விஜயகாந்த் அழைப்பு கடிதத்திற்கு அமோக வரவேற்பு: தே.மு.தி.க., மேலிடம் குஷியோ குஷி

Updated : ஜன 24, 2014 | Added : ஜன 23, 2014 | கருத்துகள் (63)
Share
Advertisement
விஜயகாந்த் அழைப்பு கடிதத்திற்கு அமோக வரவேற்பு: தே.மு.தி.க., மேலிடம் குஷியோ குஷி

தி.மு.க., சார்பில் மாநாடு அறிவிக்கப்படும் போது, அதில் பங்கேற்க வரும்படி, கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை மற்றும் கடிதம் மூலம் அழைப்பு விடுப்பது, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் வழக்கம். தற்போது, அதே பார்முலாவை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் கையில் எடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பிப்., 2ம் தேதி, தே.மு.தி.க., சார்பில் மாநாடு நடக்கிறது. இதில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்க, விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதையொட்டி, தற்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அவர் கூறியுள்ளதாவது:கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், எனக்கு விருப்பமில்லை என்றாலும், உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தோம்.அதனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. லஞ்சத்திலும், ஊழலிலும் திளைப்பவர்கள் எல்லாம், நாடாளும் கனவுடன் வலம் வருகின்றனர். அவர்கள் எண்ணத்தை முறியடிக்கும் வகையில், அவர்களை தேர்தலில் வீழ்த்தவேண்டும்.
நன்றியை மறந்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில், தே.மு.தி.க., ஊழல் எதிர்ப்பு மாநாட்டில், நீங்கள் மட்டுமின்றி, உங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தக் கடிதம், தமிழகம் முழுவதும் உள்ள, தே.மு.தி.க., கட்சியின், இரண்டு லட்சம் கிளை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் எழுதிய கடிதத்திற்கு, தே.மு.தி.க., தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பதில் கடிதம் அனுப்பி வருகின்றனர். நாள்தோறும், தபால், கூரியர் மூலம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கும், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கும் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.
அந்தக் கடிதங்களில், 'கடந்த முறையை போல, கூட்டணி தொடர்பாக தவறான முடிவெடுக்காமல், சரியான முடிவெடுக்க வேண்டும். உண்மையாகவே ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், சரியான கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதில், கடிதங்களால், தே.மு.தி.க., தலைமை மகிழ்ச்சி அடைந்துள்ளது.

'சீட்' கேட்க பணமா? நிர்வாகிகள் கொதிப்பு:தே.மு.தி.க., மாவட்ட செயலர் ஒருவர் கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளுக்கும், தே.மு.தி.க.,வினர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கள் கட்சி, எந்த கூட்டணியில் இணைந்தாலும், அதிகபட்சமாக, 14 'சீட்'களே கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையில், அனைத்து தொகுதி களுக்கும், ஏன் விருப்ப மனு கட்டணம் வசூலிக்க வேண்டும்? கூட்டணி முடிவானதும், ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு மட்டும் கட்டணம் வசூலித்தால் போதாதா? அடுத்த மாதம், ஊழல் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட, சீட் வழங்க கட்டணம் வசூலிக்கின்றனர்.பணத்தை செலவழித்து, சீட் பெறும் நபர், பதவியேற்றபின் அதை சம்பாதிக்க, ஊழலை கையில் எடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஒவ்வொரு தொகுதிக்கும், 10 முதல், 15 பேர் வரை விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும் என, மாவட்ட செயலர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஒரு கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிப்., 2ம் தேதி ஊழல் ஒழிப்பு மாநாடு நடக்கவுள்ள நிலையில், விருப்ப மனு கட்டணம் செலுத்து வதா அல்லது மாநாட்டு செலவுகளை கவனிப்பதா என்று தெரியவில்லை. உண்மையிலேயே நாங்கள் படும் கஷ்டம், கட்சி தலைமைக்கு தெரியவில்லை.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
23-ஜன-201422:21:00 IST Report Abuse
PRAKASH.P கோல கொலையாம் முந்திரியாம், நரியும் நரியும் சேர்ந்துசாம்.... ஹையா, ஜாலி .
Rate this:
Share this comment
Cancel
subbiah - chennai,இந்தியா
23-ஜன-201420:27:58 IST Report Abuse
subbiah captain இந்த தடவை BJP மேல ஒரு கண்ணு வச்சிருக்கார் அதலால் பிஜேபி மற்றும் மதிமுக கூட்டணி நிச்சயம் ..
Rate this:
Share this comment
Cancel
red - brisbane,ஆஸ்திரேலியா
23-ஜன-201420:16:10 IST Report Abuse
red விஜயகாந்த் நல்ல முடிவோட வருவாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X