தெலுங்கானா மசோதாவுக்கு கெடு முடிகிறது: மத்திய அரசு திட்டப்படி நிறைவேற்றுமா?

Updated : ஜன 23, 2014 | Added : ஜன 23, 2014 | கருத்துகள் (2) | |
Advertisement
வரப்போகும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், நிறைவேற்றப்பட, மற்ற அனைத்து மசோதாக்களும், தயாராகி வரும் நிலையில், முக்கியமான தெலுங்கானா மசோதாவின் நிலை, இன்னும் அந்தரத்தில், தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், அந்த மசோதா நிறைவேறாமல், மீண்டும் தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம், தோன்ற ஆரம்பித்துள்ளது.கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, வழி வகை
தெலுங்கானா மசோதாவுக்கு கெடு முடிகிறது:  மத்திய அரசு திட்டப்படி நிறைவேற்றுமா?

வரப்போகும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், நிறைவேற்றப்பட, மற்ற அனைத்து மசோதாக்களும், தயாராகி வரும் நிலையில், முக்கியமான தெலுங்கானா மசோதாவின் நிலை, இன்னும் அந்தரத்தில், தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், அந்த மசோதா நிறைவேறாமல், மீண்டும் தள்ளிப்போகுமோ என்ற சந்தேகம், தோன்ற ஆரம்பித்துள்ளது.

கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, வழி வகை செய்யும் மசோதாவை, கொண்டு வந்து நிறைவேற்ற, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில், இறங்கி வருகிறது. வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, அது, மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, ஜனாதிபதிக்கும், அனுப்பி வைக்கப்பட்டது.இந்த மசோதா மீதான கருத்தை, ஜன., 23க்குள் தெரிவிக்கும்படி, ஆந்திர மாநில அரசை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டிருந்தார்.
ஆந்திர மாநில சட்டசபை, தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பித்த நாட்களில் இருந்து, பாதி நாட்களுக்கும் மேல், இந்த மசோதா காரணமாக, சபையில் அமளி ஏற்பட்டு, சட்டசபை ஸ்தம்பித்தபடி இருந்தது. ஆயினும், சட்டசபைக் கூட்டத்தொடர், இன்னும் முடிவடையவில்லை. இருந்த போதும், 'இம்மசோதா பற்றி முழு விவாதம் நடத்த, நான்குவார அவகாசம் தேவை' என்று, ஆந்திர அரசு, ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.இது, தெலுங்கானா பிரிவினை குறித்து இறுதி முடிவை எடுக்காமல் இழுத்தடிக்கும் அணுகுமுறை.

ஆந்திர சட்டசபை, முடிவு என்ன என்று தெரியாத நிலையில், தற்போது, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரின், அடுத்த பகுதி, பிப்., 5ல் துவங்கலாம் என்ற பேச்சு உள்ளது.தெலுங்கானா வரைவு மசோதாவில், அதிக திருத்தம் செய்யப்பட வேண்டியிருப்பதாக, கூறும் ஆந்திர அரசு செயலை, காலதாமதத்திற்கான முயற்சி என்று மத்திய அரசு கருதுகிறது.


ஜனாதிபதி முடிவு எப்படி?

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கால அவகாசம் கேட்டு அனுப்பப்பட்ட கோரிக்கை, ஜனாதிபதி பிரணாப் பார்வையில் உள்ளது; அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது. கால அவகாசம் அளிக்கும் உரிமை, ஜனாதிபதிக்கே உள்ளது என்பதால், இவ்விஷயத்தில், பிரணாப் முகர்ஜி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது, தெரியவில்லை.எனவே, ஜனாதிபதி, கூடுதல் கால அவகாசம் அளிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை வைத்து, இவ்விஷயத்தில், மத்திய அரசு, அடுத்த கட்ட நடவடிக்கையை, மேற்கொள்ளும்.


சட்டமாக்கலாம்:

தெலுங்கானா உருவாக்கத்திற்கு, ஆந்திர சட்டசபை, ஒப்புதல் தெரிவிக்காமலே போனாலும்கூட, தெலுங்கானா மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றி, மத்திய அரசு, சட்டமாக்கலாம். அதே வேளையில், மத்தியில், தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு, இதே மசோதாவை, மீண்டும் கையில் எடுத்து, தெலுங்கானா அவசியம் இல்லை என கருதினால், இப்போது எடுக்கும் முடிவு, அப்படியே தலைகீழாக திரும்பவும், வாய்ப்புள்ளது.எனவே தான், முடிந்த வரையில், காலதாமதம் ஏற்படுத்தும் முயற்சிகளை, ஆந்திர அரசு எடுப்பதாக கூறப்படுகிறது.அந்த முடிவு நிறைவேறும் பட்சத்தில், விரைவில் வர உள்ள லோக்சபா தேர்தலில், ஆந்திராவில், கணிசமான, 'சீட்'களை, காங்கிரஸ் இழக்க நேரிடும். அதனால், ஓரிரு நாட்களில் தெலுங்கானா குறித்த யுக்திகளை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தெலுங்கானா தனி மாநில மசோதாவைமுழுமையாக எதிர்க்கிறேன். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே, அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்..
கிரண்குமார் ரெட்டி - காங்., ஆந்திர முதல்வர்

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TIRUVANNAMALAI Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
23-ஜன-201404:19:15 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran தள்ளிப் போட வழி தேடப்படும்
Rate this:
Cancel
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
23-ஜன-201403:30:34 IST Report Abuse
தமிழ்நிலா அன்னை சோனியா அவர்களுக்கு கோவில் அமைத்து மூட நம்பிக்கையை வளர்க்கும் செயலை கண்டித்து, தனி தெலுங்கான தரக்கூடாது என்று அன்னை சோனியா பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு உத்தரவு போடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X