பேரியக்கத்தை கழற்றி விட்டார் ராமதாஸ்

Updated : ஜன 21, 2014 | Added : ஜன 21, 2014 | கருத்துகள் (45)
Share
Advertisement
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அல்லாத, இதர ஜாதி அமைப்புகளை ஒன்றிணைத்து, 'சமுதாய பேரியக்கம்' என்ற அமைப்பை, இரு ஆண்டுகளுக்கு முன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் துவக்கினார். இந்த அமைப்பின் சார்பில், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், ஜாதிய அமைப்புகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.காதல் திருமணம்:இந்தக் கூட்டங்களில், 'வன்கொடுமை
 பேரியக்கத்தை கழற்றி விட்டார் ராமதாஸ்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அல்லாத, இதர ஜாதி அமைப்புகளை ஒன்றிணைத்து, 'சமுதாய பேரியக்கம்' என்ற அமைப்பை, இரு ஆண்டுகளுக்கு முன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் துவக்கினார். இந்த அமைப்பின் சார்பில், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், ஜாதிய அமைப்புகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.


காதல் திருமணம்:


இந்தக் கூட்டங்களில், 'வன்கொடுமை சட்டத்தை திருத்த வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், காதல் திருமணம் செய்ய, பெற்றோர் அனுமதியைப் பெற வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இந்த அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டம், சென்னை மந்தைவெளியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்த, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது: முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தோரின் நலன் காக்கவே, அனைத்து சமுதாய பேரியக்கத்தை துவங்கியுள்ளோம். மக்கள் தொகை அடிப்படையில், அனைத்து ஜாதிகளுக்கும், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையில், இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம், தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். முழுமையான மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். பெண்ணின் திருமண வயதை, 21ஆக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும். 21 வயதுக்கு முன், காதல் திருமணம் செய்ய விரும்பும், ஆணும், பெண்ணும் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது உட்பட, ஒன்பது தீர்மானங்களை, கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளோம்.சமுதாய பேரியக்கத்துக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. அனைத்து ஜாதி மக்களுக்கும், சமமான கல்வி, சமூக நீதி, ஒருங்கிணைப்பு வேண்டும் என்பதே, இந்த இயக்கத்தின் நோக்கம். கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஜாதி சங்கங்களின் விழாக்களில், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், ஜாதிகள் இல்லை எனக் கூறும் திராவிட கட்சிகள், ஜாதிகளை ஒழிக்காமல், அவற்றை வளர்த்து வருகின்றன. ஆனால், சமுதாய இயக்கத்தை நாங்கள் துவங்கினால், பிற்போக்குவாதிகள் என, விமர்சிக்கின்றனர்.


பல்டியோ பல்டி:

தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ சமுதாய பேரியக்கம் துவங்கவில்லை. இதுமுற்றிலும், அவரவர் ஜாதியைச் சேர்ந்தோரின்நலனைப் பேணவே துவக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நாங்கள் அரசியல் பேசுவதில்லை. பேசினாலும், அதைத் தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்துகிறோம். பா.ம.க.,வின் லோக்சபா தேர்தல் நிலை பற்றி, விரைவில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.

கூட்டத்தில், யாதவர், தேவர், கவுண்டர், பிராமணர் உட்பட, பல ஜாதி சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.'அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியல் நோக்கமற்றது' என, ராமதாஸ் கூறியதன் மூலம், அந்த அமைப்பு துவங்கப்பட்டபோது, ராமதாஸ் கூறிய கருத்திலிருந்து பல்டி அடித்துள்ளார். சமுதாய பேரியக்கத்தை உள்ளடக்கி, லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என, முதல் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். இப்போது, அரசியலுக்கும், சமுதாய பேரியக்கத்துக்கும் தொடர்பில்லை என, கூறியுள்ளார். இதன் மூலம், பா.ம.க.,வுடன், பிற ஜாதி சங்கங்கள்,அரசியல் ரீதியாக இணையத் தயாராக இல்லை
என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மச்சக்காளை - Kabul,ஆப்கானிஸ்தான்
22-ஜன-201401:00:41 IST Report Abuse
மச்சக்காளை இன்னுமா இவனுங்களை இந்த நாடு நம்புது ?
Rate this:
Cancel
nallavan - chennai,இந்தியா
21-ஜன-201423:56:29 IST Report Abuse
nallavan ஜதி வெறி பிடித்த உங்களுக்கு யாரும் வோட்டு போடா மாட்டார்கள், காலில் விழுந்து கெஞ்சி கதறினாலும் கூட
Rate this:
Cancel
Sutha - chennai,இந்தியா
21-ஜன-201419:49:57 IST Report Abuse
Sutha ஜாதியும்,மதமும் இல்லையென்றாலே கட்சிகளும் இல்லை என்பதுதான்.ஏதாவது ஒரு விதத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் அந்த அந்த பகுதி மக்கள் சார்ந்துள்ள சாதியை வைத்துதான் பாராளு மன்றத்துக்கும்,சட்டசபைக்கும் தேர்தலில் ஆட்களை நிறுத்துகின்றனர்.எனவே நாங்கள் சாதி மதம் சாராத கட்சி என்றால் யாரும் நம்பத் தயாரில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X