கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், சுமை
தூக்கும் பணிக்கு தொழிலாளர்கள் தேவைப்படுவதால், பணியில் சேர விருப்பம்
உள்ளவர்கள் வரும், 28 மற்றும், 31ம் தேதிகளில் நடக்கும் நேர்முக தேர்வில்
கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து கலெக்டர் ராஜேஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிருஷ்ணகிரி
கிடங்கில் சுமை தூக்கும் பணிக்கு, 20 தொழிலாளர்கள் புதியதாக தேர்வு
செய்யப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வு, கிருஷ்ணகிரி, சென்னை புற
வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்
அலுவலகத்தில் வரும், 28ம் தேதி மற்றும், 31ம் தேதி ஆகிய இரு நாட்கள்
நடக்கிறது.
இந்த பணியில் சேர விரும்புவோர், 18 வயதுக்கு மேல், 45
வயதுக்குள் இருக்க வேண்டும். நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டும். இரண்டு
பாஸ்போர்ட் அளவிலான போட்டோ, ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் நகல்கள், மொபைல் போன்
எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல
மேலாளர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் நேர்முகத் தேர்வில் நேரில்
கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படுபவர்கள் உடனடியாக, கிருஷ்ணகிரியில்
உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பணிபுரிய
அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விதிகளின்படி,
கிடங்களில் மூட்டைகள் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கான கூலி வழங்கப்படும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.