'சுனந்தா கொலை செய்யப்பட்டாரா?'மாஜிஸ்திரேட் கேள்வி

Updated : ஜன 22, 2014 | Added : ஜன 22, 2014 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி :'மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி, சுனந்தா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்' என, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மத்திய மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சசி தரூரின் மனைவி சுனந்தா, 52, சமீபத்தில், டில்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து
சுனந்தா கொலை,மாஜிஸ்திரேட் கேள்வி,Sunanda Pushkar, died of poisoning, SDM,police, probe murder, suicide angles

புதுடில்லி :'மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி, சுனந்தா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்' என, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சசி தரூரின் மனைவி சுனந்தா, 52, சமீபத்தில், டில்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இவரின் மரணம் குறித்து, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், அலோக் சர்மா விசாரித்து வருகிறார். சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று, இவரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், டில்லி போலீசாருக்கு, அலோக் சர்மா அனுப்பியுள்ள அறிக்கை: சுனந்தாவின் மரணம், அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிட்டதால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் மட்டும் விசாரிக்க கூடாது. அவர், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும். 'சுனந்தா கொலை செய்யப்படவில்லை' என, அவரின் குடும்பத்தினர் தெரிவித்தாலும், அதை கருத்தில் கொள்ளாமல், அந்த அடிப்படையிலும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.s.kumar - chennai,இந்தியா
22-ஜன-201417:58:05 IST Report Abuse
m.s.kumar இது சசிக்கு மட்டுமே வெளிச்சம்
Rate this:
Cancel
R.GNANAPRAKASAM PANANGUDAM - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜன-201417:04:40 IST Report Abuse
R.GNANAPRAKASAM PANANGUDAM ராகுல்தான் பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்கிறாரே
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
22-ஜன-201412:18:58 IST Report Abuse
rasaa காங்கிரசும், குறிப்பாக ஷிண்டே உல் துறை மந்திரியாக இருக்கும் பட்சத்தில் எந்த அரசியல்வாதியும் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம். CBI யே கூண்டில் அடைத்தவர்களுக்கு இந்த காவல்துறை ஒரு ஜூஜூபி. ஒரே கண்டிசன் குற்றம் செய்தவர்கள் அவருடன் மும்பை நட்சத்திரங்களுடன் நாட்டியம் ஆடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X