ஒளிர்விடும் நம்பிக்கை

Added : ஜன 14, 2014 | கருத்துகள் (14)
Share
Advertisement
2014 பார்லி., தேர்தலில் மாற்றங்கள் உண்டாகும் என்று தெரிகிறது. பார்லி., தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பல புதிய அதிர்வுகளை உண்டாக்கும். இன்றைய நாளில் நாம் காண்பது, தனிப்பட்ட அரசியல் தலைவரின் தேர்வோ அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையே, வெறுமனே ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கும் நிகழ்வோ கிடையாது. பலர் கனவு கண்ட கற்பனை அரசியல், தற்போது நிஜமாகி வருவது அனைவருக்கும்கண்கூடாக
ஒளிர்விடும் நம்பிக்கை

2014 பார்லி., தேர்தலில் மாற்றங்கள் உண்டாகும் என்று தெரிகிறது. பார்லி., தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பல புதிய அதிர்வுகளை உண்டாக்கும். இன்றைய நாளில் நாம் காண்பது, தனிப்பட்ட அரசியல் தலைவரின் தேர்வோ அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையே, வெறுமனே ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கும் நிகழ்வோ கிடையாது. பலர் கனவு கண்ட கற்பனை அரசியல், தற்போது நிஜமாகி வருவது அனைவருக்கும்கண்கூடாக தெரிகிறது.
டில்லி சட்டசபை தேர்தலில், புதிய கட்சி அதிகார பீடத்தில் அமர்ந்தது அதிசய நிகழ்வே. காங்., சுவற்றில் இருந்த செங்கற்களை ஒவ்வொன்றாகபிடுங்கி எறிந்து, அக்கட்சியை படுதோல்வி அடைய வைத்தது மட்டுமன்றி, எதிர்க்கட்சியாக அமர கூட இடம் அளிக்காமல், மூலையில் உட்காரவைத்தது. தனது ஆட்சியில் பல சறுக்கல்களை சந்தித்த காங்., தேர்தலில் தனிப் பெரும்பான்மையை பெறவும், வாக்காளர்களை கவரவும், பாமரரை காந்தம் போல் இழுக்கும் தனது குடும்பப் பெயரை பயன்படுத்தியது. மக்கள் அதை நன்கு அறிந்திருந்ததால், காங்., கட்சியின் கடைசி அஸ்திரமும் புஸ்வாணமாய் போனது. ஆட்சியை பறிகொடுத்த காங்., கட்சியினர், அனுபவம் இல்லாத புதியவர்களால், பலவீனமான ஆட்சி அமைந்து, மக்களின் அதிருப்தியால், ஆட்சி மீண்டும் தங்கள் கைக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.


மோடியும் ராகுலும்:

மக்கள் நம்பிக்கை இழந்ததால், ராகுல் காந்தியின் முயற்சிகள் அனைத்தும், பொய்த்துப்போனது. தேசிய கட்சிகளான காங்., பா.ஜ., கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்தாலும், பா.ஜ., தற்போதைய சூழலில், தனித்துவத்துடன் விளங்குகிறது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவேன் என உறுதியளித்து, மக்களை கவர்ந்து வருகிறார். தன்னை மட்டுமே நம்பி, மத்தியில் ஆட்சியில் அமர தேவையான வியூகங்கள் அனைத்தையும் வகுத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். பொருளாதாரத்தில் வலிமை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற எண்ணும் மோடியின் பொருளாதாரக் கொள்கை, தெளிவாக இல்லை என்றாலும், அதை அவர் மேலிருந்து கீழாக வரிசைபடுத்தி செயல்படுத்தினால், ஒரு தெளிவு பிறக்கும். பொருளாதார, அரசியல் மற்றும் சமூகத்தில் மாற்றங்களை விரும்பும் குடிமகன்களின் உணர்வுகளை புரிந்து, விரைவான மாற்றம் உண்டாக்கும் நோக்கில், மோடியின் செயல்பாடு அமைந்துள்ளது. மோடியை வசீகரத் தலைவராவே இந்திய மக்கள் பார்க்கின்றனர். அவரது நுட்பமும், ஆதிக்க சக்தியும் அவரது வளர்ச்சிக்கு பெருந்துணை புரிகின்றன.


மோடியும் கெஜ்ரிவாலும்:

டில்லியில் ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால், மோடியைப் போல வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில்லை. குளறுபடியான அரசியலை சீர்செய்யும் கருவியாக தன்னை முன்னிலைப் படுத்துகிறார். மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய விரும்புகிறார். சாமானிய மக்களும் ஆட்சி பீடத்தில் அமர முடியும் என்பதை செய்து காட்டி அசத்தினார். ஊழலை ஒழிக்க போராடி வரும் கெஜ்ரிவால் அரசியல் மாற்றத்திற்கான அச்சாரமாக திகழ்கிறார்.
மோடி, கெஜ்ரிவால் இருவரையும் ஒப்பிடுகையில், மோடி தன் மீது படிந்த கறைகளை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கெஜ்ரிவால்தன்னை சுயபரிசோதனை செய்து, அடுத்தகட்ட அரசியல் எனும் கூடுதல் சுமையையும் சுமக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். ஆனால் காங்கிரஸை விட சிறப்பாக ஆட்சி புரிய வேண்டும் என்பதை மட்டும், இருவரும் மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தியாவுக்கு ஒரு வலுவான நல்லரசு அவசியம் தேவை. தன்நலத்தை விட மக்கள் நலனே முக்கியம் என்பதை மனதில் கொண்டு, தைரியமாக முடிவெடுக்கும் நாளைய தலைவனை, இந்தியா எதிர்பார்க்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
15-ஜன-201416:05:21 IST Report Abuse
Dhanraj Jayachandren மோடி கேஜ்ரிவால் சேர்ந்துதான் ஆட்சி இன் 2014.............100%
Rate this:
Cancel
Sulaiman Badsha - Muscat,ஓமன்
14-ஜன-201423:07:12 IST Report Abuse
Sulaiman Badsha Ennaathaan சொல்லுங்க AAP வந்த உடன் தானே இந்த ரெண்டு பெரும் கட்சிகளும் மக்கள் குறையல்லாம் பேசுறாங்க மாற்றம் உண்டாயிருக்குல்ல ரெண்டு கட்சிகிட்டையும் இதுவே ஒரு வெற்றிதான்
Rate this:
Cancel
Arumugam p - Blr,இந்தியா
14-ஜன-201422:52:02 IST Report Abuse
Arumugam p உங்களுடய முதல் வரியே தவறு, குறைந்த காலத்தில் அதிக வாக்குறுதிகளை அள்ளி வீசிய கட்சி. இப்போதும் டெல்லி யில் தனி பெரும்பான்மை கிடையாது. மிக மோசமான கட்சியுடன் கூட்டு வைத்துள்ளது. காங்கிரேச்சிடம் கூடு வைப்பார்கள் என்று தெரிந்து இருந்தால் நிறைய பேர் வோட்டு போட்டிருக்க மாட்டார்கள். ஒன்று மட்டும் கூறி கொள்கிறேன் இவர்களுடைய கம்முனிச கொள்கை இந்தியாவிற்கு நல்லதல்ல. Any ways known devil is better than unknown angel.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X