பொது செய்தி

இந்தியா

மர்ம நோயால் இறந்தாரா சுனந்தா?கேரள டாக்டர்கள் பரபரப்பு தகவல்

Updated : ஜன 20, 2014 | Added : ஜன 19, 2014 | கருத்துகள் (24)
Advertisement
மர்ம நோயால் இறந்தாரா சுனந்தா,கேரள டாக்டர்கள் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம் : மத்திய அமைச்சர் சசி தரூர், கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியிலிருந்து தான், அவர் தேர்வு செய்யப்பட்டார். இதனால், சசி தரூரும், சுனந்தாவும், அடிக்கடி கேரளாவுக்கு வருவது வழக்கம்.இப்படித் தான், இம்மாதம், 12ம் தேதி, இருவரும், திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தனர். அங்குள்ள, கேரள மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில், சுனந்தா அனுமதிக்கப்பட்டார்.

உடல் நலக்குறைவு:தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சில பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்றும், சுனந்தா கேட்டு கொண்டார். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் சுனந்தாவுக்கு, முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதற்காக, மருத்துவமனையில், சுனந்தா, மூன்று நாட்கள் தங்கி யிருந்தார். பின், 14ம் தேதி, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இந்த தகவல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், சுனந்தா தற்போது இறந்துள்ளதால், இதுகுறித்த தகவலை, அந்த மருத்துவமனையின் பிரபல டாக்டர், விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:சுனந்தாவுக்கு, பரிசோதனை நடந்தது உண்மை தான். ஆனால், அந்த சோதனை முடிவுகளில், அவருக்கு எந்தவிதமான தீவிரமான நோயும் இருந்ததாக தெரியவில்லை. தற்போது, அனைவருமே, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதுபோலவே, சுனந்தாவும், இங்கு வந்தார். அவருக்கு சில எளிய மருத்துகள் தரப்பட்டன. ஆனால், அந்த மருந்து குறித்தோ, அவரின் உடல் நிலை குறித்தோ, விரிவான விவரங்களை தெரிவிக்க முடியாது.

பரிசோதனை:ஒரு வாரம் கழித்து, மீண்டும், திருவனந்தபுரம் வந்து, பரிசோதனை முடிவுகளை பெற்றுக் கொள்வதாக, சுனந்தா தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குள், அவர் இறந்து விட்டார். பரிசோதனை முடிவுகளை, சசி தரூருக்கும், போலீசாருக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனாலும், 'சுனந்தாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? எதற்காக, அவர் பரிசோதனை செய்தார்? பரிசோதனை முடிவுகளில் என்ன தெரியவந்தது?' என்பது போன்ற விவரங்கள், வெளிப்படையாக தெரிவிக்கப்படாததால், அதுகுறித்த விஷயங்கள், தொடர்ந்து, மர்மமாகவே உள்ளன.


'லூபுஸ்' நோய் தான் காரணம்?


சுனந்தாவுக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து, திருவனந்தபுரம் மருத்துவமனை வட்டாரங்கள் ரகசியங்கள் காத்தாலும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில், அவருக்கு, 'லூபுஸ்' என்ற பாதிப்பு இருந்ததாக, தகவல்கள் கசிந்துள்ளன.

இதுகுறித்து, சுனந்தா நட்பு வட்டாரங்கள் கூறியதாவது:சுனந்தாவுக்கு, லூபுஸ் என்ற நோயும், காசநோயும் இருந்தன. உடலில், லூபுஸ் பாதிப்பு ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு திறன் குறைந்து, தொற்று அதிகரிக்கும்.நோய் எதுவும் பாதிக்காத உடலில், நோய் எதிர்ப்பு திறன் சீராக செயல்பட்டு, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய, புரோட்டின்களை உற்பத்தி செய்கிறது.லூபுஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வீரியம் அதிகரித்து, உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எலும்பு இணைப்புகளில் வீக்கம், வலி, சதை பாதிப்பு போன்றவை ஏற்படும். மேலும், உடலில், இதயம், ரத்த நாளங்கள் ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும்.இந்த நோய்க்காக, சமீபத்தில், பிரான்சில், சுனந்தா சிகிச்சை பெற் றார். திருவனந்தபுரம் மருத்துவமனையிலும், இதற்காகவே சிகிச்சை பெற்றார். இந்த நோயுடன், சசி தரூருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடும் மன உளைச்சலிலும் தவித்து வந்தார். இந்த பிரச்னைகள் அனைத்தும் சேர்ந்து, சுனந்தாவை பலிவாங்கி விட்டன.இவ்வாறு, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
24-ஜன-201409:23:59 IST Report Abuse
Venki Raja நம்பிட்டோம் அடுத்த செய்தி என்ன .......
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜன-201420:24:00 IST Report Abuse
g.s,rajan காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் ,சாதல் ,சாதல் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Asok - Doha,கத்தார்
19-ஜன-201417:37:03 IST Report Abuse
Asok எல்லோரும் சசி தரூர் பற்றிதானே பேசுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X