போலீஸ் நண்பன் ஜெ.,வா, கருணாநிதியா?

Added : ஜன 14, 2014 | கருத்துகள் (8)
Share
Advertisement
போலீஸ் நண்பன் ஜெ.,வா, கருணாநிதியா?

உலகிலேயே, ஸ்காட்லாந்து நாட்டு காவல் துறைக்கு அடுத்தபடியாக, தமிழக காவல் துறை திறமையானதாக கருதப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதில், உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு, பகலாக பணியாற்றி வரும், தமிழக காவல் துறையினருக்கு, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், தங்களது ஆட்சிக் காலத்தில், போட்டி போட்டு, பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் அறிவிப்பது வழக்கம். இரு கட்சிகளில், காவல் துறையினரின் நலனுக்கு அதிகம் செய்தது யார் என்பது குறித்து, இரு பெண் வி.ஐ.பி.,க்கள் அலசுகின்றனர். அவர்களின் வாதங்கள் இதோ:

சி.ஆர்.சரஸ்வதி,தமிழக சமூக நலவாரிய தலைவர்:
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. புத்தாண்டு பிறந்த போது, சென்னை கடற்கரையில் ரவுடிகள் தொல்லை இல்லை. மாணவர்களின் பஸ்டே கொண்டாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் விடுமுறை உண்டு. போலீசாருக்கு அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.போலீசார் பணியில் இறந்தால், ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதோடு சேர்த்து, முதல்வர் நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கி, மொத்தம், 4.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.பெண் போலீசாருக்கான, பேறுகால விடுப்பு, சம்பளத்துடன் ஆறு மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது, உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு சொந்தமாக வீடு வாங்கும் திட்டம், அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் துறையில், 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஏட்டு களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில், எஸ்.எஸ்.ஐ., என்ற புது பதவி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது, அ.தி.மு.க., ஆட்சியில் தான்.அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சோலார் விளக்குகள் அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் பெண் கமாண்டோக்கள் உருவாக்கப்பட்டனர். இந்தியாவில் முதன் முறையாக, தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் தான், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. மெரினா கடற்கரையில் குற்றங்களை தடுப்பதற்காக, கடலோர போலீசார் ரோந்து செல்லும் வகையில், மணலில் ஓடும் கார் வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், போலீஸ் பணிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.விரைவில், 17 ஆயிரம் காவலர்கள், 1,100 சப்-இன்ஸ்பெக்டர்கள், தீயணைப்பு வீரர்கள், 1000 பேர், சிறை வார்டன்கள், 292 பேரை நியமிக்கவும், முதல்வர், ஜெ., உத்தரவிட்டுள்ளார்.

வசந்தி ஸ்டான்லி,ராஜ்யசபா, தி.மு.க., - எம்.பி.,: பெரிய தொப்பி, கத்தி மாதிரியான அரை கால் டவுசரை, சீருடையாக அணிந்திருந்த போலீசாருக்கு, கம்பீரமான மிடுக்குடன் காட்சி தரும் வகையில், பேன்ட் சர்ட், தொப்பியை வழங்கியது தி.மு.க., ஆட்சியில் என்றால், அது மிகையல்ல. தி.மு.க., ஆட்சியில்தான், நாட்டிலேயே முதன் முறையாக, காவல் துறைக்கு கமிஷன் அமைக்கப்பட்டது. 1969ல், ஆர்.ஏ.கோவிந்தசாமி ஐ.ஏ.எஸ். தலைமையில், அந்த கமிஷன் அமைக்கப்பட்டது. அவரது, 133 பரிந்துரைகளில், 115 ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.கடந்த, 1989ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சபாநாயகம் தலைமையில், சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, அந்தக் குழு தெரிவித்த, 112 பரிந்துரைகளில், 102 ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரை எதிரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலக கட்டடத்தை இடிக்க போடப்பட்ட, அ.தி.மு.க., அரசின் ஆணையை, தி.மு.க., அரசு தான் ரத்து செய்தது. அதுமட்டுமின்றி, கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.பணிக்காலத்தில், வீரதீர செயல்களில், காவலர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, கருணைத் தொகை, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன், காப்பீடு திட்டம், குடும்ப பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. வீர தீர செயல்களில் ஈடுபட்டதால், நிரந்தர ஊனமாகும் காவலர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதும், தி.மு.க., ஆட்சியே.வீர மரணம் அடையும் காவலர்களின், வாரிசுகளுக்கு மருத்துவம், இன்ஜினியரிங், வேளாண்மை போன்ற படிப்புகளில் சேர தலா, மூன்று இடங்களும், சட்டப்படிப்பில் சேர, இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டது. ஊதிய உயர்வு, சிறப்புபடி, செயல்திறனுக்கான படி, சீருடைப்படி, இடர்படி, சிறப்பு இடர்படி, பயணப்படி எல்லாம் கொண்டு வரப்பட்டது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் அரசின் சாதனைகள்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabu - nagercoil  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-201402:41:35 IST Report Abuse
sabu ரொம்ப காலமா எனக்கு ஒரு சந்தேகம் தமிழக காவல்துறை எப்படி உலகில் இரண்டாவது இருக்கிறது எப்ப இருந்தி்ச்சு எந்த ஆதாரமும் இல்லாமலே எல்லாரும் பீத்தி்க்கிறாங்க நானும் வருசக்கணக்கா இன்டர்னெடடில் தேடிபபார்த்து எந்த தகவலும் இல்லை சும்மா விசயகாந்த் சரத்குமார் படங்களை பார்த்து புளுகிறாங்க இதுக்கு எல்லா பத்தி்ரிக்கைகளும் சப்போர்ட் வேற பண்றாங்க
Rate this:
Share this comment
Cancel
chandru - male  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201411:07:31 IST Report Abuse
chandru அம்மா சரசுவதி் சட்ட ஒழுங்கு என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு ஒருநாள் கடைபிடிப்பதா சட்ட ஒழுங்கு உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா தி்னசரி பேப்பர் படிபீங்களா அதி்ல் தி்னமும் கொலை கொள்ளை செயின் பறிப்பு அது இதுன்னு வருதே இதேல்லாம் சட்ட ஒழுங்குக்குள் வருதா என்ன
Rate this:
Share this comment
Cancel
ram - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201404:19:43 IST Report Abuse
ram இரண்டு கட்சியும் வாரிசு வேலை வழங்கவே இல்லையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X