பொது செய்தி

இந்தியா

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி அதிரடி

Updated : ஜன 23, 2014 | Added : ஜன 23, 2014 | கருத்துகள் (60)
Share
Advertisement
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி அதிரடி

மும்பை : "கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்து கரன்சிகளும், திரும்ப பெறப்படும்," என, ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி, அதன் வலைதளத்தில் தெரிவித்துள்ள விவரம்:கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கரன்சிகள், திரும்பப் பெறப்படும். இது குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். இந்த கரன்சிகளை, எளிதில் கண்டறியலாம். ஏனெனில், 2005ம் ஆண்டிற்கு முன், வெளியிடப்பட்ட கரன்சிகளில், ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது. இந்த கரன்சிகளை, அனைத்து வங்கிகளும், வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல் திரும்பப் பெறும்.
வரும், ஜூலை, 1ம் தேதி முதல், வங்கி கணக்கு இல்லாதோர், 10க்கு மேற்பட்ட எண்ணிக்கையில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் கரன்சிகளை மாற்ற விரும்பினால், அடையாளம் மற்றும் வசிப்பிட சான்றை, வங்கிக்கு அளிக்க வேண்டும்.அதே சமயம், 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட கரன்சிகளும், வழக்கம் போல் செல்லுபடியாகும். இது குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. கரன்சியை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சிகள் அனைத்தும், ஆண்டு அச்சிடப்பட்டவையாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி விரும்புகிறது. 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, 500 ரூபாய் கரன்சிகள், நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ளன.அதன் பின், மகாத்மா காந்தி படத்துடன், ஒரே வரிசையில் கரன்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒரே சீரான வடிவமைப்பில், இது போன்ற கரன்சிகள் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

*மக்கள் பீதி அடைய வேண்டாம்.
*ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கரன்சிகள் செல்லுபடியாகும்.
*வரும், ஏப்., 1 முதல் அனைத்து வங்கிகளிலும் வசதி.

Advertisement


வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
23-ஜன-201423:23:44 IST Report Abuse
PRAKASH.P எங்கயோ எதுவோ தப்பா தெரியுது .... மக்களே விளிசுக்கோங்க .... கடைசியில் புது பணம் அச்சடிக்க நம்ம தலயில் கை வைப்பாங்க . கடைசி எட்டு வரசதுல அடிச்ச நோட்டு மட்டும் எப்படி புழக்கத்துக்கு பத்தும் . இது என்னவோ சிதம்பரம் ரகசியம் மாதிரி தெரியுது . அடுத்த ஆட்சியில் புது குழப்பத்தை உண்டு பண்ண இப்பவே ரெடி ஆயிட்டங்கலொ ?
Rate this:
Cancel
Soma Sundaram - Philadelphia,யூ.எஸ்.ஏ
23-ஜன-201423:01:33 IST Report Abuse
Soma Sundaram மக்களே தேர்தலுக்கு யாரவது பணம் குடுத்தா அது 2005 முன்னாடி அடிச்சதாணு இல்லையானு பார்த்து வாங்குங்க...
Rate this:
Cancel
umarfarook - dindigul,இந்தியா
23-ஜன-201421:32:48 IST Report Abuse
umarfarook என்னதான் மன்மோகன் சிங்கை செல்லாக்காசுன்னு சொன்னாலும் மன்மோகன் ஆட்சியில் வந்த பணம் மட்டும் தானே இனி செல்லும்னு சொல்லிருச்சு ரிசர்வ் வங்கி.புது நோட்டா உண்டியலில் சேர்த்து வைத்த பழைய நோட்டுக்கள் செல்லாதோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X