பொங்கலுக்கு... ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு அல்வா!"| Dinamalar

பொங்கலுக்கு... ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு அல்வா!"

Added : ஜன 14, 2014
Share
"அக்கா! நேத்துல இருந்து "லைட்'டா காய்ச்சல் அடிக்குது...இன்னைக்கு நான் "வாக்கிங்' வரலை; நீ போயிட்டு வா...!,'' மொபைலில் சோர்வாகப் பேசினாள் மித்ரா."என்னடி ஆச்சு? ஊரெல்லாம் கொசுத்தொல்லை அதிகமாயிருக்கு. டெங்கு, சிக்குன் குனியா ஏதாவது வந்துரப்போகுது. எதுக்கும் "டெஸ்ட்' பண்ணிக்கோ!,'' என்றாள் சித்ரா."ஊரெல்லாம் குப்பைத்தொட்டிதான் பிரச்னையா இருக்கு. பத்துப் பதினைஞ்சு
பொங்கலுக்கு... ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு அல்வா!"

"அக்கா! நேத்துல இருந்து "லைட்'டா காய்ச்சல் அடிக்குது...இன்னைக்கு நான் "வாக்கிங்' வரலை; நீ போயிட்டு வா...!,'' மொபைலில் சோர்வாகப் பேசினாள் மித்ரா.
"என்னடி ஆச்சு? ஊரெல்லாம் கொசுத்தொல்லை அதிகமாயிருக்கு. டெங்கு, சிக்குன் குனியா ஏதாவது வந்துரப்போகுது. எதுக்கும் "டெஸ்ட்' பண்ணிக்கோ!,'' என்றாள் சித்ரா.
"ஊரெல்லாம் குப்பைத்தொட்டிதான் பிரச்னையா இருக்கு. பத்துப் பதினைஞ்சு வருஷத்துல, கார்ப்பரேஷனுக்கு விதவிதமா குப்பைத்தொட்டி வாங்கியே, பல இன்ஜினியர்கள் கோடீஸ்வரங்களாயிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"கார்ப்பரேஷனைப் பத்திப் பேசுனா, <ஒனக்கு காய்ச்சலே காணாமப் போயிருமே...!,''
"ஆமாக்கா! லேட்டஸ்ட் மேட்டர் கேள்விப்பட்டேன்...ஏற்கனவே கோயம்புத்தூர்ல கட்டடங்களுக்கு சதுர அடிக்கு 50, 100ன்னு லஞ்ச ரேட் ஏறிட்டே இருக்கு. இதுல, "ஆட்டோ டிசிஆர்' சிஸ்டத்தை "க்ளோஸ்' பண்ணி, அந்தந்த ஜோனல் ஆபீசுக்கே அனுமதி கொடுத்துரலாம்னு சிட்டி வி.ஐ.பி., சொல்லிருக்காரு; ஆனா, அதிகாரிங்க அதுக்கு ஒத்துக்கலை,''
"வாட்டர் கனெக்ஷனுக்கு காசு வாங்காதீங்கன்னு ஆளுங்கட்சி கவுன்சிலர்களைக் கூப்பிட்டு, மேயர் கண்டிச்சும் ராஜ்குமார், பிரபாகரன்னு ரெண்டு மூணு கவுன்சிலர்கள் மட்டும்தான் காசு வாங்குறதில்லை; மத்தவுங்க எல்லாம் அடிதடி பண்ணியாவது, காசு பறிக்கிறாங்க. அதையே அவரால தடுக்க முடியலை; இதுல மண்டல ஆபீசுக்கு கட்டட அனுமதி கொடுக்குற "பவர்' கொடுத்தா, அப்புறம் சிட்டியெல்லாம் ஆளும்கட்சிக்கு பேரு நாறிடும்,'' என்றாள் சித்ரா.
"இப்ப மட்டும் என்ன வாழுதாம்? சென்னையில அறிவாலயம் இடத்தை எடுக்கப்போறேன்னு அங்கயிருக்கிற மேயர் குதியாக் குதிக்கிறாரு; இங்க என்னடான்னா, கார்ப்பரேஷனுக்கு சாதகமா ஐகோர்ட் தீர்ப்பு வந்த "ரிசர்வ் சைட்'களையே மீட்க மாட்டேங்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
"ரோட்டுல அடிபட்ட பொண்ணை தளபதி காப்பாத்துனாருன்னு உடன் பிறப்புகள் பெருசா பெருமையடிச்சாங்க. என்னடி மேட்டர்?,'' என்று மேட்டரை மாற்றினாள் சித்ரா.
"அதை ஏன் கேக்குற...மோதுனதே அவரோட வண்டிதான்னு சொல்றாங்க. ஆள் அரவமில்லாத ரோட்டுல நடந்ததால, "அமிக்கபிளா' முடிச்சுட்டு, இப்படி ஒரு பில்டப் கொடுத்துட்டாங்களாம்!,'' என்ற மித்ரா, "நம்ம சிட்டி வி.ஐ.பி.,யை தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், ரொம்ப புகழ்றாங்க...தெரியுமா?,'' என்றாள்.
"அவுங்க கூட்டணிதான், ஊரறிஞ்சரகசியமாயிருச்சே. நீ சொல்றது யாரைப்பத்தி?,''
"11வது வார்டு தி.மு.க.,காரங்கதான். அந்த வார்டுல, மகப்பேறு மருத்துவ மையம் திறக்கிறதுக்கு வி.ஐ.பி.,போயிருக்காரு. அந்த வார்டு கவுன்சிலர் ரவி, தி.மு.க.,காரர்ங்கிறதால, ஏரியா முழுக்க ஸ்டாலின் படம், பேனராப்போட்டு வச்சிருந்தாராம். அதையெல்லாம் கண்டுக்காம, தி.மு.க.,காரங்ககிட்ட நல்லாப் பேசிருக்காரு; ஆனா, அவரைப் பார்க்கிறதுக்காக நின்னுட்டு இருந்த ஆளும்கட்சிக்காரங்க கூட பேசாமலே போயிட்டாரு,'' என்றாள் மித்ரா.
"நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்; கெம்பட்டி காலனியில சைக்கிள் வழங்குற விழாவுக்காக ஸ்கூலுக்கு வி.ஐ.பி.,போயிருக்காரு. தகவல் தெரிஞ்சு, வார்டு கவுன்சிலர் சந்திரன், சால்வை வாங்கிட்டு ஓடுனாராம்; ஆனா, அவரைப் பார்த்தும் வண்டியில இருந்து இறங்கலை; அதே வார்டுல அ.தி.மு.க.,வுக்குப் போட்டியா நின்னவுங்ககிட்ட, இறங்கிப் பேசிட்டுப் போயிருக்காரு; மக்கள் முன்னால, கவுன்சிலருக்கு அவமானமாயிருச்சாம்.'' என்றாள் சித்ரா.
"அது சரி! ஏகப்பட்ட இன்ஸ்பெக்டர்களை "டிரான்ஸ்பர்' பண்ணிருக்காங்களே; விசேஷம் ஏதும் இருக்கா?,''
"வழக்கமான டிரான்ஸ்பர்தானாம்; ஆனா, அதுலயும் உளவுத்துறையில இருக்கிற உதவி அதிகாரி, உள் வேலை பண்ணிட்டாருங்கிறாங்க; தனக்கு "கப்பம்' கட்டாதவுங்களை "கட்டம்' கட்டி, தன்னை கவனிக்கிறவுங்களுக்கு "பசை'யுள்ள இடத்துல "டிரான்ஸ்பர்' வாங்கிக் கொடுத்துருக்காராம். நேர்மையான அதிகாரிகளை "டம்மி போஸ்ட்டிங்'ல தூக்கி அடிச்சிருக்காங்க,''
"போலீஸ் டிரான்ஸ்பர்ன்னு நீ சொல்லவும் ஞாபகத்துக்கு வருது; சிட்டியில முக்கியமான போலீஸ் ஆபீசை அழகா வச்சிருக்கிற பொறுப்புல இருக்கிற ஸ்பெஷல் எஸ்.ஐ., ஒருத்தர், அங்க "கிளீனிங்' வேலை பார்க்குற விதவைப் பொண்ணைச் சீண்டிருக்காரு. எங்கெங்கேயோ கூப்பிட்டதுக்கு, அந்தம்மா ஒத்துக்கலைன்னதும், ஏதோ பொய், புரட்டைச் சொல்லி, ஏ.ஆர்.க்கு தூக்கி விட்டுட்டாரு. இந்த விஷயம், உளவுத்துறை அதிகாரிக்குத் தெரிஞ்சும், அவராலயே ஒண்ணும் செய்ய முடியலையாம்,'' என்றாள் மித்ரா.
"சரி! வீட்டுலதான இருக்க...<உனக்கு ஒரு "க்ளூ' கொடுக்கிறேன்; பதில் சொல்லு...சிட்டிக்குள்ள "பவர்புல் போஸ்ட்'ல ஒரு வருஷம் இருக்கிறதுக்கு ஒரு கோடி ரூபா கொடுக்கத் தயாரா இருக்காங்க. ஏன்னா, அந்தக்காசை மூணே மாசத்துல எடுத்துருவாங்களாம்...முடிஞ்சா கண்டு பிடி. நான் "வாக்கிங்' கௌம்புறேன்,'' என்று பேச்சைத் துண்டித்து, வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X