'காலில் விழுந்து ஓட்டு கேளுங்க': கெஞ்ச சொல்கிறார் ராமதாஸ்

Added : ஜன 21, 2014 | கருத்துகள் (44)
Advertisement
'காலில் விழுந்து ஓட்டு கேளுங்க': கெஞ்ச சொல்கிறார் ராமதாஸ்

சமூக ஜனநாயக கூட்டணி சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள, பா.ம.க., வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், நேற்று முன் தினம் சிதம்பரத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், ராமதாஸ் பேசியதாவது: பா.ம.க.,வும், வன்னியர் சங்கமும் எந்த ஜாதியினருக்கும் எதிரிகள் அல்ல. தர்மபுரி மற்றும் மரக்காணம் கலவரம், பா.ம.க.,வுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இந்தக் கலவரத்தில் வன்னியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இளைஞர்களுக்கு வெறித்தனம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் கலவரங்களில், தமிழகம், 10வது இடத்தில் உள்ளது. கடன் சுமையில், இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில், 13 லட்சமாக இருந்த, பணியாளர்கள் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், 10 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 'விபத்தில் வன்னியர்கள் இறந்தால், நிவாரணம் வழங்கக்கூடாது' என, முதல்வர் ஜெ., அதிகாரிகளிடம் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்த பிறகும், அந்த ஜாதியினர் அ.தி.மு.க.,விலும், தி.மு,க.,விலும் இருக்கலாமா? தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வன்னியர்கள் என்றால் கசக்கிறது. ஆனால், அவர்களின் ஓட்டுக்கு மட்டும், பல்லை காட்டுகின்றனர். சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்து போராடி வரும், வன்னியர் சமுதாயத்தில், 2.5 கோடி பேர் உள்ளனர். அவர்கள் ஓட்டுப் போட்டிருந்தாலே, தமிழகத்தை, பா.ம.க., ஆட்சி செய்திருக்கும். தமிழகத்தில், சாராய விற்பனையே சாதனையாக உள்ளது. ஜெயலலிதா அரசில், ஊழல் மலிந்து விட்டது. இலவசங்கள் கொடுத்து, ஓட்டுகளை விலைக்கு வாங்குகின்றனர். லோக்சபா தேர்தலில், ஒரு ஓட்டுக்கு, அ.தி.மு.க., 3,000 ரூபாயும், தி.மு.க., 2,000 ரூபாயும் கொடுக்க திட்டமிட்டுள்ளன. தேர்தலில் பணப்புழக்கத்தை தடுப்பதில், தேர்தல் ஆணையம் குரைக்கும் நாயாகவே, வேடிக்கை பார்க்கிறது; அது கடிக்கும் நாயாக மாற, சட்டங்களை கடுமையாக்க வேண்டும். கிராமங்களில் உள்ள இளைஞர்கள், வாரம் இருமுறை வீடுகள் தோறும் சென்று, எந்தக் கட்சி, என்ன ஜாதி என, பார்க்காமல் காலில் விழுந்து கெஞ்சி, ஓட்டு கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது, பெண்களும் வீடு, வீடாகச் சென்று, காலில் விழுந்து பா.ம.க.,வுக்காக, ஓட்டு கேட்க வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAIRAJ - CHENNAI,இந்தியா
23-ஜன-201413:08:32 IST Report Abuse
JAIRAJ தயவு செய்து சீக்கரமா எல்லார் கால்லயும் விழுங்க.....................என்மகனுக்கு மந்திர்ப்பதிவி வேணும். நாங்க வளமா வாழனும்...........................நீங்க ..............சத்தியம் பண்ணுங்க - கால்ல விழுங்க...............சீக்கிரமா விழுங்க..................
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
22-ஜன-201410:21:31 IST Report Abuse
JAIRAJ தலைவன் என்பவன் யார் ..............? மக்களை அல்லது தன்னை பின்பற்றி வருபவர்களுக்கு நல்வழி காட்டுபவர்கள்தான் தலைவன். அவனை பின்பற்றுபவர்கள் எல்லோருமே நல்லவர்களாகவும் - வல்லவர்களாகவும் - நேர்மையானவர்களாகவும் - நீதி வழுவாதவர்களாகவும் இருப்பார்கள். ஏதாவது நல்லது செய்ய மக்கள் காலில் விழ வேண்டுமானாலும் தலைவன் தான் விழுந்து விழுந்து எந்திரிப்பான். அந்த தலைவனைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால், தற்காலத் தலைவர்கள்............? அவர்கள் தங்கள் பின் ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள். செம்மறி ஆடுகள் போன்றே தலைநிமிராமல் தலை தாழ்த்தி தொடர்ந்து வரவேண்டும் என்று நினைப்பவர்கள். " 1980 க்கு முன்னால் நான் எனது குடும்பம் மற்றும் எனது செல்வநிலை தெரியுமா..................ஆ.............அதுதான்.................. சினிமாவில் காட்சிகள் மாறுவதுபோல் நமது வாழ்விலும் மாற்றங்கள் உண்டு.......................இப்பொழுது நான் என் குடும்பம் மற்றும் எனது - எனது வாரிசுகளின் செல்வநிலை................ஆ.............அதே தான். வாழ்க்கையில் மிகக் கடுமையாக உழைத்து முன்னேறலாம். அப்படி முன்னேறி மிக உயர்ந்த நிலைக்கும் வரலாம். அதே போன்று உழைக்காமலே உதார் காட்டியும் பெரிய சீமானாக மாறலாம். அதை அடுத்து கை சுட்டிக்காட்டும் இடமெல்லாம் நம்முடையதுதான். இதில் நான் எந்தவகை என்று உங்களுக்கே மிகநன்றாகத் தெரியும். " அதுமட்டுமா.................குளிக்க மஞ்சள் அரைத்தேன் அத்தான் ..........." என்பது போல், பலதலைவர்கள் இப்படித்தான். அவர்கள் வாழ்வு வளம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமே. ................இப்படி வளம் குறையாமல் இருக்க எங்களுக்குத் தேவை .............அதேதான்.......................சொல்லவா ..................இன்னும் சொல்லவா.............
Rate this:
Share this comment
Cancel
bala chandar - madurai ,இந்தியா
21-ஜன-201421:34:31 IST Report Abuse
bala chandar வெலங்கும்டா... காலில் விழுந்து அவன் காலை வாரிடத்தானா உன் யோசனை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X