லோக்சபா 'சீட்'டுக்காக வேறு கட்சிகளில் துண்டு போட காங்., - எம்.பி.,க்கள் காத்திருப்பு

Updated : ஜன 21, 2014 | Added : ஜன 21, 2014 | கருத்துகள் (15)
Advertisement
லோக்சபா 'சீட்'டுக்காக வேறு கட்சிகளில் துண்டு போட காங்., - எம்.பி.,க்கள் காத்திருப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு, காங்., தள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள, எம்.பி.,க்களுக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இடம் பிடிக்க தயார்:


இதனால், ராஜஸ்தான், உ.பி., ம.பி., பஞ்சாப், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, காங்., - எம்.பி.,க்கள், வேறு கட்சிகளில், 'சீட்' கிடைக்குமா என, இப்போதே இடம் பிடிக்க தயாராகி விட்டனர். இதில்,'ஆம் ஆத்மி' கட்சி பக்கம் தாவுவதற்கு தான், பலரும் முயற்சிக்கின்றனர்.வரும் லோக்சபா தேர்தலில், காங்., கட்சி வெற்றி பெறுவது, எளிதான காரியம் அல்ல. சமீபத்திய சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வியை சந்தித்த பின், தன்னைத் தானே, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.குறிப்பாக, 'பழைய பஞ்சாங்கம்' எல்லாம், இனி பேச முடியாது. இதை, சமீபத்தில் நடந்த, காங்., செயற்குழுக் கூட்டத்தில், துணைத் தலைவர், ராகுல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.


சிதம்பரம் கருத்து ஏற்பு:


'எம்.பி.,க்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பது இயலாத காரியம்' என, அவர் சூசகமாக தெரிவித்துவிட்டார். அது போல், 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதையும், காங்., பின்பற்ற தயாராக உள்ளது.
ராகுலின் சொந்த தொகுதி அமைந்துள்ள, உ.பி.,யில், 2009ல், காங்., 22 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், 12 பேர், வேறு கட்சிகளுக்கு மாறி விடும் எண்ணத்தில் உள்ளனர்.ராகுல், சோனியா மற்றும் நான்கு மத்திய அமைச்சர்கள் உட்பட, பத்து பேர், அடுத்த தேர்தலில் போட்டியிட, ஆர்வமாக உள்ளனர்.


அடுத்த முயற்சி:


ஜெயின் மதத்தினரை சிறுபான்மை பிரிவின் கீழ் சேர்க்க, ராகுல் ஆர்வமாக உள்ளார். இது தொடர்பாக, பிரதமருடன் தொடர்பு கொண்டு, ராகுல் பேசியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி, ஜெயின் சமுதாயத்தினர், ராகுலிடம் வலியுறுத்தி உள்ளனர். ஜெயின் சமுதாயத்தின் ஓட்டுகளை அள்ளுவதற்காக, இந்த கோரிக்கையை ஏற்க காங்., தீவிரமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201421:13:59 IST Report Abuse
Pugazh V இன்றைய தமிழக காங்கிரசுக்கும் தமிழக பி ஜே பி க்கும் ஒரே அளவில் தான் தொண்டர் பலம் வாக்கு வங்கி இருக்கிறது. இரு கட்சிகளுமே யாருடனாவது கை கோர்க்கப் பாடு படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
21-ஜன-201411:23:37 IST Report Abuse
Seshadri Krishnan உங்க தலைவருக்கு திகாருக்கு """கை""" காட்டிகிட்டு இருக்காங்க, இதுல அளப்பற வேற?
Rate this:
Share this comment
Cancel
Chennai - Ragu - thombe,இலங்கை
21-ஜன-201410:54:21 IST Report Abuse
Chennai  - Ragu 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் அப்படி என்றால் இந்த ராகுகாலம் தேர்தலில் போட்டி இட முடியாதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X