'கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்': கருணாநிதி

Updated : ஜன 16, 2014 | Added : ஜன 16, 2014 | கருத்துகள் (182)
Share
Advertisement
தென் சென்னை மாவட்ட, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவுபேரவை சார்பில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று முன்தினமும், நேற்றும், இன்றும், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நடந்த துவக்க விழாவில், கனிமொழி பேசியதாவது:எந்த ஒரு நாட்டில், சரித்திரத்தை மனிதன் மறந்து விடுகிறானோ, அவன், வாழ்க்கையை மறந்து விடுகிறான். தமிழர்கள் ஒன்று திரண்டு, வீழ்ந்த
'கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்':   கருணாநிதி

தென் சென்னை மாவட்ட, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவுபேரவை சார்பில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று முன்தினமும், நேற்றும், இன்றும், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் நடந்த துவக்க விழாவில், கனிமொழி பேசியதாவது:எந்த ஒரு நாட்டில், சரித்திரத்தை மனிதன் மறந்து விடுகிறானோ, அவன், வாழ்க்கையை மறந்து விடுகிறான். தமிழர்கள் ஒன்று திரண்டு, வீழ்ந்த சமுதாயத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.எந்த மதம், ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்றால், கொண்டாட வேண்டிய முக்கிய விழா, பொங்கல் திருநாள். இங்கு நடத்தப்படுகிற, கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், சாதாரண மனிதனின் வாழ்க்கையை, தூக்கி நிறுத்துவதற்காக நடத்தப்படுபவை. பாரம்பரிய மற்றும் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை கொண்டாடவில்லை என்றால், நம் சரித்திரத்தை இழந்தவர்களாக ஆகி விடுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர், கருணாநிதி பேசியதாவது:தற்போது, ஆட்சி மாறினால், கலாசாரமும், பண்பாடும் மாறவேண்டிய நிலையே உள்ளது. போற்றி, பாராட்டப்பட்ட கலைகள் எல்லாம், குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.'தை பிறந்தால், வழி பிறக்கும்' என்று சொல்ல தெரியும். ஆனால், தமிழ் புத்தாண்டு என்றால், எப்போது என்று தெரியாத நிலையில், தமிழன் இருந்தான். தை முதல் நாள் தான், தமிழ் புத்தாண்டு என்பதை, திராவிட இயக்கமே ஞாபகப்படுத்தியது.நானே அதிசயிக்கத்தக்க வகையில், ஏன், பொறமைப்படும் அளவிற்கு, கவிதை, கலைத் துறையில், கனிமொழி, சிறந்து விளங்குகிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.

- - நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (182)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
17-ஜன-201405:57:14 IST Report Abuse
P. Kannan இப்படி எல்லாம் சொன்னால் அந்த அம்மாவிற்கு ஒரு பில்ட் அப் என்று எண்ணினால் , அது தவறு என்று எனக்கே பட்டது .அது தமிழ் கூறும் நல் உலகிற்கு படாதா என்ன ????
Rate this:
Cancel
suman - Madurai,இந்தியா
17-ஜன-201401:10:14 IST Report Abuse
suman நீங்கள் கவிதை என்று ஏதாவது உளறி அதை தொண்டர்களுக்கு கொடுத்து ஏமாற்றுவீர்களே அதிலா? நீங்கள் மனைவி துணைவி இணைவிஎன்று பட்டியல் போடுவீர்களே அந்த மாதிரி உங்கள் புதல்வி ஏதாவது?
Rate this:
Cancel
usha - Chennai,இந்தியா
17-ஜன-201400:37:59 IST Report Abuse
usha கவிதை, கலை துறையில் சிறந்து விளங்குபவர் வேறு யாரும் வையத்தில் இல்லையா? ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் ...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X