ஜெ., பிரதமர் கனவு என்னானது? மோடியை ஆதரிக்கிறார் சோ

Updated : ஜன 17, 2014 | Added : ஜன 16, 2014 | கருத்துகள் (152)
Advertisement
ஜெ., பிரதமர் கனவு என்னானது? மோடியை ஆதரிக்கிறார் சோ

''பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல் குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக, பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, 'துக்ளக்' வார இதழின் ஆசிரியர், சோ ராமசாமி கூறினார்.

'துக்ளக்' வார இதழின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், சோ பேசியதாவது:'ஊழல் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல' என, அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அதை ஏற்றுக் கொண்டாலும், ஊழலில், பா.ஜ., முதல் வகுப்பு மாணவனாக உள்ளது. காங்கிரஸ் - தி.மு.க., உட்பட, பல கட்சிகள், ஊழலில், பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளன.


எந்த பயனுமில்லை:

அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, டில்லியில், 28 சதவீத ஓட்டுகளைபெற்றுள்ளது. அக்கட்சிக்கு எதிராக, 72சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.ஆம் ஆத்மி, ஓட்டுகளை பிரிக்கும்கட்சியாகவே இருக்கும்; அதனால், எந்தப் பயனும் இல்லை.கெஜ்ரிவால், அரசு அதிகாரியாக இருந்தவர். அவர், வெளிநாட்டுக்கு படிக்க சென்றது தொடர்பாக, அரசுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில், அதை செலுத்தவில்லை. நடவடிக்கை பாயும் என்ற நிலையில், அவர் பணத்தை செலுத்தினார். அவரது கட்சியில் உள்ளவர்களும், பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களே.


சரிந்து விட்டது:

அவர்கள் மீதும், பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த சில நாட்களில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, தன் முந்தைய நிலையை, கெஜ்ரிவால் மாற்றிக் கொண்டே வருகிறார்.தமிழகத்தில், விஜயகாந்தின், தே.மு.தி.க.,வுக்கு, ஓட்டு வங்கி இருந்தது. இப்போது, அது சரிந்து விட்டது. அக்கட்சி, யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், அந்த கூட்டணி பெரும் வெற்றி பெறும் என, சொல்ல முடியாது.தமிழகத்தில், திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்தாலும், பயங்கரவாதத்தை அடக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.ஜெயலலிதா மீது தொடரப்பட்ட,12 வழக்குகளில், 11 வழக்குகளில்,அவர் விடுதலை ஆகிவிட்டார். மீதமுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில்,அரசியல் தலையீடு உள்ளது.நீதிபதிகளை மாற்றுவது, வழக்கறிஞர்களை மாற்றுவது போன்ற வேலைகளை, மத்திய அரசில் செல்வாக்குப் பெற்றுள்ள, தி.மு.க., செய்கிறது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது தண்டனை கிடைத்து விடாதா என, அக்கட்சி எண்ணு கிறது. ஆனால், சொத்துக் குவிப்புவழக்கிலும், ஜெயலலிதா விடுதலையாவார்.


வாய்ப்பு குறைவு:

தி.மு.க., குடும்பக் கட்சியாகி விட்டது. அக்கட்சியின் தலைவர், கருணாநிதியின்மீது, தொண்டர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. அது, இப்போது குறைந்து விட்டது. குடும்பக் கட்சியாக உள்ள, தி.மு.க.,வுக்கும், அதனுடன் கூட்டணி சேரும் கட்சிக்கும், லோக்சபா தேர்தலில், ஓட்டுப் போடக் கூடாது; அந்தக்கூட்டணியை வீழ்த்த வேண்டும்.மத்தியில், மூன்றாவது அணி வரும் என்பதற்கு வாய்ப்பில்லை. மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள, கட்சிகளுக்கு இடையே, ஒற்றுமை இல்லை. ஒரு கட்சி, மற்றொரு கட்சிக்கு எதிரியாக உள்ளது. இக்கட்சிகள் இணைந்து, மூன்றாவது அணியை அமைக்க வாய்ப்பு குறைவு.தமிழகத்தில், கூட்டணிகள் உருவாவதில், குழப்பமான சூழல் உள்ளது. பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல் குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக, பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு, சோ பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Chennai,இந்தியா
17-ஜன-201421:21:03 IST Report Abuse
Indian 2014ல் இந்தியாவின் பிரதமர் திரு கேஜ்ரிவால் வாழ்க...
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
17-ஜன-201419:30:51 IST Report Abuse
Mohan Ramachandran இவரின் டாஸ்மாக் பிரசாரம் 'இப்பொழுது இதை ஒழிக்க முடியாத அளவு வளர்ந்து விட்டது ஒழுங்கு படுத்தலாம் "குடியை ஒழுங்கு படுத்தலாம் என்று சொன்ன ஒரே நபர் சோ ராமசாமி அவர்கள் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .இந்த குடி அரக்கன் கட்டுமரத்தால் தமிழ் நாட்டுக்கு அறிமுகம் ஆனபொழுது இவர் உதிர்த்த முத்துக்கள் ஏராளம் .அதில் ஒன்று .அப்பொழுது எல்லாம் துக்ளக் மாதம் இருமுறை .கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு இவர் அளித்த பதில் வாசகர் கேள்வி இந்த முறை சுதந்திர தினம் கொண்டடிநீர்களா ?இல்லை இன்னும் 15 நாளில் துக்க நிகழ்வு நடக்க உள்ளது ஆதலால் கொண்டாடவில்லை (ஆகஸ்ட் 30 ம் தேதி சாராய கடைகள் திறக்க படும் நாள் )இப்பொழுது அந்த குடியை ஒழுங்கு படுத்த சொல்கிறார் .எப்படி என்பதை அவர் விளக்க வேண்டும் ஒரு கட்டிங் வாங்கினால் இரண்டாவது கட்டிங் ப்ரீ .சைடு டிஷ் ப்ரீயா.பண்டிகை நாட்களில் இலவச டாஸ்மாக்க ?குடித்து விட்டு வந்தால் பஸ் இலவசமா ?ஆட்டோக்கள் ப்ரசவ்திற்கு இலவசம் என்பது போல் .மேலும் ஊழல் கட்டுக்கு அடங்காமல் உள்ளது .அதை ஒழிக்க வேண்டாமா .இல்லை அதையும் டாஸ்மாக் கடைகளை போல் ஒழுங்கு படுத்தலாமா ?தாங்கள் எடுத்த துக்ளக் சினிமா வில் காண்பித்து போல் அதை சட்ட பூர்வமாக்கி விடலாமா .தீவிரவாதத்தை அடியோடு வெறுக்கும் நீங்கள் அதை ஒழுங்கு படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் .வாரத்திற்கு ஒரு பாம் தான் வெடிக்கலாம் என்று ஒழுங்குமுறை கொண்டு வர சட்டம் இயற்றலாமா ?ஊழலோடு எப்பொழுது சேரலாம் அதற்க்கு ஏதேனும் விதி விளக்கு உண்டா ?நீங்கள் 1996 ல் சேர்ந்த மாதிரி .அப்பொழுது கட்டுமரத்தை சந்திக்க அறிவாலயம் படி எரீனீரெ ?1999 ல் வாஜ்பாய் அரசு ஒரு வோட்டில் கவிழ்ந்த பொழுது இதே ஜெயா லலிதாவை கடுமையாக விமர்சித்து எழுதினீர் .அப்பொழுது தி மு க நல்ல கட்சியாக உங்களுக்கு காட்சி அளித்ததா ?மீண்டும் 2004 ல் தி மு க தங்களுக்கு கசந்ததா?ஆமாம் எனக்கு ஒரு டவுட் டாஸ்மாக் கடைக்கு சென்ற பின்தான் விழாவிற்கு சென்றீர்களா ? இல்லை வீட்லெயா ?
Rate this:
Share this comment
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
18-ஜன-201417:49:03 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaranஅன்பு நண்பர் மோகன் ராமச்சந்திரன் அவர்களுக்கு .டாஸ்மாக் இருப்பதால் தான் மக்கள் குடிக்கிறார்கள் என்று நீங்கள் கருதினால் அது தவறு. கள்ளுக்கடை கருணாநிதி திறந்தபோதும் மக்கள் குடித்தார்கள். புரட்சி தலைவர், மக்கள் திலகம் மது விலக்கு பிரச்சாரம் செய்தும் திருந்தாத இந்த குடிமக்கள் கள்ள சாராயம் /விஷ சாராயம் அருந்தி மாண்டார்கள். இன்று டாஸ்மாக் மூடவேண்டும் என்று உண்மையில் விரும்புகிறவர்கள் கள்ள சாராய வியாபாரிகளே. .உண்மையில் மக்கள் குடிபொதையிலிருந்து மீள வேண்டுமெனில் ,உங்களை போன்றோர் அந்த குடிமகன்களை திருத்த முயலவும் .இன்று பள்ளி மாணவ/ மாணவிகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அதை எப்படி தடுக்க முடியும். தன குடும்பத்தினரை கட்டுபடுத்த முடியாத காரணத்தால் அரசை குறை கூறுவது என்ன நியாயம் . திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது. ராமாயண காலத்திலேயே திருட்டும் இருந்திருக்கிறது. குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது. இது எந்த அரசாலும் தடுக்க முடியாது . தனி மனித ஒழுக்கம் மீறும்போது ,முதலில் அந்த குடும்பம் தான் பாதிக்கபடுகிறது, அந்த குடிமகன் செய்யும் தவறுகளால் சமுதாயம் பாதிக்கபடுகிறது. தமிழகம் எவ்வளவோ தேவலை. மற்ற மாநிலங்களுக்கு ஒரு முறை (குஜராத்தையும் சேர்த்து ) சென்று வந்தால் உங்களுக்கு உண்மை நிலை விளங்கும்....
Rate this:
Share this comment
Cancel
vaikundarajan - delhi,இந்தியா
17-ஜன-201412:00:07 IST Report Abuse
vaikundarajan யோ சோ, சுப்ரமணிய சாமி இவனெல்லாம் ஒரு ஆளு இவனுங்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். இவனுங்க என்ன புடுங்குனாலும் இனி இவனுங்க கொள்கையை ஒருபோதும் இந்தியாவில் கொண்டுவரமுடியாது. அப்படி முயற்சித்தால் அதன் விளைவை இவனுங்க பார்ப்பானுங்க. அதோடு தினமலர் ஒருதலை பட்ச பஜனையை நிறுத்திவிடும். இது நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X