ஆலகால ஆவியைக் கக்குவதே பாகிஸ்தானின் பிறவிக்குணம்.
இந்த ஆலகாலத்தின் ஒரு துளியே 26/11 மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு, பலத்த உயிர்ச் சேதங்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிவு நிகழ்ச்சி.
அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொய்வில்லாமல் நடந்துவரும் பாக். அட்டூழியங்களின் பின்னணி பலம் அந்த நாட்டில் உருவாகிச் செயலாற்றி வரும் பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களே.
இவர்களை அடக்கியொடுக்கி வீழ்த்த ஜெனரல் திம்மையா, ஜெனரல் கரியப்பா, ஜெனரல் மேனக்ஷா போன்ற தளபதிகள் இன்று நம்மிடையே இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு அரண் பலமாக உள்ளதா என்ற தெரியவில்லை.
பயங்கரவாதிகளின் இறுமாப்பு: இந்தப் பின்னணியில்தான் பாகிஸ்தான் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நியூயார்க் நகரில் நடைபெற்றது. நேருக்கு நேர் மரியாதை நிமித்தமான பேச்சுக்களில் உறவு தெரிந்தாலும் ஷெரிப் ஐ.நா. மன்றத்தில் காஷ்மீர் பிரச்னையைக் கிளப்பத் தவறவில்லை. இதைக் கேட்டவுடன் மன்மோகன் சிங் முகம் இருண்டுவிட்டது என்று இறுமாப்புடன் ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் முகமது சையீது கூறியுள்ளார். 26/11 நிகழ்ச்சியில் இந்தியப் போலீசாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளில் இந்தப் பயங்கரவாதிகள் பெயரும் உண்டு.
"எங்களுக்கு வரும் நிதியை இந்தியாவோ, அமெரிக்காவோ தடுக்க முடியாது. பல நற்பணிகளை மேற்கொண்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட உலக இயக்கம் தங்களுடையது. இந்தியா எங்கள் மீது பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது'' என்று இந்தப் பெரியமனிதர் அண்மையில் பாக். தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேசியுள்ளார். ஹபீஸ் சையீதும் ஒரு உண்மையை ஒளிவுமறைவில்லாமல் கூறுகிறார். "26/11 முடிந்துவிடவில்லை''. கசாப் வாக்குமூலம் இந்திய ராணுவத்துக்கு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு எச்சரிக்கைத் தகவல்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
17-ஜன-201419:31:29 IST Report Abuse
PRAKASH.P மோடி வரட்டும் , நாம் ஒற்றுமையாய் மோதி ஒரு கை பார்த்து விடுவோம் ... பாக், சீனா , இலங்கை எல்லாம் ஒழுக்கம் கற்கும் ... இல்லையேல் வெளுக்க படும் ... ஓம் முருகா வெற்றிவேல் முருகா ...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
16-ஜன-201411:14:55 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) எங்களை எதுவும் செய்யாதீர்கள் என்று ஹிந்துக்கள் பிறரிடம் கோரிக்கை வைப்பதால் எந்த பலனும் இல்லை. யாருடைய மனமும் மாறிவிட போவதில்லை. ஹிந்துக்களின் பாதுகாப்பு, ஹிந்துக்களின் கைகளில் தான் உள்ளது. ஹிந்துக்கள் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும். மோடி போன்றவர்களுக்கு ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். சனிக்கிழமை கோவில்களில் ஒன்றுகூட வேண்டும். எல்லா ஹிந்துக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். நம் மூதாதையர்கள் தங்கள் உயிரை கொடுத்து நம் கோவில்களையும், கலாசாரத்தையும் காத்தார்கள். இன்றைய தலைமுறையினர், நம்மை தற்காத்துக்கொள்ள குறைந்தபட்சமாவது செயல்படவேண்டும்.
Rate this:
Share this comment
Anbu - Chennai,இந்தியா
19-ஜன-201416:42:19 IST Report Abuse
Anbuஇரண்டு இல்லை, முன்று முதல் நான்கு...... அகண்ட பாரதம் அமைந்தால், மக்கள் தொகையை சமாளித்து கொள்ளலாம்....
Rate this:
Share this comment
Cancel
Proud Indian - kumari2kashmir,இந்தியா
16-ஜன-201401:47:28 IST Report Abuse
Proud Indian எல்லா மத தேவாலயங்களில் வசூலாகும் காணிக்கை ஒட்டு மொத்தமாக அரசு கருவூலத்தில் செலுத்தப் படுகிறதா? இல்லையே இந்து மதக் கோவில்களில் வசூலாகும் காணிக்கை மட்டும் தான் அரசு கை வைக்கிறது. பயனாளிகள் எல்லா மதத்தினரும் தான். இதில் வேற மைனாரிட்டி என்றப் பெயரில் சலுகைகள்...... நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிய வெள்ளையனின் பிரித்தாளும் தந்திரத்தைத் தான் இப்போதும் நம் அரசியல் வாதிகள் கடைப் பிடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X