தாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா?

Updated : ஜன 15, 2014 | Added : ஜன 15, 2014 | கருத்துகள் (61)
Advertisement
தாவூத் இப்ராகிம் கூட்டாளி,ஷிண்டே விடுவித்தாரா?, Sushilkumar Shinde,Dawood man

புதுடில்லி : 'பாகிஸ்தானில் மறைந்து வாழும், மும்பை தாதா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, டில்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, பலமுறை தடைவிதித்தார்' என, மத்திய உள்துறை, முன்னாள் செயலர், ஆர்.கே.சிங் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, "பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

இது குறித்து, ஆர்.கே.சிங்கிடம் கருத்து கேட்ட போது, "டில்லி போலீஸ் வசம் சிக்கிய, தாவூத் இப்ராகிம் கூட்டாளியை தப்ப வைத்ததே, ஷிண்டே தான். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய அந்த நபரிடம், விசாரணை நடத்த விடாமல், டில்லி போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது, தாவூத் இப்ராகிமை பிடிக்கப் போகிறாரா?' என்றார்.

மேலும் அவர் கூறும் போது, "டில்லி போலீஸ் செயல்பாட்டில், அடிக்கடி தலையிடும் ஷிண்டேயின் வீட்டிலிருந்து, துண்டுச்சீட்டு, மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதில், அதிகாரிகள் பணியிட மாற்றம் போன்ற, பல கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கும்' என்றார். இதை அறிந்த, பா.ஜ., தலைவர்கள், அமைச்சர் ஷிண்டேவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, நேற்று வலியுறுத்தினர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஷிண்டே பதில் எதுவும் தெரிவிக்காத நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான, திக்விஜய் சிங், இது குறித்து கூறுகையில், ""ஆர்.கே.சிங், பா.ஜ., பக்கம் தாவி, பல நாட்கள் ஆகிவிட்டது. அதனால் அவரின் பேச்சை பெரிதாக எடுக்கத் தேவையில்லை,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyam nelatur - Oak Brook,IL-60523,யூ.எஸ்.ஏ
15-ஜன-201420:58:13 IST Report Abuse
shyam nelatur Recently I read the following: PROFILE OF INDIA 's Home Minister. As our duty please forward to all your contacts and make them aware. For those who can not see the image : Sushil Kumar Shinde Failed thrice in class 10. Worked as Police cons. Was thrown out of the the job on charges of corruption. Joined Congress. Today, he is our home minister. Apart from this I am of the opinion that each and every one of the Maharashtra minitry is hand in glove with the underworld dons of Bombay. Every film made in Bombay is financed by the UW dons. Our Great MK is a don. The main aim is to make money at any cost. What is it that these persons going to carry with them when their life comes to an ? Why don't they work with conscience? Deterrent punishment only will bring in discipline in public life. How can this be effected? This cation is in the hands of the VOTERS. Please think ten times before you vote for a contestant in an election. Go through their public life chapterwise and decide about voting. JAI HIND.
Rate this:
Share this comment
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
15-ஜன-201422:33:43 IST Report Abuse
Mohan Ramachandranஎனக்கு ஒரு சந்தேகம் கடந்த 20 வருடங்களாக மும்பை பட உலகம் அண்டர் வேர்ல்ட் தாதா க்களின் பிடியில் உள்ளது .மேலும் முஸ்லிம் நடிகர்கள்தான் dominate செய்கிறார்கள் .1)சாருக்கான் ,2)சல்மான் கான் ,அமீர் கான் ,சயிப் அலி கான் இவர்கள் ஆதிக்கம்தான் உள்ளது . மற்ற ஹிந்து நடிகர்கள் அக்ஷய் கண்ணா ,அஜய் தேவகன் சாஹிட் கப்பூர் மற்றும் பலர் அவ்வளவு பிரபலமாக வில்லை .இது ஏன் ?...
Rate this:
Share this comment
suman - Madurai,இந்தியா
16-ஜன-201400:51:30 IST Report Abuse
sumanஇந்த கேள்வி பல பேருக்கும் தோன்றும் ஒன்றாகும்.. அதற்கு பதிலும் உங்களுடைய முதல் வரியிலேயே உள்ளது.. அந்த தாதாக்களை ஒழித்தால்தான் பட உலகம் மட்டுமின்றி இந்தியாவும் இந்த உலகமும் உருப்படும்...
Rate this:
Share this comment
suman - Madurai,இந்தியா
16-ஜன-201400:52:59 IST Report Abuse
sumanஷிண்டே Should be hanged...
Rate this:
Share this comment
Cancel
Saravanan Pillai - Chennai,இந்தியா
15-ஜன-201418:51:17 IST Report Abuse
Saravanan Pillai நான் சராசரி மனிதன் எனக்கு பயம் வந்துவிட்டது ...ஏன் என்றால் இந்த நாட்டை இந்த ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்க யார்வருவார் என்று. இன்னும் சில வருடங்களில் இந்த நாடு தீவிரவாதிகளின் நாடாக மாறலாம் ஏன் என்றால் எனக்கும் கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் போலிருக்கிறது இந்த ஊழல்வாதிகளை அழிக்க ...............
Rate this:
Share this comment
jay - toronto,கனடா
15-ஜன-201423:54:10 IST Report Abuse
jayசாதாரண மனிதர் ஒரு கட்சி துடங்க்குஇ ஆம் ஆத்மி இப்ப எவ்வளவு பெரபலம் ,,, பெரிய கட்சியே தடுமாறுது,,,, இவர்கர் அதை ஆரம்பித்து 1 வருடம் கூட இல்லை .. அவர்களை பார் தம்பி .. அதேபோல் ஆயுதம் ஏந்திய பிரபாகரனை பார்.. அவர் புள்ளைகளுக்கு நடந்த கதியே பார் (ஒருவரையும் புண்படுத்த சொல்ல வில்லை ,, இந்த தம்பியை திருத்த சொலுகெரென் ) .... உன் மன தி ல் வன்முறை உன்றிவே விட்டது ... உனது எண்ணமே ,, வான் முறை செய்து ஓடி ஒளியலாம் என்று நெனைப்பு ...ஒருவரும் உன்னை பிடிக்க மாட்டார்கள் என்று நேனைக்குராய் ... இது கோழை தனம் ... ஜென நாயகத்தை நம்பு ... நேரம் இருந்தால் சட்ட திடத்தை வாசி .. இன்டெர் நெட்டில் நெறைய இருக்கு .. இந்த சட்ட திடம் இடியப்ப சிக்கலை விட சிக்கல் ... .. இதை திருத்த பொது நல வழக்கு என்று இருக்கு , இலவசமா கஷ்டம் இல்லாம இந்த சட்டத்தை திருத்தலாம் ... ட்ராபிக் ரங்க சாமி என்று ஒருவர் இருக்கார் ...டி நகர் , ரங்கநாதன் தெருவெல் கடைகள் சட்ட விரோத மாக ஆக்கிரமிப்பு உள்ளது என்று உயர் நீதி மன்றத்தி ல் பொது நல வழக்கு போட்டார் ... அவ்வளவுதான் பெட்டிக்கடை இருந்து பெரிய (பல்வான்) கடை எல்லாம் முடி விட்டார்கள் ... மாத கணக்கில் இந்த பெரிய (கோடீஸ்வர) கடைகாரர்கள் வேற வழி இல்லாம கடையை முட வேண்டி வந்தது ... இவளவுக்கு , டாபிக் ரங்கசாமி ஒரு குடு குடு கிழவன் (மனிக்கவும் ) ,,என்ன தம்பி நீ, இந்த குடு குடு தாத்தாவோ எவ்வளவு பண்றார் நீ என்ன தம்பீ ,, சி.. சி ...சீ .... , சட்டத்தை நம்பு ... உன் ஊரில் லைபேரி போயி பொது நல வழக்கு எப்படி செய்வது என்று கேளு ?. சொல்லி குடுப்பார்கள்.பக்கத்தில் சட்ட கல்லுரி இருக்கு,, மாணவர்களே கேள் ... சரி இதை ஆவது செய் , இப்ப சினி மாவில் புகை பிடிப்பது ,,, மது அருந்துவது ,, தேவை இல்லாம திநி க்குரார்கள் ,,, போடு ராஜா போடு ,,, பொது நல வழக்கு போடு ... கை யில் சாவியை வைத்து கிட்டு ,, சாவிக்கு ஊர எல்லாம் தேடிய கதையா இருக்கு உன் கதை ... முதலில் உன் நண்பர்கள் மாற்று .. சட்டம் தெரிந்தவர்களோடு தொடர்பு வை ......
Rate this:
Share this comment
Saravanan Pillai - Chennai,இந்தியா
16-ஜன-201420:56:46 IST Report Abuse
Saravanan Pillaiநீங்க சொல்லுவது ட்ராபிக் ராமசாமியை அவர் போட்ட பொதுநல மனு என்ன ஆச்சி இப்போது தி. நகர் ரங்கநாதன் தெருவில் எல்லாம் கடைகளும் திறந்துவிட்டாச்சி இது எப்படி... எல்லாம் ஊழால் பெருச்சாளிகள் நீதிபதிகளைகூட காசு கொடுத்து வாங்குவார்கள் அண்ணே ... உங்களுக்கு சட்டம் தெரியலாம் ஆனால் அதில் உள்ள ஓட்டைகள் தெரியாது அண்ணே ........
Rate this:
Share this comment
Cancel
KarlMarx - Chennai,இந்தியா
15-ஜன-201417:12:56 IST Report Abuse
KarlMarx இந்திய மக்களின் ரத்தத்தை குழல் போட்டு உறிஞ்சும் காட்டேறிகள் இந்தகைய அரசியல் வாதிகள். தாவூதுக்கு உதவி செய்யும் இவர், தேவயாணி என்கிற தேச மானம் கெடுத்த பெண்ணுக்கும் துணை போய் உள்ளார் இதன் மூலம் காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியின் தேச பற்று அனைவருக்கும் விளங்குகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X