பதிவு செய்த நாள் :
கருத்துகள் (174)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

டில்லியை இரண்டு நாட்களாக ஸ்தம்பிக்க வைத்த, முதல்வர் கெஜ்ரிவால் நடத்திய முற்றுகை போராட்டத்தால், மத்திய அரசு வழிக்கு வந்தது. குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்காரர்களை விடுப்பில் அனுப்பியதை அடுத்து, கெஜ்ரி வாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, கெஜ்ரிவால், நேற்றிரவு அறிவித்தார்.

போதைப் பொருள் மற்றும் விபசார கும்பல் மீது, நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, இரண்டாவது நாளாக, தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.நேற்று முன்தினம், ஏராளமான தொண்டர்களுடன் உள்துறை அமைச்சகத்திற்கு செல்ல முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், 'ரயில் பவன்' அருகிலேயே, அமர்ந்து விட்டார். அவரோடு சேர்ந்து, சக அமைச்சர்களும் உட்கார்ந்து விட்டனர்.

இரவு முழுவதும்...:டில்லியை, கடுமையான குளிர், இப்போது, ஆட்டிப் படைக்கிறது. இந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அன்றைய தினம், இரவு முழுவதும், முதல்வரும், அமைச்சர்களும், ரோட்டோரமாகவே, கம்பளியை விரித்து, படுத்து தூங்கினர். அவருடன், ஆயிரக்கணக்கான தொண்டர்களும், இரவு முழுவதும், உடன் இருந்தனர்.நேற்று காலையில் விடிந்ததும், வீட்டில் இருந்து வந்த, காலை சிற்றுண்டியை முடித்த கெஜ்ரிவால், அந்த இடத்தை விட்டு, அகல மறுத்து விட்டார். நேரம் ஆக ஆக, டில்லியின் பிற பகுதியில் இருந்து, ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், குவிய ஆரம்பித்தனர்.தர்ணா இடத்தை நோக்கி வந்த, அவர்களது வாகனங்களை, தொலை தூரத்திலேயே, போலீசார் மடக்கி விட்டனர். ஆனாலும், அங்கிருந்து நடந்தே வந்து, ஏராளமான தொண்டர்கள் குவிய ஆரம்பித்தால், தர்ணா இடத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில், போலீசார், தடுப்புகளை போட்டு, தடை ஏற்படுத்தினர்.

வாக்குவாதம்:இந்த தடுப்புகளை தாண்டி, 'முதல்வர் இருக்கும் இடத்தின் அருகே செல்வோம்' என, வற்புறுத்திய, தொண்டர் களுக்கும்,

போலீசாருக்கும், வாக்குவாதம் அடிக்கடி நடந்தது.பிரச்னை பெரிதாக, ஆங்காங்கே கைகலப்பு ஏற்பட்டது. சாலையில் வைத்திருந்த தடுப்புகளை உடைத்து, ஆம் ஆத்மி கட்சியினர் முன்னேறினர். போலீசார் மீது, கல்வீசியும் தாக்கினர்.இதனால், போலீசாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, போலீசார், அடுத்தடுத்து, தடியடி நடத்தினர். இதில், 12 பேர் காயமடைந்தனர். தர்ணாநடந்த இடத்தில், முதல்வரின், 'மாருதி வேகன் ஆர்' கார் மட்டும், நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், அவர் உள்ளே அமர்ந்து, முக்கிய தலைவர்களுடன், ஆலோசனை நடத்தியபடி இருந்தார்.அவ்வப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார்.

அப்போது, அவர், கூறியதாவது:குடியரசு தின அணிவகுப்பு விழாக்காக, பலரும் கவலைப்படுகின்றனர். நான், பொதுமக்களுக்காக, கவலைப்படுகிறேன். மக்களுக்கு, பாதுகாப்பு இல்லாத ஊரில், குடியரசு தின விழா நடைபெற்றால் மட்டும் போதுமா?வி.வி.ஐ.பி.,க்களின், விழா தான் அது. அந்த விழாவுக்கும், என் போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. என் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், லட்சக்கணக்கான தொண்டர்களுடன், ராஜ்பாத்தில் நுழைவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அடுத்த சில நிமிடங்களில், டில்லி துணை நிலை கவர்னர், நஜீப், முதல்வர் கெஜ்ரி வாலை தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது, கெஜ்ரிவாலின் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, கவர்னர் உறுதி அளித்தார். குறிப்பாக, போதை பொருள் கடத்தலை தடுக்கச் சென்ற, டில்லி சட்ட அமைச்சர், சோம்நாத் பார்தியுடன் மோதலில் ஈடுபட்ட, பகர்கன்ச், மாளவியா நகர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் அதிகாரிகள் இருவரை, கட்டாய விடுப்பில் அனுப்புவதாக, கெஜ்ரிவாலிடம், கவர்னர் உறுதி அளித்தார்.இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே, சமரசம்ஏற்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, இந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. தன்,

Advertisement

இரண்டு நாள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக, கெஜ்ரிவால் அறிவித்தார்.

கவர்னர் உத்தரவு: கெஜ்ரிவால் கூறியதாவது:இது, மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்காக தான், நாங்கள் போராடுகிறோம். குற்றச்சாட்டுக்கு ஆளான, சில போலீசாரை, விடுப்பில் செல்ல, கவர்னர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தபட்ட போலீசாருக்கு எதிரான விசாரணை, விரைவு படுத்தப்படும் என்றும், கவர்னர் உறுதி அளித்துள்ளார். டில்லி போலீசார் மீது, மக்களுக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்தும், எங்களின் முயற்சி தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, தொடர்ந்து, 10 நாட்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த கெஜ்ரிவால், இரண்டு நாட்களுடன், போராட்டத்தை முடித்துக் கொண்டார். தலைநகர் டில்லியில், கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வந்த, பரபரப்பும், பதற்றமும், முடிவுக்கு வந்தது.

நமது டில்லி நிருபர்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (174)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajanbabu - nagercoil,இந்தியா
23-ஜன-201401:52:46 IST Report Abuse
rajanbabu கெஜ்ரிவல் ஒன்றும் புதிதாக செய்யவில்லை.மீடியா பப்ளிசிட்டி.‌பொறுத்திருந்து பாருங்கள்.உணர்ச்சிவசப்பட வேண்டம்.அன்வர் மாதிரி நண்பர்களின் கருத்து பிஜேபி க்கு நன்மை பயக்கும்.பொறுமை உடையவன் காவி உடுத்துவான்.கோபம் உடையவன் குல்லா வைப்பான்.ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Gopi - erode,இந்தியா
22-ஜன-201422:21:44 IST Report Abuse
Gopi இங்கே கருது தெரிவிப்பவர்கள் எல்லாரும் ஒன்றை மறந்து விடுகிறோம்.. கேஜ்ரிவால் போராட்ட முறை சரியா தவறா என்பதை பிறகு பார்போம்...ஆனால் அவர் போல நம்ம அம்மாவோ அல்லது தாத்தாவோ ரெண்டு நாள் டில்லியை ஸ்தம்பிக்க வைத்து இருந்தால் ஒரு மீனவன் கூட இறந்திருக்க மாட்டன் ...சும்மா கடிதம் போட்டு கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது...இந்த தைரியம் ஏன் நம்ம முதல்வர்களுக்கு இல்லை..கேஜ்ரிவால் நடத்திய போராட்டம் நடந்தவைக்கு அல்ல...நடக்க போவைக்கு ...இனிமேல் டெல்லி போலீஸ் மெத்தனமாக இருக்க முடியுமா...கதிகலங்க வேண்டாம்..? இனிமே எதாவது சதாரண மக்களின் பிரச்சினைய டில்லி போலீஸ் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா..? அவரை குறை கூறுபவர்கள் "மாற்றம் வேண்டும்" என்று வாய் மட்டும் அசைப்பவர்கள் ...செயல் என்று வந்தால் இழிபோம்.....ஷங்கர் படம் வசனம் இதற்கு பொருந்தும்..."நீங்க சட்டத்தை மீறலாம்...நான் கையில எடுக்க கூடாதா ? "
Rate this:
Share this comment
Cancel
sridhar785 - chennai,இந்தியா
22-ஜன-201420:16:13 IST Report Abuse
sridhar785 kegerawal oru dummy piece..he is also a part of congress...
Rate this:
Share this comment
Cancel
Arumugam p - Blr,இந்தியா
22-ஜன-201420:03:16 IST Report Abuse
Arumugam p இந்தியா முழுக்க இருந்து 70% மேல் இந்த தர்ணா போராட்டம் சரியில்ல என்றும். மிக பெரிய நடுநிலையாளர்கள் மத்தியில் இருந்து இந்த நேரத்தில் போராட்டம் பண்ணுவது சரியில்லை என்றும் கூறியதால் தான் கைவிட பட்டது. பெரிய அளவில அசம்பாவிதம் நிகழும் அத capitalise பன்னலாமுன்னு பார்த்தார் பிசு பிசுன்னு போயிருச்சு. Expect a Plan-B in couple of weeks.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
22-ஜன-201419:29:39 IST Report Abuse
Kumar இவரு நம்ம தலைவர விட பெரியாள இருக்காரே, அரசியல இதெல்லாம் சகஜமப்ப
Rate this:
Share this comment
Cancel
R.SREENIVASAN - CHENNAI,இந்தியா
22-ஜன-201419:16:47 IST Report Abuse
R.SREENIVASAN ிடுப்பில் சென்ற காவலர்கள் பதவி வுயர்வு கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. ஆவர்கள் தண்டிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் கெஜ்ரிவல் நன்றாக மேலும் பாடம் படிப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
22-ஜன-201419:15:33 IST Report Abuse
Somiah M ஒரு முதலமைச்சருக்கு அந்த மாநிலத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்றால் அந்த மாநிலத்திற்கு முதல் அமைச்சர் என்கிற பதவியே தேவை இல்லையே .அத்தகைய மாநிலத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகம்தான் எதற்கு ?பேசாமல் நிர்வாகத்தை காவல் துறையிடமோ ராணுவத்திடமோ ஒப்படைத்துவிடலாமே.இத்தகைய கையாலாகாத நிர்வாகத்தை பா ஜ காவும் நடத்தயுள்ளதுதான் மிகமிக ஆச்சரியமாக உள்ளது .கேஜரிவால் போன்ற உண்மையான மக்கள் பிரதிநிதிகளை மனதாரப் பாராட்டவேண்டும் .வாழ்க அவர்தம் பணி.
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
22-ஜன-201418:44:31 IST Report Abuse
Naga அப்படி போராட்டத்தை நிருத்தி விட்டார் முதல்வர் Mr. கெஜ்ரிவால், இனி கொஞ்ஜமாது போலீஸ் பயபுடுவாங்க, போராட்டத்தை நிருத்த காரணமான பிரதமர் மன்மோகன் சிங்கைய் பாராடகடியாகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஜன-201417:59:22 IST Report Abuse
K.Sugavanam கெஜ்ரிவாலிடம் மத்திய அரசு பணிந்தது என்றால் போலீஸ் துறை டில்லி அரசு வசம் அளிக்க படவில்லையே.தினமலர் ஜால்ரா ஓங்கி ஒலிக்கிறது.கேஜ்ரிவால் தலை தப்பினால் போதும் என்று முடித்துக்கொண்ட மாதிரி அல்லவா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Raju Ap - Bangalore,இந்தியா
22-ஜன-201416:57:14 IST Report Abuse
Raju Ap பாபம் அந்த போலீஸ்கரங்க வேலை யை ஒழுங்கா பண்ணினது தப்பா. அப்ப நம்ம பின்னால ஒரு கூட்டம் இருந்தா என்ன வேணாலும் பண்ண முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X