விலைவாசி விண்ணை தொட்டது எப்படி? காங்கிரஸ் பொருளாதார குளறுபடி

Updated : ஜன 20, 2014 | Added : ஜன 19, 2014 | கருத்துகள் (31)
Share
Advertisement
இன்றைய நிலையில், 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதில், அரசின் பல்வேறு படிநிலைகளுக்கு, 30 முதல் 50 சதவீதத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.சமீப காலமாக, நம் கையை கடிக்கும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து விட்டது. சொந்த வீடு தான் எட்டாக்கனியாக உள்ளது என்றால், காய்களும் கனிகளும் கூட எட்டும் விலையில் இல்லை என்பது, பல நடுத்தர குடும்பங்களுக்கு
விலைவாசி விண்ணை தொட்டது எப்படி? காங்கிரஸ் பொருளாதார குளறுபடி

இன்றைய நிலையில், 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதில், அரசின் பல்வேறு படிநிலைகளுக்கு, 30 முதல் 50 சதவீதத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சமீப காலமாக, நம் கையை கடிக்கும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து விட்டது. சொந்த வீடு தான் எட்டாக்கனியாக உள்ளது என்றால், காய்களும் கனிகளும் கூட எட்டும் விலையில் இல்லை என்பது, பல நடுத்தர குடும்பங்களுக்கு வேதனையை அளித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?கடந்த, 10 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவை முக்கிய காரணமாக குறிப்பிடலாம். பொருள் இல்லை என்றால், பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போகும். பொருள் உற்பத்திக்கு ஆதரவாக இருக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. மத்தியில் ஆட்சி செய்யும், காங்கிரஸ் தலைமையிலான அரசு, பொருள் உற்பத்திக்கான இந்த ஆதரவை கொடுக்க தவறிவிட்டது. மத்திய அரசின் பொருளாதார கொள்கையின் மேல் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை, அந்த அரசின் நிர்வாக திறமையின்மையால், தலைவிரித்தாடும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் புதிய முதலீடுகளை செய்ய, தொழில் முனைவோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை வரை, 100 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்க, 100 கோடி ரூபாய் நியாயமான செலவாகும். ஆனால், இந்த திட்டம், லஞ்ச தொகையையும் சேர்த்து, 150 கோடி ரூபாய்க்கு நிறைவேற்றப்படும் சூழல் உள்ளது. இதனால், 100 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டிய இடத்தில், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை, 50 ரூபாய் தானே என,
விட்டுவிட முடியாது.இதேபோல், பல இடங்களில், பல கசிவு காரணமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு உற்பத்தியாக வேண்டிய, ஒரு 'டிவி', தற்போது, 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல், உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதுதான், ஊழலுக்கும், பணவீக்கத்திற்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவு. கையை கடிக்கும் பணவீக்கத்திற்கு அரசு காரணியாக இருப்பது இப்படித்தான். இதை தான் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, 'ஜெயந்தி டேக்ஸ்' என, குறிப்பிட்டு இருந்தார்.

அதேசமயம், உலகமயமாக்கல் கொள்கை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து, இதே,'டிவி'யை, 12 ஆயிரம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும். இதனால் தான், கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டில், சிறு, குறு தொழில்கள் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளன.மற்ற தொழில்களைவிட இவை அதிக வேலை வாய்ப்பு அளிப்பதால், பெருமளவு மக்களின் வருமானமும் குறைவதற்கு அரசு காரணியாக இருந்து உள்ளது.மன்மோகன் சிங்கின் ஆட்சித்திறன் பற்றாக்குறை, முதலீட்டு பற்றாக்குறையாக மாறி வருகிறது. முதலீட்டு பற்றாக்குறை, உற்பத்தி பற்றாக்குறையாக மாறுகிறது. உற்பத்தி பற்றாக்குறையை சரி செய்ய, வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறன.

உதாரணத்திற்கு, விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலை; ஹோலி பண்டிகைக்கு, கலர் பவுடர்; ரக் ஷா பந்தனுக்கு, ரக் ஷா கயிறு என, சீனாவில் இருந்து, பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.இவ்வாறு, வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படுவது, வர்த்தக பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. வர்த்தக பற்றாக்குறை, டாலர் பற்றாக்குறையாக மாறிக் கொள்கிறது. டாலர் பற்றாக்குறை, டாலரின் மதிப்பை உயர்த்தி, ரூபாய் மதிப்பை கீழே தள்ளி விடுகிறது. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விடுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதுவே, பணவீக்கத்தை மேலும் அதிகரிப்பதற்கு காரணியாக அமைகிறது.

மேற்கண்ட காரணங்கள் அனைத்தும், ஒன்றுடன் ஒன்று, பிணைக்கப்பட்டு இருந்தாலும், ஆட்சித்திறன் பற்றாக்குறை தான் மூல காரணம் ஆகும். மன்மோகன் சிங்கின் ஆசிரியர்கள், 'பொருளாதாரமும், அரசியலும், ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்' என்று, அவருக்கு சொல்லி கொடுக்க மறந்து விட்டனர்.ஆட்சித்திறன் பற்றாக்குறை வந்துவிட்டால், ஏதேனும், ஒரு பற்றாக்குறை பொருளாதாரத்தில் தான் வந்து சேரும். இன்றைய சூழலில், பல பற்றாக்குறைகள் உள்ளன. இதற்கு காரணம், மன்மோகன் - சிதம்பரம் - மான்டேக் சிங் அலுவாலியா ஆகிய மும்முனிகளின் தவறான பொருளாதார சிந்தனைகள் தான். இதை சரி செய்ய, மாற்று அரசு மற்றும் மாற்றும் சிந்தனை ஏற்படுத்த வேண்டும். அது, மக்கள் கையில் தான் உள்ளது.

எம்.ஆர்.வெங்கடேஷ் ஒரு அறிமுகம்: கட்டுரையாளர் எம்.ஆர்.வெங்கடேஷ், 22 ஆண்டுகளாக, பட்டய கணக்காளராக உள்ளார். இந்திய பொருளாதாரத்தை ஆராய்ந்து, பல புத்தகங்கள் எழுதி உள்ளார். 2013ல் வெளிவந்த, 'டாக்டர் மன்மோகன் சிங் - ஏ டிகேட் ஆப் டீகே' என்ற நூலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், பொருளாதார கொள்கைகளை ஆராய்ந்து, விமர்சனங்களை வெளியிட்டு உள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul kareem - Nagercoil,இந்தியா
22-ஜன-201413:08:10 IST Report Abuse
Abdul kareem விலைவாசி உயர்வு பற்றி மிக தெளிவாக விளக்கியதற்கு நன்றி. ஆட்டோ finance எனப்படும் கடனில் வாகனங்கள் வாங்குவதும் எரிபொருள் தேவை அதிகரிக்கப்பட்டு விலை ஏற்றத்திற்கு துணை போகிறது. கடனில் வாங்கப்படும் வாகனங்களால் ஒரு போலியான முன்னேற்றமே காணப்படுகிறது. விவசாயம் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதோடு வாடகை வாகனங்களை பயன்படுத்தி எரிபொருள் தேவையையும் போலி பந்தாவை மக்கள் குறைக்க வேண்டும். இதனால் பிறருக்கும் வருவாய் கிடைக்கும் விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும்.
Rate this:
Cancel
Jayakumar - trichy,இந்தியா
20-ஜன-201405:47:32 IST Report Abuse
Jayakumar ரூபாய் மதிப்பை குறையாமலும் மற்றும் விலைவாசி ஏறமாலும் பார்த்திருந்தாலே நம் நாடு முன்னேறிருக்கும்
Rate this:
Cancel
Saravanan Km - Pune,இந்தியா
19-ஜன-201420:28:49 IST Report Abuse
Saravanan Km சில வாசகர்கள் நாம் பொருளாதரத்தில் முன்னேறிவிட்டோம் என நினைத்து கருத்து எழுதிள்ளர்கள். மண் மோகன் சிங் நாட்டை முன்னேற்றி விட்டார் என்று நினைத்து கருத்து தெரிவித்து இருகிறார்கள். அனால் அது உண்மை அல்ல அப்புடி நாம் வளர்ச்சி அடைந்து இருந்தால் நமது வாங்கும் திறன் அதிகரித்து இருக்க வேண்டுமே. ஏன் இன்னும் நமது அரசாங்கம் குறைந்த விலைக்கு பொருட்களை விற்க வேண்டும் மற்றும் விலை இல்லா பொருட்களை தர வேண்டும். ஒரு சிலர் மட்டுமே பயன் அடைந்து உள்ளார்கள் ( மேல் மட்டத்தில் உள்ளவர்கள்) நடுத்தர மற்றும் கீழ்தர மக்கள் இன்னும் ஏழைகள் ஆகத்தான் உள்ளனர். அவர்களின் முனெற்றதை ஊழல் என்னும் பெரும் முதலை முழுங்கி விட்டது அதை தடுக்க முடியாதது ஏனோ. இந்திய நாட்டில் இருபவர்கள் அனைவரும் இந்தியரே அதில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சலுகை மற்றவர்களுக்கு இல்லை ஏன் இந்த பாகுபாடு. நீங்கள் சொல்லும் பெருபான்மை ஹிந்துக்கள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை கிடையாது அனால் நீங்கள் சொல்லும் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்டின் மக்கள் உயார்ந்த நிலையுள் இருந்தாலும் அவர்களுக்கு சலுகை, ஏன்னா அவர் சிறுபான்மை இனத்தவர். ஏன் இந்த ஏற்ற தாழ்வு. மக்களை சாதி மதம் வைத்து பிரிகதிர்கள் அவர்களின் வருமானம், கல்வி இதை வைத்து கணகிடுங்கள். ஆட்சில் உள்ளவர்கள் மக்களை பிரித்து வைத்து சுகம் காணுகிறார்கள் இதை தான் அந்த பிரிட்டிஷ் அரசும் செய்தது . மக்களே விழித்து எழுங்கள் இன்னும் துங்கி கொண்டு இருகதிர்கள். தேர்தல்கு முன் தரும் சில நுருக்கு ஆசை பட்டு இன்னும் 5 வருடம் அடிமை வாழ்கை வாழ வேண்டாம். தினம் ஒரு நாடகம் நடத்தும் அரசு போல் உள்ளது காங்கிரஸ் அரசின் செயல். உதாரணம் நமது அன்றாட தேவை காஸ் சிலிண்டெர். முன்பு 12 என்று இருந்ததை 6 ஆக குறைத்து பலரின் எதிர்ப்புக்கு பிறகு காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் மட்டும் 9 ஆக உயார்த்தி பின்பு இந்திய முழுவதும் 9 ஆக உயார்த்தினர்கள். மக்கள் கோரிக்கை வைத்தும் அதற்கு அந்த துறை அமைச்சர் 12 ஆக உயார்த்த முடியாது என்று பதில் அளித்தார் இரண்டு நாட்களுக்கு முன் பின்பு ராகுல் சொன்னதும் அடுத்த நாளே 12 ஆக உயார்த்த படும் என்று அறிவித்தார். யார் இந்த ராகுல் அன்று 6 ஆக குறைக்கும் போது ஏன் தடுத்து நிறுத்தவில்லை. ராகுல்லை பெரிய தலைவர் போல் ஒரு தோற்றத்தை உருவாக்க இந்த நாடகம் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டது என்பதே உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X