"தமிழகம், அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், நாம் சொல்வதை கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும். அதற்கு எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தேர்தல் பணியைத் துவங்குங்கள்," என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தியாவிலேயே, தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும். தமிழர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்திற்கு, உரிய நிதியும், நீதியும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், நான் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். இந்த லட்சியம் நிறைவேற வேண்டும் என்றால், மாநிலங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய, அதிக அதிகாரத்தை கொடுக்கக்கூடிய, கூடுதல் நிதி ஆதாரத்தை அளிக்கக்கூடிய, மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாத, ஒரு மத்திய அரசு அமைய வேண்டும். தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசோ, அதிகாரங்களைப் பறித்து, மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதிக்கக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மத்திய அரசுக்குத் தான், சில மாதங்களுக்கு முன் வரை, ஆதரவு அளித்து வந்தார் கருணாநிதி. தமிழகம், அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், நாம் சொல்வதை கேட்கக்கூடிய மத்திய அரசு அமைய வேண்டும். 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும். அதற்காக, எம்.ஜி.ஆர்., பிறந்த நல்ல நாளில், லோக்சபா தேர்தல் பணிகளைத் துவங்குங்கள். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE