காசியாபாத்: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் (45), மத்திய அரசுக்கெதிராக இரண்டுநாள் டில்லியில் தர்ணாவில் ஈடுபட்டார். சாலையில் கடுங்குளிரில் படுத்து உறங்கி தர்ணாவில் ஈடுபட்டதால், உடல்சுகவீனம் அடைந்தார். இதையடுத்து காசியாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலைஅனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான வைரஸ் காய்ச்சல் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement