சென்னை : லோக்சபா தேர்தலில், தி.மு.க., உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வரும் விஜயகாந்திற்கு, கருணாநிதி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நீண்ட காலமாக:
சென்னையில், நேற்று கருணாநிதி அளித்த பேட்டி:சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை, குறைத்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, மகிழ்ச்சி அடைகிறேன். தூக்கு தண்டனை கூடவே கூடாது என, இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் கூறி வருகிறேன். அது இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ராஜிவ் கொலை வழக்கில், சிக்கி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இருக்கும் மூன்று பேருக்கும், இந்த தண்டனை பொருந்தும் வகையில், முடிவு வெளிவந்தால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வுடன், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என, பொதுமக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தை, ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்கப் போவது இல்லை; தே.மு.தி.க.,விடம் ஆதரவு கேட்பது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.
பேச்சுவார்த்தை:
விஜயகாந்த் தலைமையில் உள்ள, தே.மு.தி.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் இடையே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடந்தால், ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,விற்கு விட்டுக் கொடுப்பது, லோக்சபா தேர்தலில் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்.தே.மு.தி.க.,விற்கு எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித்திருக்கிறோம்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE