மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி டில்லி ஓட்டலில் தற்கொலை?

Updated : ஜன 18, 2014 | Added : ஜன 18, 2014 | கருத்துகள் (66)
Advertisement
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி டில்லி ஓட்டலில் தற்கொலை?

புதுடில்லி: மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா, டில்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் தற்கொலை செய்திருக்கலாம்' என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சசி தரூர். கேரளாவை சேர்ந்த இவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்த சசி தரூருக்கும், காஷ்மீரை சேர்ந்த சுனந்தாவுக்கும், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சுனந்தாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவர், விபத்தில் இறந்து விட்டதால் தனியாக இருந்த சுனந்தாவும், மனைவியை விவாகரத்து செய்து தனியாக இருந்த சசி தரூரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில், சசி தரூருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண் நிருபர் மெஹர் தரார் என்பவருக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாக, சுனந்தாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சசி தரூருக்கும், மெஹருக்கும் இடையிலான ட்விட்டர் உரையாடல்கள் பலவற்றை, சுனந்தா வெளியிட்டார்.தன் கணவரின் ட்விட்டர் கணக்கில் இருந்து, மெஹருக்கு தாறுமாறான செய்திகளை சுனந்தா அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ கைப்பற்றி விட்டதாக கூறி, நிலைமையை சமாளிக்க முயன்றார். ஆனால், அதற்குள், தன் கணவரை, மெஹர் தரார் பறிக்க நினைப்பதாக, சுனந்தா பேட்டியளித்து, சசி தரூருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். "மெஹர் ஒரு ஐ.எஸ்.ஐ., உளவாளி. அவரால் தன் கணவர் உயிருக்கு "ஆபத்து ஏற்படக்கூடும். அவர், மற்றொரு பெண்ணின் கணவரை கைப்பற்ற முயற்சிக்கிறார்' என்றெல்லாம், சுனந்தா புகார் கூறியிருந்தார். இதற்கு மெஹர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், விவகாரம் குறித்து ஒரு சில நிருபர்களிடம் பேசிய சுனந்தா, தான் சசி தரூரை விவாக ரத்து செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.இது தொடர்பாக, கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு, டில்லி லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்த நிலையில் சுனந்தா கிடந்தார். பாகிஸ்தான் பெண் நிருபர் தொடர்பு குறித்து, தன் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.சுனந்தா மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என கூறிய டில்லி போலீசார், பிரேத பரிசோதனை ஆர்.டி.ஓ., முன்னிலையில் நடைபெறும் என்று
நேற்றிரவு தெரிவித்தனர்.


சர்ச்சைகளின் நாயகன் சசி தரூர்:

இந்தியாவில் "ட்விட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான பேர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, "கால்நடை வகுப்பு' என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார். ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர்.
தற்போது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதால், சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


பதவி பறிபோக காரணமான சுனந்தா!


சசி தரூர், ஐ.நா., சபையில் உதவி பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். இந்தியா சார்பில், ஐ.நா., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அவர், அதில் தோல்வியுற்றதால் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவருக்கும், பெண் தொழிலதிபரான சுனந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமான சில மாதங்களிலேயே, கேரளாவுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில், சுனந்தாவுக்கு பங்கு வாங்கிய சர்ச்சை வெடித்தது.முறைகேடான வழியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக, சுனந்தா மீதும், அதற்கு உதவியாக இருந்ததாக சசி தரூர் மீதும் புகார் கிளம்பியது. இதையடுத்து, சசி தரூரை, ராஜினாமா செய்யும்படி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. பதவி இழந்த சசி தரூர், தொடர்ந்து அரசியலில் நீடித்தார். சில மாதங்களுக்கு முன் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், அவருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டது. முந்தைய திருமணங்கள் மூலம் சசி தரூருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் திருமணத்தின் மூலம் சுனந்தாவுக்கு, ஷிவ் மேனன் என்ற மகன் இருக்கிறார்.


பாக்., பெண் நிருபர் அதிர்ச்சி:

சாவதற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, "எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்."என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சுனந்தா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரச்னைக்கு காரணமான பாக்., பெண் நிருபர் மெஹர், தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
18-ஜன-201419:46:09 IST Report Abuse
 ஈரோடுசிவா காங் _என்றாலே ...கொலை ...கொள்ளை ..கற்பழிப்பு ...கள்ளக் காதல் ...இப்போது ...,எதிரிநாட்டு உளவாளியுடன் தொடர்பு ...?முட்டாள் மக்களின் தேசத்தில் திருடர்களின் ராஜ்ஜியம் அமோகமாய் நடக்கிறது ...
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
18-ஜன-201419:38:13 IST Report Abuse
 ஈரோடுசிவா டெல்லி போலிசின் கைக்கு வந்த இந்த வழக்கு .,காங் -நிர்பந்தங்களுக்கு பதிலடி கொடுக்க ஆமாத்மிக்கு ஒரு வாய்ப்பாக அமையும் ...
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
18-ஜன-201419:33:12 IST Report Abuse
 ஈரோடுசிவா சசியின் காதலி பாகிஸ்தான் நிருபரா இல்லை உளவாளியா ...?சசிக்கு இந்த பாக் _காதலியோடு எத்தனை வருட பழக்கம் ...சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்ற இவர் ஒரு எதிரி நாட்டு உளவாளி என்று சந்தேகிக்கப் படும் பெண்ணுடன் காதல் மட்டும் செய்தாரா .... நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் இதுபோன்ற மந்திரிகளின் மண்டைக்குள் பாதுகாப்பாக இருக்குமா ...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X