சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராம பக்தர்கள் வனத்தில் குடியேறினர்: வெறிச்சோடியது கிராமம்

Added : ஜன 21, 2014
Share
Advertisement
பள்ளிப்பட்டு: வன வாசத்தால் ராம பிரான் அனுபவித்த துன்பத்தை, தாங்களும் உணரும் விதமாக, கிராம மக்கள், நேற்று, ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து, வனத்தில் குடியேறினர். வெறிச்சோடிய கிராமத்தை தோட்டிகள் காவல் காத்தனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், வெங்கடராஜகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்தது வெங்கடராஜகுப்பம் கிராமம். இங்கு, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர், ஊரில், சீதா, ராமர், லட்சுமணர்

பள்ளிப்பட்டு: வன வாசத்தால் ராம பிரான் அனுபவித்த துன்பத்தை, தாங்களும் உணரும் விதமாக, கிராம மக்கள், நேற்று, ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து, வனத்தில் குடியேறினர். வெறிச்சோடிய கிராமத்தை தோட்டிகள் காவல் காத்தனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், வெங்கடராஜகுப்பம் ஊராட்சியைச் சேர்ந்தது வெங்கடராஜகுப்பம் கிராமம். இங்கு, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர், ஊரில், சீதா, ராமர், லட்சுமணர் கோவில் உள்ளது.


வனவாசம்:

ஆண்டுதோறும், தை மாதத்தில், வனவாசத்தால் ராமபிரான் அனுபவித்த துன்பத்தை தாங்களும் உணர வேண்டும் என்ற பக்தி சிரத்தையால், கிராம மக்கள் ஒரு நாள் வனவாசம் மேற்கொள்வது வழக்கம். கடந்த, 60 ஆண்டுகளாக இந்த வழக்கம் பின்பற்றப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு, மீண்டும் தங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்து, கிராம மக்கள், நேற்று வனவாசம் மேற்கொண்டனர். அதிகாலை 4:00 மணியளவில், குழந்தைகள் முதல், முதியவர்கள் வரையிலான கிராம மக்கள், அனைவரும், கிராமத்தில் இருந்து, சீதா, லட்சுமணர் உடனுறை ராமபிரான் உற்சவர் சிலைகளுடன், கிராமத்தை விட்டு, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு புறப்பட்டனர். தங்களுடன் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளையும் அழைத்துச் சென்றனர். காட்டில் கோவில் அமைத்து, சுவாமிக்கு பூஜை நடத்தினர். ராமருக்கு முன்பாக, களிமண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் அமைத்து அபிஷேகம் நடத்தினர்.


காட்டுக்குள்...:

இதில், திரளான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். மாட்டு வண்டிகள் சகிதம் காட்டுக்குள் குடியேறிய கிராம மக்கள், நேற்று பகல் பொழுது முழுவதும் காட்டில் தங்கி, உணவு சமைத்து உண்டனர். பின், மாலையில், உற்சவ மூர்த்திகளுடன் புறப்பட்டு கிராமத்தை அடைந்தனர். 60 ஆண்டுகளுக்கு பின், நேற்று நடந்த திருவிழாவிற்கு, வெங்கடராஜகுப்பத்தை பூர்வீகமாக கொண்டு, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வந்திருந்தனர். மொத்தம், 2,000 பேர் நேற்றைய வனவாசத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X