சிறுபான்மையினர் நலனை மட்டும் யோசிப்பதா? நரேந்திர மோடி பாய்ச்சல்

Updated : ஜன 17, 2014 | Added : ஜன 16, 2014 | கருத்துகள் (85)
Advertisement
சிறுபான்மையினர் நலனை மட்டும் யோசிப்பதா?  நரேந்திர மோடி பாய்ச்சல்

காந்திநகர் : 'மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சிறுபான்மையினர் நலத்தை மட்டுமே யோசிக்கிறார். நாட்டில் உள்ள மற்ற பிரிவினர்களின் நலனையும் கவனிக்கும்படி, அவரை அறிவுறுத்துங்கள்' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதம்:மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே, கடந்த வாரம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் உள்ள சிறை களில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், எந்தவித விசாரணையும் இல்லாமல், பல ஆண்டுகளாக வாடுவதாகவும், அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். அவர், சிறுபான்மை சமூகத்துக்கு மட்டும், உள்துறை அமைச்சரல்ல; நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும், உள்துறை அமைச்சர். எனவே, சிறுபான்மையினர் நலனை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் நலனிலும், அவரை கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துங்கள். தேர்தலில், சிறுபான்மை சமூகத்தின் ஓட்டுகளை பெறுவதற்காக, இப்படி அரசியல் நாடகம் நடத்துகிறார்.

அவரின் கருத்துக்களும், ஆலோசனைகளும், இதற்கு முன், எந்த ஒரு அமைச்சராலும் கூறப்படாதவை. அவரின் கருத்துக்கள் விசித்திரமாக உள்ளன. இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.குற்றத்தை யார் செய்தாலும், குற்றம் குற்றமே. இதில், மதம், எங்கு வந்தது? மதத்தை அடிப்படையாக வைத்தா, ஒருவரை குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வது? நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக, சுஷில் குமார் ஷிண்டே, கருத்து தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அதில், நரேந்திர மோடி எழுதியுள்ளார்.


'திட்டமிடல் இல்லை':

காந்திநகரில், இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளன கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:நம்நாடு தொழில் ரீதியாக, வளர்ச்சி அடைவதற்கான, வாய்ப்புகளுக்கு ஒன்றும், பற்றாக்குறை இல்லை. ஆனாலும், முறையான திட்டமிடல் இல்லாததால், சாதனையாளர்கள் குறைவாக உள்ள நாடாகியுள்ளது. நாட்டில், ஒரு நம்பிக்கையான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம், இதில், மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாம் நன்றாக திட்டமிட்டிருந்தால், மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கலாம். பிரதமர் மன்மோகன் சிங், உள்ளார்ந்த வளர்ச்சி பற்றியே பேச விரும்புகிறார். கல்வி மூலம், ஏழைகள் மத்தியில் திறனை அதிகரிக்கும் வரை, இந்த உள்ளார்ந்த வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை. தாது வளங்களை, நாம் தொடர்ந்து ஏற்றுமதி செய்தால், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் உருவாக்க முடியாது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைமையே, இங்கு உள்ளது.இவ்வாறு, மோடி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
17-ஜன-201400:21:04 IST Report Abuse
Sundeli Siththar பேசாமல் சிறுபான்மையினரின் குற்றங்களை இந்துக்கள்மீது போட்டுவிடலாம் என்று ஷிண்டே அவர்கள் சொல்லாமல் இருந்ததற்கு சந்தோஷப் படுவதை விட்டுவிட்டு இப்படி அவரை சாடுகிறீர்களே..
Rate this:
Share this comment
Cancel
Vinod - Bangalore,இந்தியா
16-ஜன-201423:06:04 IST Report Abuse
Vinod திரு மோடி அவர்கள் உண்மையை, நியாயத்தை பேசியிருக்கிறார். அவர் கருத்துகள் யாவும் மிகவும் உயர்வாகவே இருக்கும். சிறுபான்மை அல்லது ஒரு பிரிவிற்காக மட்டுமே ஆட்சி நடத்தும் காங்கிரஸ்'யை, இந்துக்கள் புறகணிக்க வேண்டும். பெரும்பான்மை சமுகத்தை இழிவாக நடத்தும் காங்கிரஸ்'யை தோற்கடித்தே ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
deepthika - Chennai,இந்தியா
16-ஜன-201421:27:33 IST Report Abuse
deepthika சிறுபான்மையினர் கூட முன்னேறிய மாதிரி ஒண்ணும் தெரியலியே. ஒருவேளை பயங்கர வாதிகளை கூறுகின்றாரோ. மோடி அவர்கள் ஒரு வேளை உத்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்திருந்தால் அங்கு இப்போது நிகழும் கொடிய மத கலவரத்தை அவர் மேல் பழி போட்டு பிழைக்கலாம். ஆனால் அங்கு நடப்பது மத சர்பற்ற அரசு அல்லவா? காங்கிரஸ்சுக்கு ரொம்ப கெட்ட காலம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X