அமைச்சருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள்: சேலம் அ.தி.மு.க.,வில் கடும் சலசலப்பு

Added : ஜன 22, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
அமைச்சருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள்: சேலம் அ.தி.மு.க.,வில் கடும் சலசலப்பு

தனி ராஜாங்கம் நடத்தும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், இடைப்பாடி பழனிசாமி குறித்து, முதல்வரிடம் புகார்கள் கொடுக்க, சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர். அமைச்சருடன் இருக்கும், ஒரு சில ஆதர வாளர்களின் போக்கால், ஒட்டுமொத்த, எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்படுவது கண்டு, சேலம் மாவட்ட அ.தி.மு.க.,வினர் கொதிப்படைந்துள்ளனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலரும், தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சருமான, இடைப்பாடி பழனிசாமி, இரண்டரை ஆண்டுகளாக, அமைச்சர் பதவியில் நீடிக்கிறார். ஆரம்பத்தில், அவருடன் இணக்கமாக இருந்த, எம்.எல்.ஏ.,க்கள், தற்போது அவரிடமிருந்து ஒதுங்கி உள்ளனர்.


சிலரின் ஆதிக்கம்:

தன்னை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்பும் அமைச்சர் தரப்பு, நிர்வாகிகளையோ, தொண்டர்களையோ, எம்.எல்.ஏ.,க்களையோ உடன் சேர்த்துக் கொள்வது இல்லை. அமைச்சருடன் இருக்கும் சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அ.தி.மு.க.,வில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்தால், மீண்டும் நமக்கே வம்பாக திரும்பி வரும் என்பதால், உள்ளாட்சி, கூட்டுறவு என, பெரும்பாலான பதவிகளில், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அமைச்சர் மறைமுக வாய்ப்பு கொடுத்து உள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இதனால், அ.தி.மு.க.,வினர் பலர், தி.மு.க., --- பா.ம.க.,- - பா.ஜ., போன்ற கட்சிகளை நாடி செல்ல துவங்கியுள்ளனர். ஆளும் கட்சிக்காரர்களாக இருந்தும், தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என, அவர்கள் புலம்புகின்றனர்.


அழைப்பு இல்லை:

அதே நிலைதான், தற்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம், 28ம் தேதி, ஏற்காட்டில் நடந்த மலர் கண்காட்சி துவக்க விழாவில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ., சரோஜாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில், அமைச்சரின் தூண்டுதல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், ஆத்தூர் எம்.எல்.ஏ., மாதேஸ்வரனை, ஆரம்பத்தில் இருந்தே, அமைச்சர் ஓரங்கட்டி வந்தார். அங்கு நடக்கும் பெரும்பாலான விழாக்களில், எம்.எல்.ஏ.,வை கண்டு கொள்வதில்லை.


கட்சி பதவி பறிப்பு:

தே.மு.தி.க., -- எம்.எல்.ஏ.,க்களின் மனநிலை எப்படி உள்ளதோ, அதுபோன்ற நிலையில் இருந்த, ஆத்தூர், எம்.எல்.ஏ., அரசு, 'லேப்-டாப்' வழங்கும் விழாவில், அமைச்சரின் நடவடிக்கை பற்றி மக்களிடையே புட்டு புட்டு வைத்தார். தாழ்த்தப்பட்டவன் என்பதால், தன்னை புறக்கணிப்பதாக குமுறினார். இந்நிலையில், அமைச்சர் மூலம் முதல்வர் கவனத்துக்கு சென்ற தகவலால், மாதேஸ்வரனிடம் இருந்த, எம்.ஜி.ஆர்., மன்ற பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி எம்.எல்.ஏ., விஜயலட்சுமி பழனிசாமி, வீரபாண்டி எம்.எல்.ஏ., செல்வம், சேலம் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோரும், அமைச்சருக்கு எதிராக களமிறங்கி உள்ளனர். அவர்கள், அமைச்சரின் நடவடிக்கை குறித்து முதல்வரிடம் புகார் தெரிவிக்க, தங்களுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர்.


விசாரணை நடத்த...:

கோடநாட்டில் தங்கியிருக்கும் முதல்வரும், இடைப்பாடி பழனிசாமி, மாதேஸ்வரன் உட்பட, சிலரிடம் ஆத்தூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மோதல் விவகாரம், வரும் லோக்சபா தேர்தலில், சேலம், கள்ளக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, கண்டிப்பான நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், சேலத்தில், அ.தி.மு.க.,வின் இமேஜ் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை என, கட்சியினர் கூறி வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj - doha  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201419:52:53 IST Report Abuse
raj ஓரு தொகுதி் காலி
Rate this:
Share this comment
Cancel
praveen - chennai  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201406:20:25 IST Report Abuse
praveen poi........
Rate this:
Share this comment
Cancel
TIRUVANNAMALAI Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201405:34:45 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran இடைப்பாடி அமைசசர் இடைக்கால அமைச்சர்தான் இதுவும் கடந்து போகும். அனைத்து அமைச்சர்களும் அமமா ஆட்சியில் மாறுதலுக்குட்பட்டவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X