ஓட்டு கணக்கு போடும் எதிர்க்கட்சியினர்; உள்குத்துக்கு தயாராகும் ஆளுங்கட்சியினர்

Added : ஜன 14, 2014
Share
Advertisement
கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று விட்டு, களைப்பா, வீடு திரும்பிய சித்ராவுக்கு, பஜ்ஜியும், சூடா காபியும் கொடுத்து வரவேற்றாள் மித்ரா.ஒரு மடக்கு காபியை உறிஞ்சியதும், ரிலாக்ஸான சித்ரா, ""கலெக்டர் ஆபிசுல, ரெவ்யூ மீட்டிங் நடந்தா, மினிஸ்டர், மேயர், எம்.எல்.ஏ., கலெக் டர், டி.ஆர்.ஓ.,ன்னு முக்கியமான வங்களுக்கு மேடையில் முதல் வரிசை யில் "சீட்' கொடுப்பாங்க. மத்தவங்க, செகண்ட்
ஓட்டு கணக்கு போடும் எதிர்க்கட்சியினர்; உள்குத்துக்கு தயாராகும் ஆளுங்கட்சியினர்

கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று விட்டு, களைப்பா, வீடு திரும்பிய சித்ராவுக்கு, பஜ்ஜியும், சூடா காபியும் கொடுத்து வரவேற்றாள் மித்ரா.
ஒரு மடக்கு காபியை உறிஞ்சியதும், ரிலாக்ஸான சித்ரா, ""கலெக்டர் ஆபிசுல, ரெவ்யூ மீட்டிங் நடந்தா, மினிஸ்டர், மேயர், எம்.எல்.ஏ., கலெக் டர், டி.ஆர்.ஓ.,ன்னு முக்கியமான வங்களுக்கு மேடையில் முதல் வரிசை யில் "சீட்' கொடுப்பாங்க. மத்தவங்க, செகண்ட் லைனுக்கு போயிடுவாங்க. டி.ஆர்.ஓ., மாறினதுக்கு பிறகு, நெலைமையே மாறிடுச்சு.
முக்கியமான ரெவ்யூ மீட்டிங்கா இருந்தாலும், மண்டல தலைவருங்க, மாவட்ட துணை தலைவரு, ஒன்றிய தலைவருங்க கூட, பிரன்ட்லைன்ல ஒக்கார்ந்திடுறாங்க. கலெக்டருக்கு "சீட்' கெடைச்சிடுது; டி.ஆர்.ஓ.,வுக்கு "சீட்' கெடைக்காம போறதால, செகண்ட் லைனுக்கு போயிடுறாரு. சில மீட்டிங்ல சைடு ரோவுல கூட ஒக்கார்ந்திருந்தாராம்,'' என பொறுமித் தள்ளினாள்.
"செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பா, ஒரு வேனுல, அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பத்தி ஒளி பரப்பு செய்றாங்களாமே,'' என, மித்ரா கேள்வி எழுப்ப, ""அந்தக்கதை ஒனக்குத் தெரியாதா, போன வாரம், தளவாய்பட்டணம் பகுதியில், மாநில அரசின் சாதனையை விளக்கி படம் திரையிட போயிருக்காங்க. அங்கி ருந்த பொதுமக்கள், எங்க ஊருக்கு இன்னும் மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கவே இல்லை. இதுல, சாதனை விளக்க படம் வேற போடு றீங்களான்னு சொல்லி, வண்டியை நிறுத்த விடாம திருப்பி அனுப்பிட்டாங்க.
தகவல் தெரிஞ்சு ஆளும்கட்சிக் காரங்க போயி சமாதானம் பேசியிருக் காங்க. ஆனா, சாதனை விளக்கம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்; மொதல்ல, இலவச பொருளை கொடுக்கிற வழியை பாருங்கன்னு கறாரா சொல்லிட்டாங்களாம்.
இதுக்கு மேல நின்னா பிரச்னை வந்துரு முன்னு, வண்டியை எடுத்துட்டு கௌம்பி வந்துட்டாங்களாம்,'' என்று விளக்கினாள் சித்ரா.
"டிவி'யில் சீரியல் பார்த்தபடி, தட்டில் இருந்த பஜ்ஜியை மென்ற மித்ரா, ""எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை விமரிசையா கொண்டாடுறதுக்காக, ஆளுங்கட்சிக்காரங்க ஆலோசனை நடத்துனாங்க. அதுல பேசுன முக்கிய நிர்வாகிகள், ஆளும்கட்சியானதும், உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல் நடத்தி, கட்சிக்காரங்களுக்கு பதவி கொடுத்துருக்கு. ஆனா, கட்சி கூட்டத்துக்கு கூட பலரும் வர்றதே இல்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும், எந்தவொரு கூட்டமா இருந்தாலும், தவறாம கலந்துக்கணும். ஒங்க பாதமலர்களை தொட்டு கேட்டுக் கிறோம்னு கெஞ்சும் அளவுக்கு பேசி யிருக்காங்க. இதே ரேஞ்சில போனா, பாராளுமன்ற தேர்தலுக்கு வேலை செய்யக்கூட ஆளுக வர மாட்டாங்க போலிருக்கு,'' என, ரொம்பவும் வருத்தப்பட்டாள்.
"இதை எல்லாம், எதிர்க்கட்சிக் காரங்க, அமைதியா பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஏன்னா, போன எலக்ஷன்ல, ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஓட்டு வித்தியாசம் பெரிசா இல்லீங்க. தி.மு.க.வும், காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்துச்சு. தே.மு.தி.க., - கொ.மு.க., தனித் தனியா போட்டியிட்டுச்சு. இப்ப, கூட்டணி பேச்சு மும்முரமா போயிக்கிட்டு இருக்கு. கம்யூ., கட்சிக்காரங்க தனியா தவிச்சிக்கிட்டு நிக்கிறாங்க. அதுனால, எதிர்க் கட்சிக்காரங்க ஓட்டு கணக்கு போட ஆரம்பிச்சிட்டாங்க. இந்த வருஷம் எலக்ஷன்ல, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு சிக்கல் வரும். வராட்டினாலும், உள்குத்து வேலை பார்க்கவும், அவுங்க கட்சிக் காரங்களே தயாரா இருக்காங்க,'' என ஆரூடம் சொன்னாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X