முடிவெடுக்கும் இடத்தில் பிரேமலதா: மகளிரணியிடம் கருத்து கேட்க திட்டம்

Updated : ஜன 21, 2014 | Added : ஜன 20, 2014 | கருத்துகள் (37)
Share
Advertisement
கூட்டணி தொடர்பாக கருத்து கேட்க, தே.மு.தி.க., மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை கூட்ட, அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.தே.மு.தி.க., மகளிர் அணியை, பிரேமலதா வழிநடத்தி வருகிறார். அவ்வப்போது, மகளிர் அணியினர் கூட்டத்தை கூட்டி, கட்சியை பலப்படுத்தும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.காயங்கள் ஆறவில்லை...:சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், தே.மு.தி.க.,
முடிவெடுக்கும் இடத்தில் பிரேமலதா: மகளிரணியிடம் கருத்து கேட்க திட்டம்

கூட்டணி தொடர்பாக கருத்து கேட்க, தே.மு.தி.க., மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை கூட்ட, அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.

தே.மு.தி.க., மகளிர் அணியை, பிரேமலதா வழிநடத்தி வருகிறார். அவ்வப்போது, மகளிர் அணியினர் கூட்டத்தை கூட்டி, கட்சியை பலப்படுத்தும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.


காயங்கள் ஆறவில்லை...:


சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடந்தன. இதில், பிரேமலதா, 'கடந்த தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட காயங்கள் ஆறவில்லை' என, பரபரப்பாக பேசினார். அதுவரை, 'தி.மு.க., கூட்டணியில் இடம் பெறவேண்டும்' என்று நினைத்திருந்த, தே.மு.தி.க.,வினர் பலரையும், பிரேமலதாவின் பேச்சு யோசிக்க வைத்தது. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து பட்ட கஷ்டத்தை தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பெறக்கூடாது என, தே.மு.தி.க.,வினர் பலரும் கருத துவங்கியுள்ளனர்.இந்நிலையில், பிப்., 2ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையில் தே.மு.தி.க., மாநாடு நடக்கிறது.இதில், கூட்டணி தொடர்பாக தொண்டர்களிடம் கருத்து கேட்க, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்கு முன், மகளிர் அணியினரின் மனநிலையை அறிய பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, மகளிர் அணியினரின் ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த அவர் முடிவு செய்துள்ளார். தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், இந்த கூட்டம் நடக்கும். இதில் பங்கேற்க வருபவர்களுக்கு, தடபுடல் விருந்து அளிக்கப்பட உள்ளது.கட்சி மாநாட்டில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் உள்ள, மகளிர் அணியினரை அழைத்து வர வேண்டும் உள்ளிட்ட ஆலோனைகள் இந்த கூட்டத்தில் வழங்கப்படலாம்.தே.மு.தி.க.,வில் மகளிர் அணியினரின் ஆலோசனைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போதும், இதேபோன்று ஆலோசனை நடத்திய பிறகே, அ.தி.மு.க.,கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று, இப்போதும் மாநாட்டிற்கு முன், மகளிர் அணி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கட்சியைப் பொறுத்த வரையில் விஜயகாந்த் தலைவராக இருக்கலாம். ஆனால், கூட்டணி போன்ற, கட்சியின் எதிர்காலம் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன், மனைவி பிரேமலதாவின் யோசனையை கேட்டு விட்டுத்தான், எதையும் செய்வார், தலைவர். ஏற்கனவே நடந்த சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டதற்கு முக்கிய காரணகர்தாவாக இருந்தவர் பிரேமலதா தான். இப்போதும் அப்படித்தான்.


மனநிலை அறிய...:

அதனால்தான், அதற்கு முன், எல்லாருடைய மன நிலையையும் அறிய விரும்புகிறார், பிரேமலதா. தனிப்பட்ட முறையில், அவர், பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கருத்துக்களைத் திரட்டினாலும், கட்சியினரின் எண்ணத்தையும் அறிய விரும்புகிறார். அதற்காகத்தான், விரைவில் மகளிரணி கூட்டம் கூட்டப்படஇருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21-ஜன-201400:06:30 IST Report Abuse
GUNAVENDHAN விஜயகாந்த் தன்னுடைய மனைவி பிரேமலதாவையும் , மச்சான் சுதீஷையும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து தள்ளி வைத்து இருக்கின்றார் என்று செய்தி வந்து இரண்டு வாரங்கள் கூட முழுமையாக முடியவில்லை, மச்சானும், மனைவியும் அதற்குள்ளாகவே களத்தில் குதித்து விட்டார்கள், விஜயகாந்த்தால் எல்லாம் தன்னுடைய கிச்சன் கேபினெட்டை எக்காலத்திலும் ஒதுக்கி வைத்திட முடியாது கட்சியை விஜயகாந்த் தொடங்கியதே தன்னுடைய மனைவியின் நச்சரிப்பால் தான் என்பதை நான் இங்கு ஏற்கெனவே சொல்லியுள்ளேன் . எனவே விஜயகாந்த்தை முன்னாள் நிற்க வைத்து அவர் மனைவியும் , மச்சானும் தான் கட்சியை நடத்துகின்றார்கள், இனியும் நடத்துவார்கள் . எந்த ஒரு கட்சியிலும் குடும்பத்தினர் உள்ளே நுழைந்து விட்டால் , அதன் பிறகு எதிர்கட்சிகளிடமிருந்து , பொதுமக்கலிடமிருந்தெல்லாம் கண்டன கணைகள் எவ்வளவு வந்தாலும் , குடும்பத்தினரை அவர்களால் ஒதுக்கவே முடியாது . கருணாநிதியையே எடுத்துக்கொள்ளுங்கள் அவரது குடும்பத்தினரால் தான் கட்சிக்கு மிகப்பெரிய அவமானம், அசிங்கம்,பாதிப்பு, செல்வாக்கு குறைவு எல்லாம் ஏற்பட்டது, கேவலமாக அவர் குடும்ப ஆட்சியை பற்றி பேசாத எதிர்கட்சிகளே இல்லை , பொதுமக்கள் மனத்திலும் ஏகப்பட்ட அதிருப்தி, அவரது கட்சி காரர்கள் மத்தியிலும் ஓரளவுக்கு இதனால் வெறுப்பு தான் , இதெல்லாம் கருணாநிதிக்கு தெரியாதா ?, எல்லாம் தெரியும், அவரும் வீட்டில் தன்னுடைய மகன்கள், மகள்கள், பேரன்கள் , மனைவி , துணைவி எல்லோரையும் கட்டுப்படுத்தத்தான் ஆரம்பத்தில் முயன்று இருப்பார் , ஆனால் யாரும் அவர் பேச்சை கேட்கக்கூடிய அளவுக்கு இல்லை என்பதே உண்மை . கட்சியில் உள்ள அடுத்த கட்ட தலைவர்களையோ, அல்லது கட்சி நிர்வாகிகளையோ தடாலடியாக கட்சியை விட்டு நீக்குவது போல அவர் கட்சியில் இருந்து குடும்பத்தினரை நீக்கவும் முடியாது, ஒதுக்கிவைத்திட கூட கருணாநிதியால் முடியாது . ஆரம்பத்திலேயே குடும்பத்தினர் கட்சியில் நுழைவதை தடுத்து இருக்கவேண்டும், அப்போது அனுமதித்துவிட்டு, அவர்கள் எல்லோருமே சுலபமாக எல்லாவற்றையும் பெறமுடியும் என்பதையெல்லாம் தெரிந்து , அதையெல்லாம் அனுபவித்துவிட்ட பிறகு இப்போது கட்சியை விட்டு கொஞ்சம் ஒதுங்கியிரு என்று சொன்னால் யார் கேட்பார்கள் ?. கட்சியின் பெயர் இந்த அளவுக்கு டேமேஜ் ஆனபிறகும் அவரால் குடும்பத்தினரை கொஞ்ச காலத்துக்காவது தள்ளி இருக்க சொல்ல முடிகிறதா ?, விஜயகாந்த்தின் குடும்பத்திலும் இதே கதை தான் , அவரால் ஒன்றும் செய்யமுடியாது, என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளவேண்டியது தான் , குடும்பத்தினரின் தொல்லையால் கட்சி ஆரம்பித்தோம், அதே குடும்பத்தினரால் கட்சி செல்வாக்கிழந்தது என்று நினைத்து ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியது தான் . கருணாநிதி , விஜயகாந்த் மட்டுமல்ல பாமக கட்சியின் தலைவர் ராமதாசின் கதையும் இதே ரகம் தான், அவரும் கொட்டுவதை பார்த்து , வேகவேகமாக தன்னுடைய மகனை , தன்னுடைய உறவினர்களை கட்சி நன்றாக வளர்ந்து வரும் சமயத்தில் உள்ளே நுழைத்தார், இப்போது அவரால் யாரையாவது கட்டுப்படுத்த முடியுமா ?, தமிழகத்தில் மட்டும் இந்த கண்றாவி கதை நடக்கவில்லை, உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் தன்னுடைய மகனை முதல்வராக்கினார், அங்கு அலங்கோலமான ஆட்சி நடக்கின்றது, இதை வேறு யாரும் சொல்லவில்லை , எதிர்கட்சியினர் மட்டும் சொல்லவில்லை , முலாயம் சிங்கே அதுவும் பப்ளிக்காக பொதுக்கூட்டத்திலேயே சென்ற 5, 6 மாதங்களாக சொல்லிவருகின்றார், பகிரங்கமாக கண்டித்தும் வருகின்றார், அவரது மகன் அவர் பேச்சை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை , அவராலும் ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை . பையன் மீது கை வைத்தால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தெரிந்து , எரிச்சலை அடக்கமுடியாமல் கட்சி கூட்டங்களிலேயே பகிரங்கமாக கண்டித்து வருகின்றார் . இதே கட்சியில் உள்ள அடுத்த கட்ட தலைவர்கள் யாரையாவது முதல்வராக நியமித்திருந்தால் இந்நேரம் , கட்சியின் மேல்மட்ட கூட்டத்தை கூட்டி, முதல்வரை கீழே இறக்கிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்கி இருப்பார், ஆனால் தன்னுடைய மகனை அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை . இப்படியே போனால் மக்கள் நம்மை தூக்கிஎறிந்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஆவேசமாக பேசிவிட்டார் , அதற்க்கு மேல் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை . ஆகவே இதையெல்லாம் கண்முன்னால் நடப்பதை பார்க்கும் நாம் தான், மக்கள் தான் விழிப்பாக இருந்து குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ள கட்சிகளை முற்றிலுமாக விளக்கி வைத்திட வேண்டும் , குடும்ப பாசத்தில் சிக்கி , சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் , குடும்ப கட்சிகளின் தலைவர்களால் அந்த கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு தான், மக்களுக்கும் அப்படிப்பட்ட கட்சிகளால் எவ்விதமான பலனும் கிட்டாது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அவர்களை நாம் தான் கொஞ்சம் தூரத்தில் நிறுத்தி வைக்கவேண்டும் .
Rate this:
Cancel
manikandan ai - Mumbai,இந்தியா
20-ஜன-201417:25:32 IST Report Abuse
manikandan ai மனைவி சொல்லே மந்திரமா
Rate this:
Cancel
Suresh - rajapalayam,இந்தியா
20-ஜன-201415:30:04 IST Report Abuse
Suresh போற போக்க பாத்த, தி மு க காங்கிரெஸ்ஸ மிஞ்சிடும் போல ...அவ்ளோ குரூப் இருக்கு.. கனிமொழி குரூப், ஸ்டாலின் குரூப், அழகிரி குரூப், அப்புறம் லோக்கல் மாவட்ட லெவல் க்ரூப்ஸ் அண்ட் கடைசில கலைஞர் குரூப் (அன்பழகன், ஆற்காட் வீராசாமி, வைரமுத்து ). ஹஹஹ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X