பதவியில் இருப்பவர்களுக்கே மீண்டும் வாய்ப்பா? அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு

Updated : ஜன 25, 2014 | Added : ஜன 24, 2014 | கருத்துகள் (36)
Share
Advertisement
அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல், அந்தக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட உள்ள, ஆறுஎம்.பி.,க்களில், நான்கு பேர், அ.தி.மு.க., சார்பில், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்பாளர் பட்டி யலை, அ.தி.மு.க., மேலிடம் நேற்று வெளியிட்டது.அதில், இடம் பெற்றுள்ளவர்களில்,
பதவியில் இருப்பவர்களுக்கே மீண்டும் வாய்ப்பா? அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு

அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல், அந்தக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட உள்ள, ஆறுஎம்.பி.,க்களில், நான்கு பேர், அ.தி.மு.க., சார்பில், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்பாளர் பட்டி யலை, அ.தி.மு.க., மேலிடம் நேற்று வெளியிட்டது.அதில், இடம் பெற்றுள்ளவர்களில், விஜிலா சத்தியானந்த், திருநெல்வேலி மாநகர மேயராகவும், சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாநகர மேயராகவும் பதவி வகிக்கின்றனர். அத்துடன், கட்சியில் மகளிர் அணி செயலர் பொறுப்பிலும் உள்ளனர்.இவர்கள் தவிரஅறிவிக்கப்பட்டு உள்ள, இரண்டு வேட்பாளர்களில், ஒருவரான, சின்னத்துரை, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக தற்போது பதவி வகிக்கிறார். மற்றொருவரான, முத்துக்கருப்பன்.திருநெல்வேலி மாநகர் மாவட்ட,அ.தி.மு.க., செயலராக உள்ளார்.இதன்மூலம், ராஜ்யசபா தேர்தலில், இரண்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, எம்.பி.,யாகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போது மேயர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் இருப்போருக்கு, பதவி வழங்கியது, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அ.தி.மு.க.,நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:மேயர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவராக இருக்கும் மூன்று பேருக்கு பதவி வழங்கிய தன் மூலம், அந்தப் பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இதனால், அரசுக்கும், கட்சியினருக்கும் வீண் செலவுதான் ஏற்படும். தேவையின்றி தேர்தல் நடத்த வேண்டிய சூழலை, கட்சித் தலைமை ஏற்படுத்துகிறது.கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த, தங்களின் சொத்துக்களை இழந்த, இதுவரை பெரிய அளவிலான பதவி எதையும் பெறாத மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் முதுபெரும்நிர்வாகிகள் பலர், ராஜ்யசபா தேர்தலில், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்த்தனர்.ஆனால், அரசு பதவிகளில் இருப்போருக்கு, ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சரியல்ல. இது, கட்சியில் உண்மையாக உழைத்தவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பதவி யில் உள்ளவர்களுக்கே, மீண்டும், மீண்டும் பதவி வழங்கப்படுவது அதிர்ச்சியாகவும் உள்ளது.கட்சியில் வேறு, தகுதியான நபர்களே இல்லாததுபோல், இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சி மேலிடத்தின் இந்தச் செயல், தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துமே அன்றி, கட்சி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்காது.கடந்த ராஜ்யசபா தேர்தலின் போது, வட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனால், இம்முறை தென்மாவட்டத்தினருக்கு வாய்ப்பு என்பதைக் கூட, பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ஆனால், பதவியில் இருப்பவர்களுக்கே, மீண்டும் பதவி தருவதுதான் சரியல்ல.இவ்வாறு, நிர்வாகிகள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
24-ஜன-201422:23:16 IST Report Abuse
Venki Raja ஐயோ இப்பவே கண்ண கட்டுதே முடியலை இப்டியெல்லாம் முடிவு எடுத்தால் நான் இந்தே நாட்டை விட்டு போவதை தவிர வேற வழியே இல்லை
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
24-ஜன-201422:17:48 IST Report Abuse
PRAKASH.P 10000 ....20000 .....30000.....40000...50000....60000... ஒரு தரம் , இரண்டு தரம், மூன்று தரம் ... மாமா பிஸ்கோத்து ....
Rate this:
Cancel
sankar - trichy,இந்தியா
24-ஜன-201417:45:05 IST Report Abuse
sankar விசயரஜ் ஏன் கட்ச தீவில் பொடி இட கூடாது ? மலேசியாவில் போட்டி போடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X