வைகுண்ட ஏகாதசி அன்று திருமலையில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள்?

Added : ஜன 17, 2014 | கருத்துகள் (2)
Advertisement

திருப்பதி:வைகுண்ட ஏகாதசி நாளில், மும்பை நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு, திருமலையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாக, தெலுங்கு தேச கட்சி, எம்.எல்.ஏ., முத்து கிருஷ்ணம நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள், 20 பேர், வைகுண்ட ஏகாதசி அன்று, ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்துள்ளனர். திருமலையில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில், அவர்கள் தங்கியுள்ளனர். சாதாரண பக்தர்கள் அடையாள அட்டை கொண்டு வர மறந்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கும் தேவஸ்தானம், வி.ஐ.பி.,களுடன் வந்தவர்களை, அடையாள அட்டை இல்லாமல் அனுமதித்தது ஏன்? வந்தவர்கள், திருமலையின் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அறிந்து சென்றிருந்தால், திருமலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது யார்?
இவ்வாறு, அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால், ""மகாராஷ்டிர முக்கிய அரசியல் பிரமுகரான, அஜய் தவேதார்வுடன், 20 பேர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், யார் என, விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார். இந்நிலையில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் மீது, தேவஸ்தானம் தொடர்ந்த வழக்கு, நேற்று திரும்ப பெறப்பட்டது.

திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், பாபி ராஜு அலுவலகம் மற்றும் செயல் அதிகாரி அலுவலகம் முன், "தர்ணா' செய்த பக்தர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபால், போலீசாருக்கு பரிந்துரை செய்தார்.
அவர்களும், "வீடியோ' பதிவை ஆதாரமாக கொண்டு, பிரிவு, 341ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஆதரவு வலுத்ததால், தேவஸ்தான செயல் அதிகாரி, வழக்கை திரும்ப பெற்றதாக, கோவில் இணை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vramanujam - trichy,இந்தியா
17-ஜன-201411:05:54 IST Report Abuse
vramanujam davood இப்ராஹிமும் தேவை என்றால் அனுமதிக்கப்படுவார். காங்கிரெஸ் அயோக்கியர்கள்
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
17-ஜன-201405:58:45 IST Report Abuse
அறிவா லயதாத்தா ஏற்கனவே சாராய வணிகர் ஆதி கேசவலுவை தேவஸ்தானத் தலைவராக்கி புனிதப் படுத்தியது காங்கிரச இப்போ இது வேறா? ஏடு கொண்டலவாடா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X