சென்னை: பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் (91), உடலநலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அழியா புகழ் பெற்றவர் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ்.அவரின் இறப்பு நாட்டின் திரை உலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு, இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும் தனது முதல் தெலுங்கு படத்தில் நாகேஸ்வரராவுடன் நடித்ததையும் நினைவு கூர்ந்தார்.