யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்: பட்டியலுடன் ஆலோசனை நடத்தும் பா.ஜ.,

Updated : ஜன 20, 2014 | Added : ஜன 19, 2014 | கருத்துகள் (32)
Share
Advertisement
'பா.ஜ., அணியில், பிற கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள், எவை என்பது குறித்து, திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானால்,தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., - கொங்கு நாடு - புதுச்சேரி என்.ஆர்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குள் தொகுதிகள் பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சு வார்த்தையை, சுமுகமாக பேசி முடித்து, கூட்டணியை
யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்: பட்டியலுடன் ஆலோசனை நடத்தும் பா.ஜ.,

'பா.ஜ., அணியில், பிற கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள், எவை என்பது குறித்து, திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானால்,தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., - கொங்கு நாடு - புதுச்சேரி என்.ஆர்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குள் தொகுதிகள் பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சு வார்த்தையை, சுமுகமாக பேசி முடித்து, கூட்டணியை பலப்படுத்த, தமிழக பா.ஜ., மும்முரமாக உள்ளது.

பா.ஜ., அணியில், ம.தி.மு.க., இடம் பெற்றுவிட்டது. தே.முதி.க., - பா.ம.க., கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அடுத்த மாதம் 2ம் தேதி, உளுந்தூர் பேட்டையில் நடக்கும் மாநாட்டில், கூட்டணி முடிவை தே.மு.தி.க., அறிவிக்க உள்ளது.இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.,) மற்றும் கொங்கு நாடு கட்சியும், பா.ஜ., அணியில் சேர தயாராக உள்ளன. அதேசமயம், திரைமறைவில், தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுஉள்ளது.இம்மாதம், 23ம்தேதி, சுபமுகூர்த்த தினத்தில், கூட்டணி தொடர்பாக, முக்கிய கட்சிகளுடன், தமிழக பா.ஜ.,வின் பேச்சு வார்த்தை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., அணியில், விருதுநகர், காஞ்சி புரம், திருச்சி, ஈரோடு, ஆரணி, பொள்ளாச்சி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளை ம.தி.மு.க., எதிர்பார்க்கிறது. கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, திருச்சி, பொள்ளாச்சி, நீலகிரி, மத்திய சென்னை, வட சென்னை, தேனி, மதுரை, நெல்லை ஆகிய தொகுதிகளில், பா.ஜ., போட்டிஇட திட்டமிட்டுள்ளது.

பா.ம.க., தரப்பில் சேலம், அரக்கோணம், விழுப்புரம், மயிலாடு துறை, திருவண்ணா மலை, தர்மபுரி, ஆரணி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் தொகுதியை, ஐ.ஜே.கே.,வும், பொள்ளாச்சி தொகுதியை கொங்கு நாடு கட்சியும், புதுச்சேரி தொகுதியை என்.ஆர்.காங்கிரசும் கேட்கின்றன.

தே.மு.தி.க., தரப்பில் தென் சென்னை, திருநெல்வேலி, மதுரை, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவாரூர் ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.

கூட்டணி உறுதியானால், பா.ஜ., அணியில் மற்ற கட்சிகளை விட, தே.மு.தி.க.,வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும். பேச்சு வார்த்தையில், தொகுதி உடன்பாடு, சுமுகமாக முடியும்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கூட்டணி பேச்சு வார்த்தை ரகசியமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தையின் அடுத்தடுத்த கட்டங்களில், எல்லாமே இறுதி கட்டத்தை அடைந்து விடும். அதன்பிறகு, வெளிப்படைஆக, பேசி தொகுதிகளை முடிவு செய்து விடுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உசிலை விருமாண்டி - madurai,இந்தியா
19-ஜன-201421:54:29 IST Report Abuse
உசிலை விருமாண்டி போலி மதசார்பின்மை , ஓட்டுக்கு இலங்கை பிரச்னை , சாதிபிரச்சனையை ஓட்டுக்காக ஒரு சார்பாக பேசி நடிப்பர்களை விட BJB , வைக்கோ , ராம தாஸ் எவ்வளவோ மேல்
Rate this:
Cancel
aruna ganesan - Al Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-201418:42:36 IST Report Abuse
aruna ganesan Mr kannan, but ADMK should teach MP to valid Vote during confidence Vote time. It is shame One Tamil nadu ADMK MP who was ex speaker of Tamil nadu Assembly ing invalid Vote. It is a blot for all tamizh people
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜன-201417:59:03 IST Report Abuse
Malick Raja மாடு செத்துவிட்டது என்று மாட்டின் உரிமையாளர் கவலையில் இருப்பதும்.. ஐயோ இந்த மாட்டில் கொழுப்பு அதிகம் இல்லையே என்று மாட்டை தூக்கி செல்பவர் வருந்துவதும் இயல்புதான்... அவளே இல்லையாம் ..குழந்தைகள் ஐந்தாராம் என்பதும் பொருத்தமாக இருக்கும்.. அப்பூ.... போய் உருப்படியா வைகோவுக்கு 20 நீங்கள் இருபதா பிரிதுக்கொள்வதே நன்று... ஏனென்றால் அப்புறம் வைக்கோ 39 கேட்டு விடுவார்ல்... ஒன்று உங்களுக்கு ..இது எப்படி இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X