சமீப காலமாக அனைவரின் மனதிலும் உள்ள மிகப் பெரிய கேள்வி, லோக்சபா தேர்தலுக்கு பின் மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியா, தலைமை இல்லாத மூன்றாவது அணியா அல்லது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா, இவற்றில் எது மக்களின் தேர்வு என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி நாட்டில் உள்ள பெரும்பான்மையானோரின் தேர்வு அல்லது விருப்பம், பா.ஜ.,வின் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்பது. 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரசை ஆதரித்த பலர், 2014 தேர்தலில் மோடியை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். இதற்கு காரணம் என்ன? இதற்கு மக்கள் கூறும் காரணமாவது : "நான் எந்த எந்த கட்சியின் உறுப்பினரோ அல்லது ஆதரவாளரும் இல்லை; 2009ம் ஆண்டு மாநிலத்தில் தெலுங்குதேச கட்சியையும், மத்தியில் காங்கிரசை கட்சியையும் ஆதரித்தேன்; சந்திரபாபு நாயுடுவின் வளர்ச்சி அறிவிப்புக்களும், சோனியாவின் மகாத்கா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமுமே இதற்கு காரணம்; ஆனால் இந்த முறை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது என தெளிவாக உள்ளேன்; காங்கிரஸ் கட்சி நாட்டை தவறாக வழிநடத்தி உள்ளது என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளனர்; இதனால் காங்கிரசை முற்றிலுமாக புறக்கணித்து விட்டேன்; தற்போது 3வது அணியா, தே.ஜ., கூட்டணியா என்பது தான் என் குழப்பம்."
ஐக்கிய முற்போக்கு அரசு-2ல் நாடு கீழ்நிலைக்கு சென்றுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மீண்டும் தேர்வு செய்தாலோ அல்லது 3வது அணியை தேர்வு செய்தாலோ நாடு பல அதிர்ச்சிகரமான வீழ்ச்சிகளை சந்திக்க நேரிடும்; 3வது அணியை பொருத்தவரையில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கிடையே பல்வேறு கருத்து மற்றும் கொள்க முரண்பாடுகள் நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ், சில்லரை வர்த்கத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது. ஆனால் ஜெயலலிதா அதனை ஆரித்துள்ளார். அரசு வேலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சமாஜ்வாதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி, இதனை ஆதரித்து பல யோசனைகளையும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட இவர்கள் எவ்வாறு ஒன்றாக இணைந்து, கூட்டணி அமைத்து, நிலையானதொரு நல்லாட்சி வழங்க முடியும்? 3வது அணியின் தலைவர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை; இருப்பினும் இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் கனவில் உள்ளனர். இதனால் 3வது அணிக்கு ஓட்டளிக்க வாய்ப்பே இல்லை.
மோடி ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி:
நாட்டை சீரழித்து விட்ட காங்கிரஸ், பல்வேறு குழப்பங்கள் நிறைந்த 3வது அணி ஆகியவற்றிற்கு மாற்றாக மிகச் சிறந்த தலைமையை, சிறந்த ஆட்சியை வழங்கக் கூடியவர் மோடி மட்டுமே. குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் வளர்ச்சியே, தற்போது இருக்கும் நெருக்கடியான சூழலில் இருந்து நாட்டை காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. வேளாண்மை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் ஒரு மாநிலத்தில் ஏற்படுத்திய வளர்ச்சியை ஏன் நாடு முழுவதும் ஏற்படுத்த முடியவில்லை? இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு புதிய காலத்தை குஜராத்தில் அவர் ஏற்படுத்திக் காட்டி உள்ளார். அதனால் தான் அவர் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் நான் விரும்புகிறேன்; பெரும்பாலான மக்கள் பல்வேறு காரணங்களுக்காக மோடியை ஆதரிக்கின்றனர். இருப்பினும் மோடியை ஆதரிப்பதற்கு சரியான காரணம், இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பார் என அவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE