பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை: ராகுல்

Updated : ஜன 22, 2014 | Added : ஜன 22, 2014 | கருத்துகள் (12)
Share
Advertisement
போபால்: போபாலில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் கூட்டத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டபோது, அவரிடம் பெண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராகுல் அளித்த பதில்கள் வருமாறு:* என்னுடைய குடும்பத்தில் தந்தைதான் ( ராஜிவ்) தலைவராக இருந்தார். ஆனால் நான் சிறுவயதாக இருந்தபோது, என்னுடைய பாட்டிதான் ( இந்திரா) குடும்பத்தலைவராக இருந்தார். எனவே ஆணும் பெண்ணும் சமம்
பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை: ராகுல்

போபால்: போபாலில் நடைபெற்ற மகிளா காங்கிரஸ் கூட்டத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கலந்து கொண்டபோது, அவரிடம் பெண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராகுல் அளித்த பதில்கள் வருமாறு:
* என்னுடைய குடும்பத்தில் தந்தைதான் ( ராஜிவ்) தலைவராக இருந்தார். ஆனால் நான் சிறுவயதாக இருந்தபோது, என்னுடைய பாட்டிதான் ( இந்திரா) குடும்பத்தலைவராக இருந்தார். எனவே ஆணும் பெண்ணும் சமம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே உரிய சமத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
* நாட்டின் பலமே பெண்கள்தான்.
* பெண்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள்; அவர்கள் உலகின் தன்மையையே மாற்றிக் காட்டுவார்கள்.
* நமது தேர்தல் அறிக்கையில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவையே அதில் இடம் பெறும்.


வல்லரசாக வழி:

* அவள் ஒரு பெண்; அதனால் அவளால் இதைச் செய்ய முடியாது என்று சிலர் நினைக்கலாம்; இந்த மனப்போக்கு மாற வேண்டும்..
* பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து வி்ட்டால், பின்னர் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; அவர்கள் எதையும் சாதித்து காட்டுவார்கள்.
* பெண்களுக்கு அதிகாரம் வழ்ஙகும் வரை, இந்தியா வல்லரசாக முடியாது.
* பெண்களிடையே குறையாத திறமை இருக்கிறது.
* பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை; அவர்களுடைய உரிமைகளை உரிய காலத்தில் கொடுத்தால் போதும்.
* அமேதியில் ஒரு பெண்ணை, ஒருவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்; அதை தடுத்த நான், ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டேன். அந்த பெண் சமைக்கவில்லை என்று கூறினார். அந்த நபருக்கு சமத்துவம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
* சில நேரங்களில் யாரோ உங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்வீர்கள். அந்த உணர்வை அகற்றியாக வேண்டும்.


கொடுமைகளை எதிர்க்க வேண்டும்:

* பெண்கள் பலவீனமானவர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் மீது வன்கொடுமை நடத்தப்படுகிறது. அந்த வன்முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். அந்த மனப்போக்கையும் மாற்ற வேண்டும்.
* என்னுடைய பாட்டி, தாயிடமிருந்து நியை கற்றிருக்கிறேன்; என்னுடைய தொகுதி பெண்களிடமிருந்தும் அதிகம் அறிந்திருக்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தால், அவர்கள் எதையும் செய்வார்கள் என்பதே அது.
* ஒவ்வொரு பெண்ணும் இந்த நாட்டின் சொத்து; அவர்களுக்கு உரிய வாய்ப்பை அளிக்க வேண்டும்.
* நமது தேர்தல் அறிக்கையில், அர்த்தமுள்ள யோசனைகளை, கொள்கை கருத்துக்களைத் தெரிவிப்போம். அடுத்து வரும் அரசு அதை நிறைவேற்ற உழைக்கட்டும்.
* சமையல எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
* காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது.
* பார்லிமென்டில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது; நிச்சயம் வெற்றி பெறுவோம். அதை அப்படியே விட்டுவிட மாட்டோம்.
இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahadevijayakumar - cliffwood nj,யூ.எஸ்.ஏ
23-ஜன-201401:41:54 IST Report Abuse
mahadevijayakumar உரிமைகள் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு தன்மையை வழங்கிவிடாது. தேசதந்தை காந்தி எதிர்பார்த்த பாதுகாப்பான சூழ்நிலையும் பெண்களுக்கு அவசியம்.
Rate this:
Cancel
Parthiban S - arumuganeri,இந்தியா
22-ஜன-201422:26:32 IST Report Abuse
Parthiban S "எந்த 'டிவி'க்காக தயாரிக்கப்பட்ட 'ஷோ' இது..?"
Rate this:
Cancel
senthilnathan - ramanathapuram,இந்தியா
22-ஜன-201419:11:48 IST Report Abuse
senthilnathan ஆண்கள் எல்லோரையும் நாடு கடத்தி விடுவோமா ராகுல்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X